டபுள் மடங்கு பவருடன் புதிய அவதாரம் எடுக்கப்போகும் புல்லட் பைக்! புதுசா 650 சிசி இன்ஜினில் வரப்போகுது

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் மிகவும் பிரபலமானது. இந்த பைக் 350 சிசி இன்ஜின் உடன் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் 650 சிசி இன்ஜின் உடன் புதிய புல்லட் பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் உருவாக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் மிகவும் பிரபலமானது, நீண்ட ஆண்டுகளாக மக்கள் மத்தியில் விற்பனையாகி வரும் ஒரு பைக்காக இது இருக்கிறது. அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக்கும் இது தான். இந்த பைக்கிற்கு தாத்தா முதல் இளைசுகள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த பைக் நீண்ட ஆண்டுகளாக 350 சிசி செக்மெண்டில் மட்டும் தான் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சமீப காலமாக தனது 650 செக்மெண்டில் பைக்கின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது சமீபத்தில் கூட் சூப்பர் மீட்டியோ 650 பைக்கை அறிமுகப்படுத்தியது.

டபுள் மடங்கு பவருடன் புதிய அவதாரம் எடுக்கப்போகும் புல்லட் பைக்! புதுசா 650 சிசி இன்ஜினில் வரப்போகுது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதலில் இத்தாலியில் நடந்த 2022 2 EICMA-வில் தான் இந்த பைக்கை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. அதன் பின் அடுத்த சில நாட்களில் கோவாவில் நடந்த ரைடர் மேனியாவில் இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் விலை விபரங்கள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும், இந்த பைக் பிப்ரவரி மாதம் முதல் டெலிவரிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 450 சிசி இன்ஜின் உடன் முற்றிலும் புதிதாக ஒரு பைக்கை உருவாக்கும் முயற்சியிலும் ராயல் என்ஃபீல் டு நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தபைக்கும் விரைவில் இந்திய மார்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 650 சிசி செக்மெண்டில்இந்நிறுவனம் ஏராளமான பைக்குகளை வைத்திருந்தாலும் இந்த செக்மெண்டை மேலும் விரிவாக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு செய்து அதற்காக நீண்ட நாட்களாக பணி செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பைக்கை அடிப்படையாக கொண்டு புதிதாக 650 சிசி இன்ஜின் கொண்ட ஒரு புல்லட் மாதிரியான பைக்கை உருவாக்க முடிவு செய்துள்ளது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 சிசி செக்மெண்டில் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல அதன் விலையும் இந்நிறுவனத்தின் மற்ற 650 சிசி பைக்குகளை விட குறைவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை இதே செக்மெண்டில் உள்ள மற்ற பைக்குகளின் இன்ஜினான 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கின் பெர்ஃபாமென்ஸ் உள்ளிட்ட மற்ற விபரங்கள் எதுவும் இப்பொழுது பேச முடியாது. பைக் தயாரானால் தான்இது குறித்தவிபரங்கள் எல்லாம் தெரியவரும். 350 செக்மெண்டில் பைக்குகளை பலர் வாங்கி துவங்கியதால் இன்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நல்லவிற்பனையை சந்தித்து வருகிறது.அடுத்தாக 650 செக்மெண்டை இளைஞர்களுக்கு பெரும் கனவாக விதைக்கும் முயற்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இறங்கியுள்ளது. தற்போது உள்ளதை விட டபுள் பெர்ஃபாமென்ஸில் ஒரு பைக் வந்தால் நன்றாக தானே இருக்கும்? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
RE plans to launch bullet bike with 650cc engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X