விற்பனைக்கு வந்த எல்லா யூனிட்டுகளும் காலி... அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு கிடைத்த அமோக வரவேற்பு!

டிவிஎஸ் நிறுவனம் அண்மையில் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி எனும் சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த இந்த பைக்கின் அனைத்து யூனிட்டுகளும் தற்போது விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ், அதன் புகழ்பெற்ற அப்பாச்சி பைக் மாடலில் புதிய தேர்வை மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி (TVS Apache RTR 165 RP) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

இது ஓர் மிக சிறந்த திறன் வெளிப்பாடு (performance) வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிளாகும். இதனைக் குறிக்கும் வகையிலேயே பைக்கின் பெயரில் ஆர்பி என சேர்க்கப்பட்டுள்ளது. இது ஓர் சிறப்பு பதிப்பு வாகனம் என்பதனால் இதனைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கியது, டிவிஎஸ் நிறுவனம்.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

200 யூனிட்டுகள் மட்டுமே களமிறக்கப்பட்டன. இவையனைத்தும்தான் தற்போது விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எவ்வளவு வேகத்தில் விற்பனையாகியது என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளியிடப்படவில்லை.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அன்றே இந்தியாவில் தொடங்கியது. இப்பணிகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் பத்து நாட்கள் ஆகிவிட்டன. இதற்குள்ளாகவே அனைத்து யூனிட்டுகளும் இந்தியாவில் விற்று தீர்ந்திருப்பது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இருசக்கர வாகன உலகையே மிரள வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

எதிர்காலத்தில் முழு வீச்சில் ஆர்பி ரக இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் முன்னோட்டமாக குறைந்த எண்ணிக்கையில் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது வழக்கமான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாடுக் கொண்டது ஆகும்.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

இதற்கு வழங்கப்பட்டிருக்கும் தோற்றமும்கூட மோட்டார்சைக்கிளை அதிக திறன் வெளிப்பாடு கொண்டது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுபட்டு காணப்பட வேண்டும் என்பதற்காக இந்த பைக்கில் சிற அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

அந்தவகையில், கிராஃபிக்குகள் மற்றும் நிறங்கள் சற்றே வித்தியாசமானதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவையே, அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளை ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனத்தைபோல் காட்சியளிக்க உதவுகின்றன. இத்துடன், அதிக திறன் வெளிப்பாட்டை வழங்கக் கூடிய 164. சிசி சிங்கிள் சிலிண்டர் 4 வால்வுகள் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாகக 18.9 பிஎச்பி மற்றும் 14.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. வழக்கமான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் 159.7 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 17.3 பிஎச்பி பவர் மட்டும் 14.73 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

டிவிஎஸ் நிறுவனம் குறைவான விலையில் ரேஸ் பயன்பாட்டு வசதிக் கொண்ட டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இப்புதிய அழகான ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றம் கொண்ட பைக்கை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

ஆர்பி என்பது ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் என்பதை குறிக்கின்றது. இந்த பெயரில் இன்னும் சில இருசக்கர வாகன மாடல்களை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்த பைக்கில் இத்தகைய அதிகளவுக் கொண்ட டிஸ்கைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைக்கு வந்த அனைத்தும் யூனிட்டுகளும் காலி... டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

தொடர்ந்து, அதிக செயல்திறனுக்காக புதிய சிலிண்டர் ஹெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 35 சதவீத கூடுதல் இன்டேக் மற்றும் ட்வின் எலக்ட்ரோட் ஸ்பார்க் பிளக்கை வழங்கும். தொடர்ந்து, நிறுவனம் போர் ஸ்ட்ரோக்கையும் மறு சீரமைப்பு செய்திருக்கின்றது. இதுதவிர, இது ஓர் பிரத்யேக வாகனம் என்பதால் தனித்துவமான ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கை மிடுக்கான ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போன்று காட்சியளிக்கச் செய்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs apache rtr 165 rp limited edition all units sold out
Story first published: Monday, January 3, 2022, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X