ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இன்று (ஜன.26) குடியரசு தினத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகால வடிவமைப்பு பணிகளுக்கு பிறகு ஒருவழியாக புனேவை சேர்ந்த டோர்க் மோட்டார்ஸ் அதன் எலக்ட்ரிக் பைக்காக க்ராடோஸை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்தில் இதன் அறிமுக தேதியாக தேசிய குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

அறிவித்தப்படி, தற்போது டோர்க் க்ராடோஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இணையத்தில் டோர்க் மோட்டார்ஸின் இணைய பக்கம் வாயிலாக தங்களுக்கான க்ராடோஸ் பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்தொகையாக வெறும் ரூ.999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவிரிகள் வருகிற 2022 மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

முதன்முதலாக டி6எக்ஸ் என்கிற குறியீட்டு பெயரில் டோர்க் க்ராடோஸ் கடந்த 2016இல் பொது பார்வைக்கு காட்டப்பட்டது. ஆனால் அதன்பின்பே இந்த எலக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பு & மேம்பாட்டு பணிகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்தது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, பிறகு கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக விளங்கும் கிராடோஸ் மற்ற மாடர்ன் பைக்குகளுக்கு இணையான வளைவுகளையும், கோண மாடர்ன் டிசைனையும் கொண்டுள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

இவற்றுடன் கூடுதலாக, டோர்க் மோட்டார்ஸின் இந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் புதிய மற்றும் ரீடிசைனிலான ட்ரெல்லிஸ் சட்டகத்தை பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை இரு சக்கரங்களிலும் உள்ள டிஸ்க் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் என்கிற இரு இ-பைக்குகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் க்ராடோஸ் மாடலின் விலை ரூ.1,92,499 ஆகவும், க்ராடோஸ் ஆர் மாடலின் விலை ரூ.2,07,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் மாநில அரசுகள் கொடுக்கும் மானியங்களை பொறுத்து வேறுப்படக்கூடும். அதாவது, இத்தகைய மானியங்களினால் இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.10 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் வரையில் குறைய கூட வாய்ப்புள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

இந்தியாவில் ஒவ்வொரு கட்டமாக குறிப்பிட்ட நகரங்களாக க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்கை சந்தைப்படுத்த டோர்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, புனே மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், இரண்டாவது கட்டமாக இந்தியாவின் 100 நகரங்களுக்கும் டோர்க் க்ராடோஸை இந்த புனே இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

க்ராடோஸில் 28 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 7.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதுவே க்ராடோஸ் ஆர் மாடலில் 38 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 9 கிலோவாட்ஸ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சந்தையில் விற்பனை செய்யப்படும் மற்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிட்டோமேயானால், ரிவோல்ட் ஆர்வி400-இல் 3 கிலோவாட்ஸ் மோட்டாரும், ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 கிலோவாட்ஸ் மோட்டாரும் பொருத்தப்படுகிறது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

இவற்றின் உதவியுடன் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்கில் 0-வில் இருந்து 40kph வேகத்தை 4 வினாடிகளிலும், க்ராடோஸ் ஆர் பைக்கில் சற்று விரைவாக 3.5 வினாடிகளிலும் எட்டிவிடலாம். இவை இரண்டின் டாப்-ஸ்பீடு முறையே 100kph மற்றும் 105kph ஆகும். இவை இரண்டிலும் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற 3 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இவற்றில் ரிவர்ஸ் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

சங்கிலி மூலமாக இயக்க ஆற்றலை பின் சக்கரத்திற்கு வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் பைக்கின் மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது. இரு க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகளிலும் இந்த மத்திய மோட்டாரில் 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு அலுமினியம் பாதுகாப்பான் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரிக்கு ஐபி67 வானிலை பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1.07 லட்சத்தில் டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்!! ஆற்றல்மிக்க மோட்டார் & 3 ரைடிங் மோட்கள்

சோதனைகளில் இரு க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகளும் 180கிமீ ரேஞ்சை வழங்கியுள்ளன. இதனால் உண்மை உலக ரேஞ்ச் 120கிமீ என்ற அளவிலாவது இருக்கும். சார்ஜிங் வசதிக்கு வீட்டு உபயோக சார்ஜர் (1 மணிநேரத்தில் 25% நிரப்பிவிடும்) மற்றும் விரைவு சார்ஜர் (க்ராடோஸ் ஆர் மாடலுக்கு பொருந்தாதாம்) என சார்ஜர்கள் வழங்கப்பட உள்ளன. இதில் விரைவு சார்ஜரின் உதவியுடன் க்ராடோஸின் பேட்டரியை வெறும் 1 மணிநேரத்தில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என்கிறது டோர்க் மோட்டார்ஸ்.

Most Read Articles
English summary
Tork Motors Kratos And Kratos R Launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X