250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

புதிய மோட்டார்சைக்கிளின் அறிமுகம் தொடர்பான டீசர் படம் ஒன்றினை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக சுஸுகியை சொல்லலாம். ஜப்பானை சேர்ந்த இந்த 2-வீலர் பிராண்டில் இருந்து பல கவர்ச்சிக்கரமான தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ளன.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

இந்த வகையில் சமீபத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் புதிய ஸ்டாண்டர்ட் எடிசன் ரூ.90,735 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தனது அடுத்த மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தயாராகி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் சுஸுகியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசரினை கீழே காணலாம்.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய சுஸுகி மோட்டார்சைக்கிள் அட்வென்ச்சர் ரக பைக்காக இருக்கலாம். இதனால் இது உலகளவில் பிரபலமான சுஸுகி வி-ஸ்ட்ரோமின் 250சிசி வெர்சனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், இது வி-ஸ்ட்ரோம் 1050 மோட்டார்சைக்கிளாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த டீசர் படங்களில் ‘மாஸ்டர்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

பொதுவாக இந்த வார்த்தை அதிக சிசி கொண்ட பைக்குகளை குறிப்பதற்கே பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்தியாவில் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. ஆனால் நம் நாட்டு சந்தையில் இந்த சுஸுகி அட்வென்ச்சர் பைக்கின் ஆரம்ப-நிலை வெர்சன் எதுவும் விற்பனையில் இல்லை.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

வி-ஸ்ட்ரோம் 250 பைக் அறிமுகமாகுமேயானால், இந்த இடைவெளியை நிச்சயமாக அது நிரப்பும். சில வெளிநாட்டு சந்தையில் விற்பனையில் உள்ள வி-ஸ்ட்ரோம் 250 பைக்கில் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 26 பிஎச்பி மற்றும் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் சுருக்கப்பட்ட வெர்சனாகவே வி-ஸ்ட்ரோம் 250 காட்சியளிக்கிறது. ஏனெனில் பெரும்பாலான உடல் பேனல்களை வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி-யில் இருந்தே வி-ஸ்ட்ரோம் 250 பெறுகிறது. இந்த வகையில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடியை வி-ஸ்ட்ரோம் 250 பைக்கிலும் எதிர்பார்க்கலாம்.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

இந்தியாவில் விற்பனையில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 பைக்கிற்கு கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் பெனெல்லி டிஆர்கே251 உள்ளிட்டவை போட்டியாக இருக்கும். ஆரம்ப-நிலையில், 250சிசி-யில் புதிய அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுஸுகி அறிமுகப்படுத்தலாம் என ஆரம்பத்திலேயே தகவல்கள் வெளியாகி இருந்தன.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

இது வி-ஸ்ட்ரோம் 250 ஆக இருக்கலாம் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இந்த ஆரம்ப-நிலை அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சத்திற்கு உள்ளாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த 250சிசி சுஸுகி அட்வென்ச்சர் பைக்கின் டாப்-ஸ்பீடு விற்பனையில் உள்ள நாடுகளில் 135kmph-இல் இருந்து 140kmph வரையில் உள்ளது.

250சிசி-யில் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்கா!! விலை எந்த அளவில் இருக்கும்?

சுஸுகியின் சமீபத்திய ஸ்கூட்டராக விளங்கும் அவெனிஸ் ரைட் கனெக்ட் எடிசன் & ரேஸ் எடிசன் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனுடன் சமீபத்தில் ஸ்டாண்டர்ட் எடிசனும் இணைந்து கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே விற்பனையில் இருக்கும் இரு வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய வேரியண்ட் சற்று விலை குறைவானதாக விளங்குகிறது.

Most Read Articles
English summary
Suzuki motorcycle released new teaser for adventure bike details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X