புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

வழக்கம்போல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,21,143 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

இது கடந்த 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களை காட்டிலும் ஏறக்குறைய 16,500 யூனிட்கள், அதாவது 8% அதிகமாகும். ஏனெனில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 2,04,659 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஸ்கூட்டரை வாங்க நினைக்கும் பலரது முதன்மையான தேர்வாக ஆக்டிவா உள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

எந்த அளவிற்கு ஆக்டிவாவை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை உள்ளது என்றால், ஆக்டிவா கடந்த மாதத்தில் 2,21,143 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்க, இதற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 70,075 ஆகும். அதாவது ஆக்டிவாவிற்கும், ஜுபிட்டருக்கும் இடையே கிட்டத்தட்ட 1.5 லட்ச யூனிட்கள் வித்தியாசம் உள்ளது. ஆனால் உண்மையில், 2021 ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜூபிட்டரின் விற்பனை சுமார் 53.5% அதிகரித்துள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

ஏனென்றால், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 45,625 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களையே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. அந்த மாதத்தில் ஜூபிட்டரை முந்திக்கொண்டு, 2வது இடத்தை பிடித்திருந்த சுஸுகி ஆக்ஸஸ் இம்முறை 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் 49,135 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 40,375 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களையே சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

இந்த வகையில் பார்க்கும்போது, ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 17.8% குறைந்துள்ளது. 4வது இடத்தில் மற்றுமொரு ஹோண்டா ஸ்கூட்டராக டியோ 29,714 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 26,897 டியோ ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

இதேபோல் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஏறக்குறைய 26 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த டிவிஎஸ் எண்டார்க் கடந்த மாதத்தில் 27,649 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள ஹீரோ பிளஷர்+ 6வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பிளெண்டர் மூலம் பைக்குகள் விற்பனையில் கோலோச்சி விளங்கினாலும், ஹீரோ பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக பிளஷர்+ மாடல்தான் உள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

கடந்த மாதத்தில் மொத்தம் 16,589 பிளஷர்+ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில் இதனை காட்டிலும் ஏறக்குறைய 600 பிளஷர்+ ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 7வது இடத்தில் சுஸுகியின் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலான பர்க்மேன் ஸ்ட்ரீட் 12,146 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!! பலர் தேர்வு செய்யும் டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டு போங்க...

8வது இடத்தை ஹீரோ டெஸ்டினி தனதாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் 11,213 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள டெஸ்டினியின் விற்பனை ஆனது 2021 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களை யமஹா ஸ்கூட்டர்களான ரே இசட்.ஆர் மற்றும் ஃபேஸினோ முறையே 10,124 மற்றும் 9,150 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்த்துள்ளன.

Rank Top 10 Scooters Aug-22 Aug-21 Growth (%) YoY
1 Honda Activa 2,21,143 2,04,659 8
2 TVS Jupiter 70,075 45,625 53.5
3 Suzuki Access 40,375 49,135 -17.8
4 Honda Dio 29,714 26,897 10.4
5 TVS Ntorq 27,649 26,288 5.1
6 Hero Pleasure+ 16,589 17,200 -3.5
7 Suzuki Burgman Street 12,146 11,011 10.3
8 Hero Destini 11,213 8,253 35.8
9 Yamaha RayZR 10,124 16,064 -36.9
10 Yamaha Fascino 9,150 18,037 -49.2
Most Read Articles
English summary
Top 10 scooters august 2022 honda activa continued to finish on top
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X