யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த சுஸூகி! பர்க்மேன் 125 ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் அறிமுகம்!

சுஸூகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டரில் டாப் வேரியன்டாக புதிய ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்டெபிலிட்டி, அதிக மைலேஜ் மற்றும் புதிய தொழிற்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சுஸூகி நிறுவனத்தில் இரண்டாவதாக அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டர் தான். இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்யும் விதமாக இந்த ஸ்கூட்டரில் புதிய டாப் வேரியன்ட் ஸ்கூட்டர் ஒன்றை சுஸூகி நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனேவ விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் அப்படியே விற்பனையாகும் நிலையில் எக்ஸ்ட்ராகவாக ஒரே ஒரு டாப் வேரியன்ட் மட்டும் தற்போது இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த சுஸூகி! பர்க்மேன் 125 ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் அப்டேட்டை பார்க்கும் போது லண்டனில் விற்பனையாகும் பர்க்மேன் ஸ்டிரீட் 125இஎக்ஸ் என்ற ஸ்கூட்டரை போலவே இதுடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டரில் பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்டாண்டர்டு, ஸ்டிரீட் 125 ரைடு கனெக்ட் ஆகிய வேரியனட்கள் இருக்கின்றன. தற்போது மூன்றாவதாக ஸ்டிரீட் 125 இஎக்ஸ் என்ற வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது.

தற்போது உள்ள மாடலில் முன்பக்கம் 12 இன்ச், பின்பக்கம் 10 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள டாப் வேரியன்டில் இரண்டுமே 12 இன்ச் வீல்கள் தான். இதனால் வாகனத்தின் ஸ்டெபிலிட்டி அதிகரிக்கும், மேலும் ஸ்கூட்டர் ஓட்டும் போசிஷனும் மாறுபடும். இந்த மாற்றம் ஏற்கனவே இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தியவர்களின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.

அப்டேட்ட செய்யப்பட்ட ஸ்கூட்டரில் பெரிய சீட் மற்றும் பேட்டிங் சொகுசான பயணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. சீட் சொகுசுக்காக யோசித்து ஸ்கூட்டரை ஹேண்டில் செய்வதில் சிரமம் வந்துவிடக்கூடாது என்பதையும் மனதில் வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டாப் வேரியன்ட் சுஸூகி பர்க்மேன் ஸ்கூட்டரில் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர், மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் ஆகிய நிறங்களில் இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் குறைந்த பவரில் அதிக பிரகாசமாக எரியும் எல்இடி லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கமும் எல்இடி டெயில் லைட் மற்றும் டர்ன் சிக்னல் ஆகிய விஷயங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை பொருத்தவரை முழு எல்சிடி பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் புதிய அப்டேட்டாக இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், மால்ஃபங்சன் நோட்டிபிகேஷன், மாஸ்டர் வார்னிங் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் சுஸூகி எக்கோ டிரைவ் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஸ்கூட்டர் எப்பொழுது குறைவான பெட்ரோல் செலவில் அதிகமான தூரம் செல்கிறது என்பதை சொல்லும் அதை வைத்து டிரைவர் அதே டிரைவிங் மேனரை பின்பற்றலாம். தற்போது உள்ள ரைடு கனெக்ட் மாடலில் ப்ளூடூத் அடிப்படையிலான சில அப்டேட்கள் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், போன் பேட்டரி லெவல் டிஸ்பிளே, ஓவர் ஸ்பீடு வார்னிங், இடிஏ அலர்ட், மிஸ்டு கால் அலர்ட், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ்களை படிக்கும் வசதி இதில் உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொருத்தவரை 124 சிசி, ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.6 பிஎஸ் பவரை 6500 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க் திறனை 5500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போது உள்ள ஸ்கூட்டரில் உள்ள அதே திறன் தான். பவரில் மட்டும் லேசான மாற்றங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் சைலெண்ட் ஸ்டார்ட்டர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டர் எப்பொழுது ஸ்டார்ட் ஆனாலும் சத்தமே வராத அளவிற்கு அமைதியாக வேலையை துவங்கும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்சன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்விங்க் ஆர்ம் சஸ்பன்சன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட் இஎக்ஸ்125 ஸ்கூட்டர் ரூ1,12,300 என்ற விலையவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது மார்கெட்டில் உள்ள அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125, டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா கிரெஸியா, ஆக்டிவா 125, யமஹா ரே இசட்ஆர் ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது.

Most Read Articles

English summary
Suzuki launches burgman 125 ex top varient scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X