தேதி குறிச்சுட்டாங்க! ராயல் என்பீல்டு ரசிகர்கள் தவம் கிடக்கும் பைக்கை பற்றி வெளியான புதிய தகவல்! ரொம்ப ஹேப்பி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650). வெகு சமீபத்தில்தான் இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்தது.

ஆனால் இந்த பைக்கின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலைகளை வரும் ஜனவரி 10ம் தேதி (January 10) அறிவிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால், இந்த பைக்கிற்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் இந்த தகவலை ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.

தேதி குறிச்சுட்டாங்க! ராயல் என்பீல்டு ரசிகர்கள் தவம் கிடக்கும் பைக்கை பற்றி வெளியான புதிய தகவல்! ரொம்ப ஹேப்பி

இது ரெட்ரோ ஸ்டைல் பைக் ஆகும். ரிலாக்ஸான ரைடிங் பொஷிஷனை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அகலமான ஹேண்டில்பார்கள், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ட்யூயல் க்ரோம் எக்ஸாஸ்ட்கள் ஆகிய அம்சங்களை ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த பைக்கில், 648 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 46.2 பிஹெச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஆகிய பைக்குகளுக்கும், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ள இன்ஜின்தான், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முன் பகுதியில் அப்சைடு-டவுன் ஃபோர்க் சஸ்பென்ஸனை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் பின் பகுதியில், ட்யூயல் ஷாக் அப்சார்பர்கள் இடம்பெற்றுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் ஜனவரி 10ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெலிவரி பணிகள் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவின் 650 சிசி மற்றும் 350 சிசி செக்மெண்ட்களில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை களமிறக்கவுள்ளது.

இந்த பைக்குகள் வரும் மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளது. இதுதவிர 450 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட 5 புத்தம் புதிய பைக்குகளை உருவாக்கும் பணிகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எதிர்காலத்தில் இந்திய சந்தையில் நாம் நிறைய ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் சமீபத்தில் வெளியானது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்ட தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்தான் அது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஹிமாலயன் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் மிக நீண்ட காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Royal enfield super meteor 650 launch date
Story first published: Wednesday, December 7, 2022, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X