20வருஷமா விற்பனையிலிருந்த பல்சரை வெளியேற்றிய பஜாஜ்! ஆண்டு முடிவுல இப்படி ஒரு முடிவா! யாராலுமே நம்ப முடியல!

பஜாஜ் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த பல்சர் 150 பைக் மாடலை விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு குறித்தும், இதன் வெளியேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக வேறு எந்த பைக்கைக் களமிறக்கியிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பல்சர் பைக் மாடலில் கிடைத்துக் கொண்டிருக்கும் தேர்வுகளை விரிவாக்கம் செய்யும் விதமாக அண்மையில் பஜாஜ் நிறுவனம் பல்சர் பி150 எனும் புதிய மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக் அறிமுகமாகி சில நாட்களே ஆகின்ற நிலையில் அந்நிறுவனம் ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த ஓர் பிரபல மாடலையே நிறுவனம் தற்போது சந்தையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது.

பல்சர் 150

பல்சர் 150 மாடலையே அது விற்பனையில் இருந்து அகற்றி உள்ளது. இதன் வெளியேற்றத்திற்கு புதிய பல்சர் பி150 மாடலின் வருகையே காரணம் என கூறப்படுகின்றது. ஆகையால், பஜாஜ் நிறுவனம் முன்கூட்டியே இந்த திட்டத்திற்காகவே பல்சர் பி150 மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் என யூகிக்க முடிகின்றது. அதாவது, பல்சர் 150-ஐ ரீ-பிளேஸ் செய்யும் விதமாகவே புதிய பல்சர் பி150-ஐ பஜாஜ் இந்தியா இருசக்கர வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

விற்பனையில் இருந்து அகற்றப்பட்டிருப்பது முன்னணி பல்சர் மாடல்களில் ஒன்றாகும். இரண்டு தசாப்தங்களுக்கும் (20 ஆண்டுகளுக்கும்) மேலாக இந்தியாவில் விற்பனையில் இருந்த பெருமை இந்த இருசக்கர வாகனத்திற்கு உண்டு. ஆகையால், இதை வெளியேற்றும் முடிவு பஜாஜிற்கு லேசான வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் நிறுவனம் இதுபோன்று பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்த பல்சர் பைக் மாடல்களை வெளியேற்றுவது முதல் முறை அல்ல.

பல்சர் 150

இதற்கு முன்னதாக நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் பல்சர் 180 மாடலையும், 2021 இல் பல்சர் 220 மாடலின் உற்பத்தியையும் நிறுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது பல்சர் 150 விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 14 பிஎஸ் மற்றும் 13.25 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் நரியின் கண்களைப் போன்ற ஹெட்லேம்ப், கார்பன் ஃபைபர் அக்செண்டுகள், டேக்கர் எட்ஜட் கிராஃபிக்குகள், 17 அங்குல வீல்கள், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை என எக்கசக்க அம்சங்களை இந்த பைக்கில் பஜாஜ் நிறுவனம் வழங்கியது.

இத்தகைய பைக்கையே பஜாஜ் நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. இதன் வெளியேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் பல்சர் பி150-ம் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக இதன் ஸ்டைல் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது. ஷார்ப்பான முன் பக்கம், கட்டுமஸ்தான ஃப்யூவல் டேங்க், கவர்ச்சியான பின் பகுதி மற்றும் சூப்பரான அலாய் வீல்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த பைக்கின் எக்சாஸ்ட் செட்-அப் வாகனத்தின் அடிப்பகுதியில் இடம் பெறும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு புதுமையான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 149.68 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரை பஜாஜ் நிறுவனம் பி150 பைக்கில் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 14.5 பிஎஸ் பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், இன்ஃபினிட்டி திரை, யுஎஸ்பி சாக்கெட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போன்ற பல்வேறு நவீன கால அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த பைக்கை சிங்கிள் சேனல் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் டிஸ்க் பிரேக் என இரு விதமான தேர்வுகளில் பஜாஜ் விற்பனைக்கு வழங்குகின்றது. இரண்டும் தனித்துவமான இருக்கை அமைப்பைக் கொண்டிருக்கும். சிங்கிள் சேனல் டிஸ்க் பிரேக் தேர்வில் ஒற்றை துண்டு அமைப்பு உடைய இருக்கையும், டூயல் சேனல் டிஸ்க் பிரேக் தேர்வில் ஸ்பிளிட் ரக இருக்கை அமைப்பும் வழங்கப்பட்டிருக்கும். இதுவே இரண்டிற்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஆகும்.

ஸ்பிளிட் ரக இருக்கை அமைப்பு டூயல் டிஸ்க் பிரேக் தேர்விற்கு அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் புதிய பல்சர் பி150ஐ பஜாஜ் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. ரேசிங் ரெட், கரீபியன் ப்ளூ, எபோனி பிளாக் ரெட், எபோனி பிளாக் ப்ளூ மற்றும் எபோனி பிளாக் ஒயிட் ஆகியவையே அந்த நிற தேர்வுகளாகும்.

Most Read Articles
English summary
Pulsar 150 discontinued
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X