மைலேஜை பற்றி கவலையே பட தேவையில்லை... எலக்ட்ரிக் 2-வீலர்களில் அதிக ரேஞ்சை வழங்கும் 6 மாடல்கள்!!

நாங்கள் ஏற்கனவே கூறி வருவதுதான், நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கவனிக்கத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் தற்போதைக்கு உள்ள ஒரே குறை என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பரவலாக இல்லை என்பதே.

முக்கிய மாநகரங்களிலும், இதர சில நகரங்களிலும் சில நிறுவனங்களின் சார்ஜிங் மையங்கள் உள்ளன என்றாலும் அவற்றை உபயோகித்து எலக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட தொலைவிற்கு பயணிக்க முடிவதில்லை என்கிற குறை இருக்க தான் செய்கிறது. இருப்பினும் அதிக ரேஞ்ச் உடன் கிடைக்கக்கூடிய 6 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ரேஞ்ச் என்பது ஒரு 2-வீலரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.

அதிக ரேஞ்ச் உடன் கிடைக்கக்கூடிய 6 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ரேஞ்ச் என்பது ஒரு 2-வீலரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.

1. அல்ட்ராவொய்லெட் எஃப்77

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அல்ட்ராவொய்லெட்டின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக். இன்னும் சொல்லபோனால் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் அல்ட்ராவொய்லெட் எஃப்77 ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சூப்பர் பைக்கில் 10.3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலம் பைக்கை அதிகப்பட்சமாக 307கிமீ வரையில் ஓட்டி செல்ல முடியும். எஃப்77 பைக்கின் அதிகப்பட்ச வேகம் 147kmph ஆகும்.

2. ஐவூமி எஸ்1 (iVooMi S1)

புனேவை தலைமையிடமாக கொண்ட எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஐவூமி எனர்ஜி ஆகும். இந்த நிறுவனத்தின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.2kWh இரட்டை ரிமூவபல் பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலமாக 240கிமீ வரையிலான ரேஞ்ச்சை பெற முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 4.2kWh பேட்டரிகளுக்கு 3 வருடத்திற்கான உத்தரவாதத்தை ஐவூமி எனர்ஜி நிறுவனம் வழங்குகிறது.

3. கோமகி ரேஞ்சர்

கோமகி ரேஞ்சர் ஆனது க்ரூஸர் ஸ்டைலிலான எலக்ட்ரிக் பைக் ஆகும். இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கான இதில் 4 கிலோவாட்ஸ் பிஎல்டிசி மோட்டார் 3.6kWh பேட்டரி உடன் வழங்கப்படுகிறது. இவை அதிகப்பட்சமாக 220கிமீ தொலைவிற்கு சிங்கிள்-முழு சார்ஜில் பைக்கை கொண்டு செல்லக்கூடியவைகளாக உள்ளன. இந்த க்ருஸர் எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு 80kmph ஆகும். ரூ.1.85 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு இந்த அதிகப்படியான விலை தான் சற்று பின்னடைவாக உள்ளது.

4. ஒபென் ரோர்

கேடிஎம் ட்யூக் பைக்குகளை போன்று நாக்டு தோற்றம் கொண்ட எலக்ட்ரிக் பைக் தான் ஒபென் ஆகும். இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கக்கூடியதாக உள்ள ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கில் 4.4kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலம் அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு பைக்கை இயக்கி செல்ல முடியும். 200கிமீ என்பது டெஸ்ட் கண்டிஷன்களில் மட்டுமே, அப்படியென்றால் நிஜ உலக வாழ்க்கையில் இந்த எலக்ட்ரிக் பைக் 150கிமீ என்ற அளவில் ரேஞ்சை வழங்கும்.

5. ஓலா எஸ்1 ப்ரோ

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலைமிக்கதாக விளங்கும் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டில் 4kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இது 181கிமீ வரையில் ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. மேற்கூறப்பட்ட 4 எலக்ட்ரிக் 2-வீலர்களை போன்று எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் 181கிமீ ரேஞ்சும் டெஸ்ட் கண்டிஷனில் மட்டுமே கிடைக்கக்கூடியது. நிஜ உலக வாழ்வில் சற்று குறைவாகவே கிடைக்கும். அதேநேரம் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்போர்ட் மோடில் 102கிமீ வரையிலும், நார்மல் மோடில் 127கிமீ வரையிலும் மட்டுமே ரேஞ்சை பெற முடியும்.

6. டார்க் க்ராடோஸ்/ க்ராடோஸ் ஆர்

டார்க் மோட்டார்ஸ் (Tork Motors)-இன் க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகள் 180கிமீ ரேஞ்சை டெஸ்ட் கண்டிஷனில் வழங்கக்கூடியவை. இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளிலும் 4kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. ஆனால் க்ராடோஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்திலும், க்ராடோஸ் ஆர் வேரியண்ட்டில் 105கிமீ வேகத்திலும் பயணிக்க முடியும். கூடுதல் வேகம் கிடைப்பது மட்டுமின்றி, க்ராடோஸ் ஆர் பைக்கில் கூடுதலாக சில வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Top electric two wheelers for range in india
Story first published: Saturday, December 31, 2022, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X