சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது! இந்தியாவவிட்டே வெளியேத்திட்டாங்க!

சுஸுகி அதன் பிரபல இருசக்கர வாகன மாடலான இன்ட்ரூடர் (Suzuki Intruder)-ஐ இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பைக் வெளியேற்றத்திற்கான காரணம் என்ன என்பது பற்றிய முழு விபரத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி, அதன் இன்ட்ரூடர் (Suzuki Intruder) மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விற்பனையில் இருந்து பைக்கை சுஸுகி அகற்றியிருக்கின்றது. மிக மோசமான வரவேற்பின் காரணமாக இந்த இக்கட்டான முடிவை நிறுவனம் எடுத்திருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

சுஸுகி நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை 2017 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் சற்று நல்ல டிமாண்டை பெற்று வந்த இந்த பைக், தற்போது யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் விற்பனையில் அதளபாதாளத்தில் இன்ட்ரூடர் வீழ்ந்துள்ளது என கூறலாம்.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

அந்தளவிற்கு மிக மிக மோசமான நிலைக்கு அப்பைக் சென்றிருக்கின்றது. ஒரு யூனிட்கூட விற்பனையாகாத நிலை இந்த பைக்கிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த மோசமான நிலையின் காரணமாகவே பைக்கை இந்திய சந்தையை விட்டு சுஸுகி வெளியேற்றியிருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

கடைசியாக 2021ம் ஆண்டு நவம்பரிலேயே இந்த பைக் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 16 யூனிட்டுகள் மட்டுமே அந்த மாதத்தில் இன்ட்ரூடர் விற்பனையானது. இதற்கு பின்னர் ஒரு யூனிட்கூட இன்ட்ரூடர்கூட விற்பனையாகவில்லை.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

2021 டிசம்பர் தொடங்கி 2022 மே மாதம் வரை, அதாவது கடந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பித்து சென்ற மாதம் வரை ஒரு யூனிட்கூட இன்ட்ரூடர் விற்பனையாகவில்லை. தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக ஒற்றை அலகுகூட விற்பனையாக காரணத்தினாலேயே இந்த பைக்கை அதிரடியாக சந்தையை விட்டு வெளியேற்றியிருக்கின்றது சுஸுகி.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

இன்ட்ரூடர் ஓர் 155 சிசி பைக் ஆகும். இந்த பைக் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் போனவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதன் வடிவமைப்பு புகழ்பாடும் வகையில் இருந்தாலும் உருவம் மிக சிறியதாக இருக்கின்றது. மேலும், அதிக பருமனான தோற்றத்தையும் அது கொண்டிருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

இதைத்தொடர்ந்து, பொருத்தமற்ற முக்கோண வடிவ ஹெட்லேம்ப், ஆங்குலர் ட்வின் எக்சாஸ்ட் மற்றும் அகலான பின்புற தோற்றம் பைக்கின் ஓழுங்கீனமான ஸ்டைல்களில் ஒன்றாக உள்ளன. இதுபோன்ற முரண்பாடான வடிவமைப்பின் காரணமாகவே இந்த பைக்கிற்கு மக்கள் மத்தியில் வரவேற்புக் கிடைக்காமல் போனது. இதன் விளைவாக தற்போது சந்தையை விட்டும் அது வெளியேறியிருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

சுஸுகி நிறுவனம் ஜிக்ஸெர், ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மிக சூப்பரான வரவேற்பு நாட்டு இளைஞர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இன்ட்ரூடர் பைக்கிற்கு மட்டும் வரவேற்புக் கிடைக்காமல் போனது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

இதுமட்டுமின்றி சுஸுகி இன்ட்ரூடர் பைக்கைக் காட்டிலும் பஜாஜ் அவென்ஜர் விலையிலும், சிறப்பு வசதிகளிலும் மிக சூப்பரானதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், பலர் இன்ட்ரூடர் பைக்கை தேர்வு செய்வதற்கு பதிலாக பஜாஜ் அவென்ஜரை தேர்வு செய்கின்றனர். இதன் விளைவாகவும் கடந்த காலங்களில் இன்ட்ரூடரின் விற்பனை குறைந்திருக்கின்றது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

சுஸுகி இன்ட்ரூடர் 155 கடைசியாக இந்தியாவில் ரூ. 1.28 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டது. இதைவிட சற்று குறைவான விலையில், அதாவது, ரூ. 1.12 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் பஜாஜ் அவென்ஜர் 160 விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. 154.9 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டது.

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எதற்கும் நடக்க கூடாது... இந்தியாவைவிட்டே வெளியேத்திட்டாங்க!

இது அதிகபட்சமாக 14.8 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களுடன் அது விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பைக்கையே தற்போது இந்தியாவில் இருந்து சுஸுகி வெளியேற்றியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Suzuki discontinues intruder cruiser bike from india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X