புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

டார்க் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் புதிய பெயரில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. என்ன தேதியில் இந்த பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்சைக்கிள்கள் (Tork Motorcycles) நிறுவனம் மிக விரைவில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த (ஜனவரி) மாதத்தின் கடைசி வாரத்திற்குள் அதன் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

டார்க் டி6எக்ஸ் (Tork T6X) எனும் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் அறிமுகமே மிக விரைவில் நாட்டில் அரங்கேற இருக்கின்றது. ஆனால், இப்-பைக் க்ரடோஸ் (Tork Kratos) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

2016ம் ஆண்டிலேயே இதன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் வெளியீடு கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அரங்கேறியது. தற்போது எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகள் மிக தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த மாதத்தின் இறுதி வாரத்தை பைக்கை அறிமுகம் செய்ய நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

டார்க் க்ரடோஸ் ஓர் இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் பைக்காகும். இந்த பைக்கில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக வேக இயக்க திறனை வழங்கும். இத்துடன், பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயன் பேட்டரி அதிக ரேஞ்ஜை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

இந்த பைக் பல முறை சாலையில் காட்சியளித்தது குறிப்பிடத்தகுந்தது. பல பரீட்சைக்கு உட்படுத்தியபோதே அது கேமிராவின் கண்களில் சிக்கியது. ஆனால், டி6எக்ஸ் எனும் பெயரிலேயே அது அதன் தரிசனத்தை வழங்கியது. இந்த தரிசனத்தின் வாயிலாக டார்க் டி6எக்ஸ் மின்சார பைக் எஃப்இசட் பைக்கைப் போல் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

ஸ்பிளிட் இருக்கை, எல்இடி மின் விளக்கு மற்றும் பைக்கின் ஃப்ரேம் உள்ளிட்டவை யமஹா எஃப்இசட் 16 பைக்கைப் போலவே காட்சியளிக்கின்றது. இதேபோல் முன்னதாக வெளி வந்த தகவல்கள், இந்த பைக் மணிக்கு 100 கிமீ வேகம் மற்றும் ஒற்றை சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்தன.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. டார்க் க்ரடோஸ் புக்கிங் பணிகள் அறிமுகத்தைத் தொடர்ந்து தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் டெலிவரி பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கின்றன.

புதிய பெயரில் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாகிறது டார்க்-இன் எலெக்ட்ரிக் பைக்! இதோ முழு விபரம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே நாட்டு மின் வாகன பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த எலெக்ட்ரிக் அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மின்சார இருசக்கர வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்.

Most Read Articles
English summary
Tork kratos e motorcycle to be launched in this month last week
Story first published: Tuesday, January 4, 2022, 20:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X