களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

விலையுயர்ந்த கார்களை வைத்திருந்தாலும், சிலருக்கு மோட்டார்சைக்கிள்களில் செல்வது என்றாலே தனி சுகம். இருப்பினும் அதேநேரம், இந்தியாவில் ஸ்கூட்டர்களும் கணிசமான எண்ணிக்கையில் ஒவ்வொரு மாதம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் ஸ்கூட்டர்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

இந்த செய்தியில் நாம், கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி பார்ப்போம். இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள முதல் 10 மாடல்கள் மட்டுமே கடந்த மாதத்தில் மொத்தம் 2,28,045 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.44% குறைவாகும்.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

ஏனெனில் அந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர் மாடல்களின் மொத்த யூனிட்களின் எண்ணிக்கை 3,01,820 ஆகும். கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் வழக்கம்போல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா ஆகும். இந்தியாவின் ஃபேவரட் ஸ்கூட்டரான ஆக்டிவாவை கடந்த மாதத்தில் மொத்தம் 1,04,417 யூனிட்கள் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

ஆக்டிவா உள்பட இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் முன்னணி ஸ்கூட்டர்களின் விற்பனை 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பரில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2020 டிசம்பரில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மொத்தம் 1,34,977 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த பிரபலமான ஸ்கூட்டரின் விற்பனை கிட்டத்தட்ட 22.64% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 38,142 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. பெரும்பாலும் இந்த இரண்டாவது இடத்தை சுஸுகி மோட்டார்சைக்கிளின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் தான் பிடிக்கும். ஆனால் இம்முறை ஆக்ஸஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜூபிட்டரின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் குறைவில்லை.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

வெறும் 0.76% மட்டுமே குறைந்துள்ளது. அந்த மாதத்தில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் வெறும் 293 யூனிட்கள் மட்டுமே அதிகமாக 38,435 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது இடத்திற்கு சரிந்துள்ள சுஸுகி ஆக்ஸஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 25,358 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் ஆக்ஸஸின் விற்பனை எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்திருந்தது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

நான்காவது இடத்தை மற்றொரு டிவிஎஸ் தயாரிப்பான என்டார்க் 16,859 யூனிட்களின் விற்பனை உடன் தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஆனால் இந்த டிவிஎஸ் மாடலின் விற்பனை மற்ற ஸ்கூட்டர்களுக்கு இணையாக வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 34.38% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. ஏனெனில் 2020 மாதத்தில் 25,692 என்டார்க் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவை அனைத்தும் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதிகப்பட்சமாக ஹீரோ பிளஷர் 9,205 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் பிளஷர் ஸ்கூட்டர்களின் விற்பனை இதனை காட்டிலும் ஏறக்குறைய 10 ஆயிரம் யூனிட்கள் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

பிளஷரின் விற்பனையாவது பரவாயில்லை, ஹோண்டா டியோவின் விற்பனை 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் சுமார் 60.79% குறைந்துள்ளது. 2020 டிசம்பரில் 22,025 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதத்தில் வெறும் 8,637 டியோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

டியோவின் விற்பனை இவ்வாறு இருக்க, இதற்கடுத்து 7வது இடத்தில் உள்ள யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை இதற்கு நேர்மறையாக 2020 டிசம்பரை காட்டிலும் 36.81% அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில் 6,180 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதனை காட்டிலும் 36.81% அதிகமாக 8,455 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

மற்றொரு யமஹா ஸ்கூட்டரான ரே இசட்.ஆர் இந்த டாப்-10 லிஸ்ட்டில் எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,781 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 33.48% அதிகமாக 8,690 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

களையிழந்து போன ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை!! இளைஞர்களின் இரசனை மாறிடுச்சா?

ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை காட்டிலும் சில யூனிட்கள் மட்டுமே குறைவாக 5,766 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள சுஸுகி பர்க்மேன் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்த வரிசையில் 9வது இடத்தில் உள்ளது. இது 2020 டிசம்பரில் விற்கப்பட்ட பர்க்மேன் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் சுமார் 116.28% அதிகமாகும். கடைசி பத்தாவது இடத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ 5,425 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 scooters dec 2021 honda dio down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X