கஸ்டமைஸ்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு...

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 கஸ்டமைஸ்டு பைக்குகளை இந்தியாவில் டிஸ்பிளேவிற்கு வைக்கிறது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக இருப்பது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்நிறுவனத்திற்கு என்று இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் இந்த நிறுவனத்தின் வாகனத்தை வாங்குவதைக் கனவாகக் கொண்டுள்ளனர். இளைஞர்கள் பலர் இந்த நிறுவனத்தின் பைக்குகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

இந்நிறுவனத்தின் பைக்குகளை கஸ்டமைஸ்டு செய்து பயன்படுத்துவதில் இளைஞர்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் இப்படியாக கஸ்டமைஸ்டு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனம் அதன் ஷோரூம்களில் கஸ்டம் பில்டர்கள் செய்யும் பைக்குகள் எல்லாம் டிஸ்பிளே செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

இதன் ஒரு பகுதியாக தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம், டில்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் தற்போது அந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கஸ்டமைஸ்டு பைக்குகளை டிஸ்பிளே செய்கிறது. இதற்காக ராஜ் புட்டாங்ரா கஸ்டம் மோட்டார் சைக்கிள், ஓல்டு டில்லி மோட்டார்சைக்கிள் கோ, நீவ் மோட்டார் சைக்கிள்ஸ் மற்றும் எம்எஸ் கஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இதை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செய்துள்ளது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கிளாசிக் ரீ இமேஜின்டு - கவுர்

ராஜ்புட்டானா கஸ்டம் மோட்டார் சைக்கிள் சார்ப்பில் கவுர் என்ற தீமில் ஒரு கஸ்டம் பைக்கை உருவாக்கியுள்ளனர். இது கிளாசிக் பைக்கின் டைம்லைனை குறிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல நேரங்களில் உருவாக்கிய பாகங்களை இணைத்து இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

முன்பக்கம் கிர்டர் சஸ்பென்சன், பின்பக்கம் பிரோக், லேதர் சீட், புதியதான பெட்ரோல் டேங்க், பின்பக்க சஸ்பென்சன், டூல் பாக்ஸ் சேஸிஸ், எனப் பல டீட்டெயில்களுடன் வித்தியாசமாக வழியில் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கம்யூனிட்டியிரை உற்சாக மூட்டும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

இந்த ராஜ் புட்டானா கஸ்டம்ஸ் ஒர்க்ஷாப்பை விஜய் சிங் அஜய்ராஜ்புரா 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ப்பூரில் சிறியதாக ஆரம்பித்தார். தற்போது பெரிய அளவில் கிரியேட்டிவாக பல கஸ்டமைசேஷன்களை உருவாக்கியுள்ளார்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கிளாசிக் ரீஇமேஜின்டு - டிவைன்

டிவைன் என்ற தீமில் நீவ் மோட்டார் சைக்கிள் பாபர் ஸ்டைல் பைக்கை கஸ்டமைஸ்டாக உருவாக்கியுள்ளது. மேட் கருப்பு கலர் தீமில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பெட்ரோல் டேங்கில் தங்க நிற ஸ்டிராப் கோல்டு லீஃப் வேலைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்க நிறம் பைக்கின் ஹேண்ட்பார், மட்கார்டு, ஃபூட்ரெஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கையால் தைக்கப்பட்ட லெதர் சீட், 5இன்ச்க்கு 16 இன்ச் பலூன் டயர்கள், எனப் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளன. நீவ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தைப் பொருத்தவரை கடந்த 2015ம்ஆண்டு முதல் டில்லியில் பைக் கஸ்டமைசேஷன் வேலைகளைச் செய்து வருகிறது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கிளாசிக் ரீஇமேஜின்டு - டில்லி

ஓல்டு டில்லி மோட்டார் சைக்கிள் நிறுவனம் டில்லி என்ற பெயரில் ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ்டு பைக் ஒன்றைத் தயார் செய்துள்ளது. டில்லியின் ஸ்டைலை மையமாக வைத்துஇந்த பகைக் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய டில்லி வைப்களை உருவாக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

இந்நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ராயல் என்ஃபீல்டு பைக்களுக்கான கஸ்டமைசேஷன் வேலைப்பாடுகளுக்காகப் பழைய பைக்குகளை மாற்றுவது, பெயிண்டிங் எனப் பழைய பைக்குகளுக்கு உயிரூட்டுவதை முக்கியமாக செய்துள்ளார். இந்நிறுவனம் ராயல் என்ஃபீல்டு பைக்கின் சிறப்பான ரெஸ்டிரோ டைப் பில்டர்களை உருவாக்குகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் கூட கஸ்டமைசேஷன் செய்துவருகிறது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கிளாசிக் ரீஇமேஜின்டு- அர்பன் ரோடுஸ்டர்

எம்எஸ் கஸ்டம்ஸ் நிறுவனம் அரபன் ரோடுஸ்டர் என்ற திமில் அழகிய புதிய கிளாசிக் 350 பைக்கை உருவாக்கியுள்ளது. 60களின் ஸ்டைலில் உள்ள ஹெட்லைட் டூம், கஸ்டம் டேங்க், ஸ்விங் ஆர்ம், வீல்கள் மற்றும் டயர்கள் என பெர்சனலைஸ்டு லுக்கை வழங்குகிறது. கையாலேயே இரண்டு சீட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கடந்த 2008ம ஆண்டு எம்எஸ் கஸ்டம்ஸ் நிறுவனத்தை லால்மால்ஷாமா என்பவர் உருவாக்கினார். இவர் எல்லாவிதமான பைக்குகளை கஸ்டமைஸ்டு செய்வதில் வல்லுநர், இவர் மிசோரம் மாநிலத்தில் தனி ஆளாக இந்த கஸ்டமைசேஷனை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவர் ஏராளமான பைக்களை கஸ்டமைஸ்டு செய்துள்ளார்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

ராயல் என்ஃபீல்டு கஸ்டம் உலகம் மோட்டார் சைக்கிளிஸ்ட்களின் கிரியேட்டிவிட்டி மற்றும் சொந்த எண்ணங்களைத் தூண்டும் வகையில் செல்கிறது. ராயல் என்ஃபீல்டு வழங்கும் இந்த வாய்ப்பு உலகில் பல இடங்களில் உள்ள ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ்டு வல்லுநர்கள் தங்கள் திறமையையும் கிரியேட்டிவிட்டியையை நிரூபிக்கும் ஒரு தளம்.

கஸ்டம் பில்டு கிளாசிக் 350 பைக்குகளை காட்சிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு . . .

கடந்த 6 ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கஸ்டமைஸ்டு ஷோகேஸை செய்துள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ள இந்த பைக்குகள் எப்படி இருக்கிறது? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Royal enfield showcases unique custom build classic 350 in india
Story first published: Friday, June 24, 2022, 23:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X