Just In
- 33 min ago
டாடாவுக்கு போட்டியாக மஹிந்திரா செய்யப்போகும் அதிரடியான காரியம்! சுதந்திர தினத்தில் சர்ப்ரைஸ் குடுக்க திட்டம்?
- 55 min ago
ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...
- 1 hr ago
கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சிட்டாரா... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு கார்கள்!
- 2 hrs ago
இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ
Don't Miss!
- Sports
தமிழகத்தில் அடுத்த செஸ் போட்டி திட்டம்.. விஸ்வநாதன் ஆனந்த் கூறிய தகவல்.. நடந்து வரும் பேச்சுவார்த்தை
- Lifestyle
ரிஷபம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது...
- News
மேற்கு வங்கம்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி
- Technology
WhatsApp-க்கு புது அப்டேட்: ஒருவழியாக அந்த 3 பிரச்சனைகளும் ஒழிந்தது!
- Movies
ராஷ்மிகாவை எல்லாருக்கும் பிடிக்கும்.. அவருக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் தெரியுமா!
- Finance
மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
விண்வெளி வாகனத்தைபோல் ஜொலிக்கும் இ-பைக்... 1-2 வருஷம் இல்ல லைஃப் டைம் வாரண்டி ஃப்ரேமுக்கு அறிவிச்சிருக்காங்க!
விண்வெளி வாகனத்தைபோல் ஜொலிக்கும் எலெக்ட்ரிக் பைக்கை வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கு இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ரைவிட் (Ryvid). இந்நிறுவனம் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. ஆந்தம் எனும் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாகும். இந்த ஒற்றை தயாரிப்பே தற்போது நிறுவனத்தை தலைப்பு செய்தியாக மாற்றியிருக்கின்றது. ஹெட்லைன்ல இடம் பிடிக்கிற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் அம்சங்கள் எலெக்ட்ரிக் பைக்ல கொடுத்திருக்காங்க அப்படினு தானே கேக்குறீங்க? இதைப்பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் பைக்கை ரைவிட் நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. சுமார் 1,000 யூனிட்டுகளை மட்டுமே இதற்காக நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த குறைந்தபட்ச எண்ணிக்கையையே ஒட்டுமொத்த உலகிற்கும் அது ஒதுக்கி வைத்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் பைக்கிற்கு 7,800 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை 6.17 லட்சம் ஆகும். ரைவிட் நிறுவனம் விண்வெளி வாகனங்களை மனதில் வைத்தே ஆந்தம் எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இருசக்கர வாகனம் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தாலே அது உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.

சேஸிஸ், பேனல் என அனைத்தும் ஸ்பேஸ்கிராஃப்டுகளை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் சேஸிஸை உருவாக்க நிறுவனம் தனித்துவமான ஸ்டீலை பயன்படுத்தியிருக்கின்றது. இது இறகுகளைப் போல இலகுவானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் ஒட்டுமொத்த எடையே 5.44 கிலோவாகும். இதுதவிர, சென்டர் கிராவிட்டியை குறைக்கும் வகையிலும் இந்த பைக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதன் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. 762 மிமீ - 834 மிமீ வரையில் இதன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியும். இத்துடன், இப்பைக்கில் கழட்டி மாட்டும் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், தேவை எனில் பேட்டரிகளை தனியாக கழட்டி சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதுபோன்று கழட்டி மாட்டும் வசதியுடன் பேட்டரி பேக்குகள் எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்படுவது முதல் முறையல்ல. அதேவேலையில், இதில் ஓர் தனித்துவமான வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. பேட்டரி பேக்கிற்கு என தனி சக்கரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது 30 கிலோ எடைக் கொண்ட பைக்கை எளிதில் கையாள உதவியாக இருக்கும். அதாவது, ட்ராலி சூட்கேஸை போல் மிக சுலபமாக பேட்டரியை நகர்த்தி செல்ல முடியும்.

இருசக்கர வாகனத்தில் 4.3 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுதவிர, ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான ரைடிங் மோட்களும் இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பேட்டரி பேக்கை போலவே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டாரும் மிக சூப்பரான திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 13.5 kW பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.5 kW பவரையும், 72 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் மணிக்கு 80 கிமீ வேகத்தை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதைத் தொடர்ந்து அதிக சிறப்பான இயக்க அனுபவத்திற்காக அட்ஜஸ்டபிள் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் செட்-அப் ஆந்தம் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 310 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் தொழில்நுட்ப வசதிகளும் ஏராளமாக உள்ளன. இதை பரைசாற்றும் வகையில் 4.9 டிஎஃப்டி திரை பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இன்னும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் ஆந்தம் எலெக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வரும் 2023ஆம் ஆண்டின் மத்திக்குள் டெலிவரி வழங்க ரைவிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரைவிட் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக லைஃப்டைம் வாரண்டியை அதன் ஃப்ரேமிற்கும், இரண்டு ஆண்டுகள் வாரண்டி பவர் பேக்கிற்கும், ஒரு வருட வழக்கமான வாரண்டி மோட்டார்சைக்கிளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!
-
டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..
-
என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது