ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்..

சீன நிறுவனமான க்யூஜே மோட்டார் (QJMotor), அதன் நான்கு புதுமுக பைக்குகளின் விலையை தற்போது அறிவித்துள்ளது. எந்தெந்த பைக்கிற்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

சீனாவைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்யூஜே (QJMotor), வெகுவிரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாகவும், தன்னுடைய வருகையை முன்னிட்டு நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

இந்த தகவல்கள் வெளியாகி ஒரு சில தினங்களே ஆகின்ற நிலையில் சீன நிறுவனம் தற்போது நான்கு மோட்டார்சைக்கிள்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. எஸ்ஆர்சி 250 (SRC 250), எஸ்ஆர்சி 500 (SR C500), என்டிஎக்ஸ் 300 (NTX300) மற்றும் எஸ்ஆர்கே 400 (SRK400) ஆகிய நான்கு மாடல் மோட்டார்சைக்கிள்களையே நிறுவனம் இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக களமிறக்கியிருக்கின்றது.

ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

இந்த நான்கு மோட்டார்சைக்கிள்களும் மல்டி பிராண்ட் (பன்முக நிறுவனங்களின்) இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வரும் மோட்டோ வால்ட் டீலர்ஷிப் வாயிலாகவே விற்பனைகக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஷோரூம் வாயிலாகவே மோட்டோ மோரினி மற்றும் ஜோன்டஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

விலை விபரம்:

  • எஸ்ஆர்சி 250 (SRC 250): ரூ. 1.99 லட்சம்
  • எஸ்ஆர்சி 500 (SR C500): ரூ. 2.59 லட்சம்
  • என்டிஎக்ஸ் 300 (NTX 300): ரூ. 3.49 லட்சம்
  • எஸ்ஆர்கே 400 (SRK 400): ரூ. 3.59 லட்சம்
  • மேலே பார்த்த அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பிற போட்டி மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்த சவாலான விலையில் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கும் விதமாக எஸ்ஆர்சி 250 பைக்கிற்கு மிகக் குறைவான விலையாக ரூ. 1.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    அதேவேலையில், இந்த பைக் மாடலின் உச்சநிலை வேரியண்ட் ரூ. 2.10 லட்சத்திற்கு விற்கப்படும். இந்த பைக்கில் க்யூஜே மோட்டார் இன்லைன் 2 சிலிண்டர், 249 சிசி, 4 வால்வுகள் கொண்ட ஆயில்-கூல்டு மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.4 எச்பி பவரையும், 17என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    இந்த பைக்கில் சிறப்பு கருவிகளாக 280 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் மற்றும் அட்ஜெஸ்டபிள் ஷாக் உள்ளிட்டவையும் க்யூஜே எஸ்ஆர்சி 250 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இந்த ரகத்தை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கை, கண்ணாடி,ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    க்யூஜே மோட்டார் எஸ்ஆர்சி 500 (QJ Motor SRC 500)

    இது ஓர் பெரிய உருவம் கொண்ட கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் நிறுவனம் 480 சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 25.5 எச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், 300 டிஸ்க் (முன்பக்கம்), 240 மிமீ டிஸ்க் (பின்பக்கம்) வழங்கப்பட்டுள்ளது. இப்பைக்கில் கூடுதல் சிறப்பு வசதியாக பேட்டட் ரக இருக்கையும், எல்சிடி திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    க்யூஜே மோட்டார் எஸ்ஆர்வி 300 (QJ Motor SRV 300)

    எஸ்ஆர்வி 300 நிறுவனத்தின் மிகவும் அழகிய க்ரூஸர் ரக பைக்காகும். ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில் இந்த வாகனத்தை க்யூஜே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதில், சூப்பரான இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 296 சிசி லிக்யூடு கூல்டு, வி-ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 30.3 எச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. யுஎஸ்டி ஃபோர்க், எல்இடி லைட்டுகள், டூயல் எக்சாஸ்ட் பைப், ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இந்த ரெட்ரோ பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    க்யூஜே மோட்டார் எஸ்ஆர்கே 400 (QJ Motor SRK 400)

    இது ஓர் ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இந்த பைக்கில் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 400 சிசி லிக்யூடு கூல்டு, இன்லைன் 2 சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 40.09 எச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க சூப்பரான பைக்கை ரூ. 1.99 லட்சத்திற்கு விற்கும் சீன நிறுவனம்.. போட்டி அனல் பறக்கபோகுது!

    இத்தகைய சூப்பரான பைக்குகளையே சீன நிறுவனம் இந்திய சந்தையை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றை வர்த்தகம் செய்வதற்காக இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (Adishwar Auto Ride India) உடன் சீன நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் சில அதன் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. பெனெல்லி, கீவே, மோட்டோ மோரினி மற்றும் ஜோன்டஸ் உள்ளிட்டவையே அந்த நிறுவனங்களே ஆகும்.

Most Read Articles
English summary
Qj motor launches 4 new motorcycles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X