புதிய ராயல் என்பீல்டு பைக்கின் ரகசியம் வெளியே கசிந்தது... சந்தோஷத்துல கையும் ஓடல, காலும் ஓடலயே!

புத்தம் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 350 பைக்கின் ரகசியம் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள அந்த தகவல் என்ன? என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இரண்டு 650 சிசி பைக்குகளை ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகியவை ஆகும்.

புதிய ராயல் என்பீல்டு பைக்கின் ரகசியம் வெளியே கசிந்தது... சந்தோஷத்துல கையும் ஓடல, காலும் ஓடலயே!

இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு புதிய 650 சிசி பைக் தற்போது ராயல் என்பீல்டு குடும்பத்தில் இணைந்துள்ளது. அது ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெகு சமீபத்தில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பொது பார்வைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 648 சிசி, பேரலல் ட்வின், ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் ஆகும்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூனிங் செய்துள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 16 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியையும் இந்த பைக்கில் ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. இந்த பைக்கின் எடை 241 கிலோ ஆகும். அதே நேரத்தில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கினுடைய எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 15.7 லிட்டர்களாக உள்ளது.

அதே சமயம் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வட்ட வடிவ டெயில்லைட் மற்றும் கண்ணீர் துளி வடிவ எரிபொருள் டேங்க் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வந்துள்ளது. இன்னும் இந்த பைக்கை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

ஆனால் கூடிய விரைவிலேயே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஜனவரி மாதம் இந்த பைக்கை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த பைக்கின் விலை 3.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த சூழலில் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்பது தொடர்பான புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இதன்படி இந்த பைக்கை வாடிக்கையாளர்களின் கைகளில் ஒப்படைக்கும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் சுமாராக 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால், இந்த பைக்கிற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Most Read Articles

English summary
Royal enfield super meteor 650 delivery timeline
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X