பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

மூன்று முக்கிய மாடல் பைக்குகளின் விலையை ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதிரடியாக உயர்த்தி அறிவித்திருக்கின்றது. எந்தெந்த மாடலின் விலையில் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு (Royal Enfield), அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்கள் சிலவற்றின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை தாயகமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் எந்தெந்த மாடலின் விலையில் எவ்வளவு ரூபாய் உயர்த்தி இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்களாக கிளாசிக் 350 (Classic 350), மீட்டியோர் 350 (Himalayan) மற்றும் ஹிமாலயன் (Meteor) மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. இவற்றின் விலையையே தற்போது ராயல் என்பீல்டு உயர்த்தி இருக்கின்றது. இதில், ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் விலையிலேயே மிக அதிக உயர்வை நிறுவனம் செய்திருக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

அதேநேரத்தில், தற்போதைய விலை உயர்வில் மிக சிறிய உயர்வை பெற்ற டூ-வீலராக கிளாசிக் 350 பைக் இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கின் விலையில் ரூ. 2,872 முதல் ரூ. 3,332 வரை உயர்த்தி இருக்கின்றது. வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வை நிறுவனம் செய்திருக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

இதன் விளைவாக கிளாசிக் 350 பைக் முன்னதாக கிடைத்து வந்த ஆரம்ப விலை தற்போது அதிகரித்திருக்கின்றது. ஆரம்ப நிலை தேர்வான ரெட்டிச் கிளாசிக் 350 தேர்வின் புதிய விலை ரூ. 1.87 லட்சமாக மாறியிருக்கின்றது. இதன் டாப் ஸ்பெக் மாடலான குரோம் பூச்சு வசதிக் கொண்ட கிளாசிக் 350இன் விலை ரூ. 2.18 லட்சமாக உயர்ந்திருக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

கிளாசிக் 350 பைக்கின் விலை உயர்வு பற்றிய தகவலைக் கீழே பட்டியலாகக் காணலாம்

கிளாசிக் 350

புதிய விலை பழைய விலை விலை உயர்வு
Redditch ₹1,87,246 ₹1,84,374 ₹2,872
Halcyon ₹1,95,125 ₹1,93,123 ₹2,002
Signals ₹2,07,539 ₹2,04,367 ₹3,172
Dark ₹2,14,743 ₹2,11,465 ₹3,278
Chrome ₹2,18,450 ₹2,15,118 ₹3,332
பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

இதேபோல் நிறுவனம் மீட்டியோர் 350 பைக் மாடலின் விலையையும் உயர்த்தி இருக்கின்றது. இந்த பைக் மூன்று விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஃபையர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய தேர்வுகளில் மீட்டியோர் 350 விற்பனைக்கு கிடைக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

இவை அனைத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 2,511 தொடங்கி ரூ. 2,752 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதனால் முன்னதாக ரூ. 2.01 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த இப்பைக் தற்போது ரூ. 2.03 லட்சத்திற்கு விற்பனைச் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த பைக் மாடலிலும் வேரியண்ட் வாரியாகவே விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

அந்தவகையில், எந்தெந்த தேர்விற்கு எவ்வளவு விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.

மீட்டியோர் 350 புதிய விலை பழைய விலை விலை உயர்வு
Fireball Red / Yellow ₹2,01,620 ₹1,99,109 ₹2,511
Fireball White / Black ₹2,03,456 ₹2,00,945 ₹2,511
Stellar Blue / Red / Black ₹2,07,700 ₹2,05,099 ₹2,601
Stellar Pure Black ₹2,09,537 ₹2,06,936 ₹2,601
Supernova Brown / Blue ₹2,17,836 ₹2,15,084 ₹2,752
Supernova Silver / Custom ₹2,19,674 ₹2,16,922 ₹2,752
பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கின் அனைத்து தேர்வுகளுக்கும் விலை உயர்வை செய்திருக்கின்றது. ரூ. 4,253 ஆயிரம் வரை விலை உயர்வை அது செய்துள்ளது. இந்த அதிரடி செயலினால் தற்போது ஹிமாலயன் பைக்கின் விலை ரூ. 2.14 லட்சமாக உயர்ந்திருக்கின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

இது சில்வர் மற்றும் கிரே நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹிமாலயனின் விலை விபரம் ஆகும். கருப்பு மற்றும் பச்சை நிற ஹிமாலயன் பைக்கின் விலை ரூ. 2.22 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் சில பைக் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு நிறுவனம்... மூன்று முக்கிய மாடல்களின் விலையையும் உயர்த்திட்டாங்க!

650 ட்வின் பைக்குகள் (இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650), புல்லட் ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் விலைகள் உயர்த்தப்படவில்லை. ஆகையால், பழைய விலையிலேயே இவை விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிமாலயன் விலை புதிய விலை பழைய விலை விலை உயர்வு
Silver, Grey ₹2,14,887 ₹2,10,784 ₹4,103
Blue, Red ₹2,18,706 ₹2,14,529 ₹4,177
Black, Green ₹2,22,526 ₹2,18,273 ₹4,253
Most Read Articles

English summary
Royal enfield hikes price of classic 350 himalayan and meteor 350 here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X