Just In
- 1 hr ago
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- 3 hrs ago
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- 3 hrs ago
பஜாஜ் பிளாட்டினா, ஹீரோ ஸ்பிளெண்டரை இது மென்னு முழுங்கிடும்! தினமும் பயன்படுத்துறதுக்கு உகந்த இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Lifestyle
இந்த 6 சூப்பர் உணவுகள் ஆண்-பெண் இருவரின் கருவுறுதலையும் அதிகரித்து விரைவில் பெற்றோராக உதவுமாம்...!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Technology
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- News
சர்ச்சைக்குரிய சேது சமுத்திரத் திட்டம் - அரசாங்க உண்மைகளை புட்டுப் புட்டு வைத்த டி.ஆர்.பாலு!
- Movies
வாயில் பீடி.. கையில் சரக்கு.. மிரட்டலான லுக்கில் நானி.. தசரா டீசர் எப்படி இருக்கு!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பழைய பைக்கை விட்டுட்டு புதிய பைக்கை ஓட்டி போகும் நேரம் வந்தாச்சு.. இந்த மாதிரி ஆஃபர் கிடைக்கிறது எல்லாம் ரேர்!
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தின்கீழ் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அணுகுவது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் டார்க் மோட்டார்ஸ். இந்த நிறுவனமே எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆண்டு நிறைவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றையே எக்ஸ்சேஞ்ஜ் வாயிலாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அந்-நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. எந்த பிராண்டின் பழைய வாகனமாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளளாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர் மற்றும் பைக் என எந்த டூ-வீலாராக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக நிறுவனம் கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. யூஸ்டு டூ-வீலர்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த க்ரெட்ஆர்.
இது பழைய இருசக்கர வாகனத்தை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய ஓர் நிறுவனத்துடனேயே டார்க் மோட்டார்ஸ் தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கிரெட்ஆர்-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை விசிட் செய்ய வேண்டும். இங்கு பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்வதற்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கிரெட்ஆர் நிறுவனத்திற்கு 120 செக் பாயிண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அங்கு நம்முடைய பழைய வாகனத்தை சமர்பித்தால் அவர்கள் அந்த வாகனத்திற்கான மதிப்பை ஆய்வை செய்து வழங்குவர். இவர்கள் கொடுக்கக் கூடிய மதிப்புகளின் அடிப்படையிலேயே புதிய டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கு தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ளை தொகையை வாடிக்கையாளர்கள் வங்கி கடன் அல்லது கேஷ் என எந்த வழிகளில் வேண்டுமானாலும் கொடுத்து எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ளலாம். இந்த சிறப்பு ஆஃபரை டார்க் மோட்டார்ஸ் சற்றே கஞ்சத் தனத்துடன் மட்டுமே அறிவித்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. புனே மற்றும் பெங்களூரு நகர வாசிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. க்ரடோஸ் ஆர் வேரியண்டைக் காட்டிலும் க்ரடோஸ் சற்றுக் குறைந்த திறன் கொண்டதாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1.22 லட்சம் ஆகும். இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை.
இதைவிட 15 ஆயிரம் ரூபா அதிக விலைக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது. டார்க் க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச் திறன் வெளிப்பாடு 7.5kW. கிளட்ச் இல்லா சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதைக் காட்டிலும் அதிக வசதிக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 9.0 கிலோவாட். இதன் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும்.
இதிலும், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, நான்கு விதமான ரைடிங் மோட்கள், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான பைக்கையே டார்க் மோட்டார்ஸ் தற்போது எக்ஸ்சேஞ்ஜ் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
-
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
-
ராயல் என்பீல்டு மீட்டியோரே தோத்திடும்போல... இந்தியர்களுக்கு பிடிச்ச ஸ்டைலில் புதிய க்ரூஸரை தயாரிக்கும் ஒகினவா!
-
மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...