ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கே டஃப் கொடுக்கும் தயாரிப்பை விற்பனைக்கு களமிறக்கிய பெங்களூரு நிறுவனம்...

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டெல்லா மோட்டோ நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பஸ் எனும் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகன உலகில் அது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெய்ட்கோ (Jaidka group) குழுமத்தின் அங்கமான ஸ்டெல்லா மோட்டோ (Stella Moto) எனும் புதுமுக நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆர்டிஓ-வால் பாதுகாப்பானது என அங்கீகாரம் செய்யப்பட்ட பேட்டரி பேக் உடன் அந்த வாகனம் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஸ்டெல்லா மோட்டோ பஸ்

பஸ் (Buzz) எனும் இ-ஸ்கூட்டரையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 95 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 4 விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். கிரே, மேட் ப்ளூ, ரெட் மற்றும் பிரவுன் ஆகியவையே அவை ஆகும். இந்த பன்முக நிற தேர்வுகள் உடன் சேர்த்து நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இருசக்கர வாகனமாக ஸ்டெல்லா மோட்டோ உருவாக்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வால் பகுதி லைட் ஆகியவை தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றன. இந்த வாகனத்தில் 'ஏ' கிரேட் ரக லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்டெல்லா மோட்டோ பஸ்

இந்தியாவின் அனைத்து விதமான கால நிலைக்கு ஏற்ற ஓர் பேட்டரி இதுவாகும். நடப்பாண்டு கோடை காலத்தில் சில மின்சார ஸ்கூட்டர்கள் தானாக பற்றி எரிந்ததை அறிவோம். இதற்கு பேட்டரி பேக்கில் ஏற்பட்ட கோளாறு ஓர் காரணமாக இருந்தாலும், அதிக வெப்பமும் அவை தீ பிடித்ததற்கு காரணமாக இருக்கின்றது. இதுபோன்று என்ன மாதிரியான உஷ்னமான சூழல் நிலவினாலும் இந்த பேட்டரி ஆபத்தான சூழலைச் சந்திக்காது என ஸ்டெல்லா மோட்டோ தெரிவித்துள்ளது.

இதற்காக நான்கு விதமான டெம்ப்ரேச்சர் சென்சார்கள் இந்த பேட்டரியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை பேட்டரி அதிக உஷ்னமாக இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக வாகனத்தின் பவரை கட்-ஆஃப் செய்துவிடும். 2.16 kWh பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மைக்ரோ புராசஸர் ரக ஸ்மார்ட பிஎம்எஸ் சிஸ்டத்துடன் இந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிஸ்டம் பேட்டரியின் மின்சார திறனை மானிட்டர் செய்யும்.

இந்த பேட்டரி ஓர் முழு சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது. இத்துடன் உயர் வேக திறனை வெளியேற்றக் கூடிய 2 KW பிஎல்டி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இத்துடன், ஸ்டிரெஸ் ஃப்ரீ ரைடை அனுபவிக்கும் விதமாக இந்த வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதன் லோடு கெபாசிட்டி 150 கிலோவாகும். கணிசமான அளவு லோடு ஏற்றி செல்லுதல் மற்றும் டெலிவரி சேவை போன்றவற்றிற்கு இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, அரசின் மின் வாகன ஊக்குவிப்பு முயற்சியால் அவற்றில் எண்ணிக்கை தற்போது உச்ச அளவில் உயர்ந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே புதுமுக நிறுவனமான ஸ்டெல்லா மோட்டா அதன் புதிய பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஸ்டெல்லா பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஆம்பியர் மற்றும் கோமகி போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஸ்டெல்லா பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் அனைத்தும் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு செம்ம டஃபை வழங்கும் வகையிலேயே உள்ளது. குறிப்பாக, தனி நபர் மட்டுமின்றி டெலிவரி சேவையில் உள்ளவர்களும் இந்த வாகனத்தை பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருப்பது அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Stella moto buzz e scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X