ஓலா, ஏத்தருக்கு போட்டியாகக் களம் இறங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நடக்கப்போறத மட்டும் வேடிக்கை பாருங்க!

ஓலா, ஏத்தருக்கு போட்டியாக ரிவர் என்ற நிறுவனம் 2023ம் ஆண்டு துவக்கத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்கூட்டர் சோதனையிலிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இன்று ஸ்கூட்டர் வாங்கும் ஏராளமான மக்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் மன நிலைக்கு வந்துவிட்டனர். இப்படியாக எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கும் மன நிலைக்கு வந்த மக்களின் மார்கெட்டை படிக்க இன்று ஓலா, ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் போட்டி போட்டி போட்டு வருகின்றனர்.

ஓலா, ஏத்தருக்கு போட்டியாகக் களம் இறங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நடக்கப்போறத மட்டும் வேடிக்கை பாருங்க!

பல நிறுவனங்கள் வந்தாலும் விற்பனையில் அதிகமான எண்ணிக்கையை எட்டியுள்ள நிறுவனம் ஓலா தான். இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் செம மவுசு இருக்கிறது. இதே போல ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த செக்மெண்டில் இன்னும் சில மாதங்களில் புதிதாக ஒரு நிறுவனம் இணையப்போகிறது. ரிவர் என்ற பெயரைக் கொண்ட இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது.

இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாகப் புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை வடிவமைத்து அதை டெஸ்ட் செய்து வந்தது. தற்போது கிட்டத்தட்ட அந்த ஸ்கூட்டர் தயாராகிவிட்டது. விரைவில் இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்குச் சென்றுவிடும். இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை வைத்து தற்போது ரோடு டெஸ்டிங் நடந்து வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏகப்பட்ட அம்சங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த ஸ்கூட்டரின் முகப்பு பக்கம் பெரிதாகவும் 2 ஹெட்லைட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்டை சுற்றி பிரகாசமாக எரியும் எல்இடி லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்குகளை பொருத்தவரை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஏத்தர் போல பெல்ட் டிரைவன் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்கூட்டரின் ஸ்பை ஷாட்களின்படி இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி, ஸ்பீடு, மோடு உள்ளிட்ட தகவல்களையும், ஸ்மார்ட் போன் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவற்றையும் செய்ய முடியும் என எதிர்பார்க்கலாம். இது முழுவதுமாக டச் ஸ்கிரீன் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேப், மியூசிக் பிளேயர் கண்ட்ரோல், செல்போனிற்கு வரும் கால்களை கண்ட்ரோல் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் 2023ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மார்கெட்டில் உள்ள ஓலா உள்ளிட்ட நிறுவனங்களில் ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் எனக் கூறிவிடலாம். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை 100 கி.மீ ரேஞ்ச் தரும் ஒரு பேட்டரியும் 180 கி.மீ ரேஞ்ச் தரும் மற்றொரு பேட்டரி என இரண்டு ஆப்ஷன்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா, ஏத்தருக்கு போட்டியாகக் களம் இறங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நடக்கப்போறத மட்டும் வேடிக்கை பாருங்க!

இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 40 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடிகளில் பிக்கப் செய்யும்படியும் அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு மல்டி யூட்டிலிட்டி வாகனம் எனவும், இது அதிகபட்சமாக 200 கிலோ வரையிலான சுமையைத் தாங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் 100 கி.மீ ரேஞ்ச் கொண்ட பேட்டரி வேரியன்ட் ஸ்கூட்டர் ரூ80 ஆயிரம் என்ற விலையிலும், 180 கி.மீ ரேஞ்ச் கொண்ட வேரியன்ட் ரூ1 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கான பெயரையும் இதுவரை வெளியிடவில்லை. இதுவும் அறிமுகத்தின் போது மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இந்நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் குவிந்துள்ளன. இந்நிறுவனத்தின் ஐடியா சிறப்பாக இருந்ததால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன. இந்த ரிவர் இவி ஸ்கூட்டர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

English summary
River first electric scooter spotted in testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X