ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஒரு நாள் ஓட்டுவதற்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube). இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) என மூன்று வேரியண்ட்களில் 2022 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய வேரியண்ட்களில் 3.4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டில் 5.1 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 140 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்யூப் வேரியண்ட்டின் விலை 99,130 ரூபாய் ஆகும். மறுபக்கம் ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விலை 1,04,123 ரூபாயாக உள்ளது. இது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விற்பனை செய்யப்படும் ஆன் ரோடு விலையாகும்.

மேலும் இவை ஃபேம்-2 (FAME-2) மற்றும் மாநில அரசின் மானியங்களுக்கு பிறகான விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டின் விலையை டிவிஎஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் 999 ரூபாயை முன்பணமாக செலுத்தி ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டை தற்போது முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

நகர பகுதிகளில் வழக்கமாக ஓட்டுகிறீர்கள் என்றால், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஒரு நாளைக்கு வெறும் 3 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் (Running Cost) என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம்? எப்படி ஓட்டுகிறோம்? என்பதையெல்லாம் பொறுத்து இந்த செலவு மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த சூழலில் டிவிஎஸ் நிறுவனம் டெல்லியில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தற்போது டெலிவரி செய்துள்ளது. இந்த பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்ச்சி கடந்த நவம்பர் 13ம் தேதி (நேற்று) நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, டெல்லியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

இதில், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் வேரியண்ட்கள் அடங்குகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டி அதிகரிக்கலாம்.

ஏனெனில் இந்திய சந்தையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஏராளமான முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஹோண்டா (Honda) மற்றும் யமஹா (Yamaha) போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Most Read Articles
English summary
Tvs iqube electric scooter mega delivery event
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X