ரொம்ப கவனமா இருக்கனும்! செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க...

கேடிஎம் 390 டியூக் பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

பலருக்கு பிரிமியம் பைக்குகளை வாங்குவதில் அலாதியான பிரியம் இருக்கும். குறிப்பாக பைக் ரைடிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் பிரிமியம் பைக்கை வாங்குவதைக் கனவாக வைத்திருப்பார்கள். பிரிமியம் பைக்குகளில் நீண்ட தூரம் பயணம் செய்வதே அவர்களது வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால் பலருக்கு பிரிமியம் பைக்குகளை வாங்க பட்ஜெட் இருக்காது. பலருக்கு பிரிமியம் பைக்கின் அனுபவமும் இருக்காது.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

இதனால் முதல் முறையாக பிரிமியம் பைக் வாங்குபவர்கள் தேர்வு செய்யும் பைக் கேடிஎம் 390 டியூக் பைக் தான். இந்த பைக் ஒரு சிலிண்டர் இன்ஜின் கொண்டது. மார்கெட்டில் பட்ஜெட்டில் ஒரு பிரிமியம் பைக் வாங்க வேண்டும் என்றால் இந்த பைக் சிறந்த பைக்காக தான் இருக்கும்.தற்போது புதிதாக இந்த பைக்கை வாங்க வேண்டும் என்றால் சுமார் ரூ3 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது. வரும்.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

ஆனால் பலருக்கு அந்த பட்ஜெட்டும் சிரமம் தான். அதனால் பலர் இந்த பைக்கை வாங்க வேண்டும் ஆனால் குறைவான பட்ஜெட்தான் இருக்கிறது என்றால் அவர்கள் உடனடியாக இதே பைக்கின் பயன்படுத்திய பைக்கை வாங்க முயற்சி செய்வார்கள். இன்று பயன்படுத்திய பைக்கின் மார்கெட்டில் கேடிஎம் 390 டியூக் பைக் அதன் கண்டிஷன்களுக்கு ஏற்ப ரூ1 லட்சம் முதல் ரூ2.5 லட்சம் வரை பல்வேறு விலையில் விற்பனைக்கு இருக்கிறது.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

இந்த பதிவில் நாம் இப்படியாகப் பயன்படுத்திய பிரிமியம் பைக்குகளை வாங்குவதில் உள்ள நன்மைகள், தீமையில் எதில் கவனமாக இருக்க வேண்டும். எதில் நாம் ஏமாந்து போக வாய்ப்பு இருக்கிறது? உள்ளிட்ட பல விஷயங்களை நாம் பார்க்கப்போகிறோம். இது நீங்கள் இது போன்ற பிரிமியம் பைக்குகளை பயன்படுத்தி பைக் மார்கெட்டில் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

நன்மைகள்

கேடிஎம் 390 டியூக் பைக் ஷாப்பான பைக், குறைந்த எடை கொண்ட பைக், துடிப்பான பைக், இந்த பைக்கை கையாள்வதற்கு சிறப்பாக இருக்கிறது. இதைப் பயணித்தால் தரமான பயணமும் சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பைக்கில் ஸ்டிக்கில் மெட்செல்லர் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த பைக்கிற்கு சிறப்பான கிரிப் அனுபவத்தை வழங்குகிறது.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

390 டியூக் பைக்கில் பல தொழிற்நுட்ப அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக டிஎஃப்டி கலர் டிஸ்பிளே, ரைடிங் மோட்கள், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு பை ஓயர் டெக்னாலஜி, எல்இடி லைட்டிங் உள்ளிட்ட பல தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது. இருக்கிறது. இது பைக் ரைடர்களுக்கு பெரும் கனவான பைக்காக இந்த தொழிற்நுட்ப அம்சங்களால் மாறியுள்ளது.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

இந்த கேடிஎம் 390 டியூக் பைக் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர்,லிக்யூட் கூல்டு இன்ஜினை கொண்டது. இது 43 பிஎச்பி திறனையும் 37 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினும் கியர் பாக்ஸூம் இணைந்து இந்த பைக்கிற்கு மிகச்சிறந்த ஒரு பெர்பாமென்ஸை வழங்குகிறது. இது எல்லாம் கேடிஎம்390 பைக்கில் இருக்கும் நம்மைகள்

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

கவனமாக இருக்க வேண்டியவை

நாம் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் கேடியும் 390 டியூக் பைக்கின் இரண்டாம் தலைமுறை பைக்கில் உள்ள அம்சங்களாகும். இவை இதன் முதல் தலைமுறை பைக்குகளில் இல்லை. ஆனால் பயன்படுத்திய பைக் மார்கெட்டில் அதிகமாகக் கேடியும் 390 டியூக் பைக்கின் முதல் தலைமுறை பைக் இருக்கிறது. இந்த பைக்குகள் மார்கெட்டில் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது என நீங்கள் முதல் தலைமுறை பைக்கை வாங்கினால் அதில் பல அம்சங்கள் இருக்காது.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

இரண்டாம் தலைமுறை பைக்கும் பயன்படுத்திய மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த பைக்குகளின் விலை பயன்படுத்திய மார்கெட்டிலும் அதிகமான விலையில் தான் கிடைக்கிறது. இதனால் நீங்கள் எந்த கேடிஎம் 390 டியூக் பைக்கை வாங்கினாலும் எந்த தலைமுறை பைக்கை வாங்குகிறீர்கள் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

ரொம்ப கவனமா இருக்கனும் . . . செகண்ட் ஹேண்டில் கேடிஎம் பைக்கை வாங்கும் முன் இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க . . .

அதே போல நீங்கள் புதிதாக பைக் ஓட்டுகிறீர்கள் என்றால் கேடிஎம் 390 பைக் சற்று துடிப்பான பைக், அதன் செயல்பாட்டில் கொஞ்சம் மிரட்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த பைக்கை நீங்கள் வாங்கிவிட்டால் குறைவான வேகத்திலேயே ஓட்டி பழகுங்கள், அதன் பவர், மற்றும் கையாளும் டெக்னிக் உங்களுக்குப் பழக பழக நீங்கள் பைக்கின் வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். எடுத்தவுடனேயே மற்ற பைக்கை போல இதைப் பயன்படுத்த நினைத்தால் விபத்தில் கூட அது போய் முடியலாம், கவனமாக இருக்கவும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Things to check before buying used ktm 390 duke bike
Story first published: Tuesday, September 20, 2022, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X