நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

நமது தமிழக டிவிஎஸ் தயாரிப்பு ஒன்று நாடு கடந்து வங்காள தேசத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் எந்த தயாரிப்பு அது என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இந்தியாவின் முன்னணி இருசக்கர தயாரிப்பு நிறுவனங்களுள் டிவிஎஸ் மோட்டாரையும் ஒன்றாக சொல்லலாம். இந்தியா மட்டுமின்றி, உலகளவில பல நாடுகளில் டிவிஎஸ் -இன் தயாரிப்பு வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டிவிஎஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை உள்ளது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி (Apache RTR160 2-Valve) வங்காள தேசத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கிழக்கு பகுதியில் உள்ள இந்த சிறிய நாட்டிற்கு சென்றிருக்கும் இந்த 160சிசி அப்பாச்சி பைக்கில் மிக முக்கிய அம்சமாக ஏபிஎஸ் (ஆண்டி-பிரேக் சிஸ்டம்) வழங்கப்பட்டுள்ளது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

ரேஸ் ட்ராக்குகளில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட இந்த ஏபிஎஸ் ஆனது வளைவுகளில் வேகத்தை இழக்காமல் விரைவாக திரும்ப வழிவகுக்கிறது. அத்துடன் உடனடி நிறுத்தத்திற்கும் அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கில் வழங்கப்படும் சிங்கிள்-சேனல் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் உதவக் கூடியது. இதே ஏபிஎஸ்-ஐ இந்தியாவில் விற்கப்படும் அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கிலும் டிவிஎஸ் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இந்த பைக்கில் 159.7சிசி சிங்கிள்-சிலிண்டர் 2-வால்வு SOHC ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. வங்காள தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 14.14 பிஎஸ் மற்றும் 6,750 ஆர்பிஎம்-இல் 13.03 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

ஃப்யுல்-இன்ஜெக்டட் வகையை சேர்ந்த என்ஜினான இதில் க்ளைட் த்ரூ தொழிற்நுட்பமும் வழங்கப்படுகிறது. போக்குவரத்தில் குறைந்த வேகத்தில் செல்லும்போது என்ஜினில் இருந்து டார்க் திறனை சீராக பெறுவதில் இந்த க்ளைட் த்ரூ தொழிற்நுட்பமானது மிகவும் உதவிகரமானதாக உள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கில் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் முன்பக்கத்தில் 270மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 130மிமீ ட்ரம் பிரேக்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றை ஏபிஎஸ் கட்டுப்படுத்துகிறது. வலிமையான சின்ரோ சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த அப்பாச்சி பைக்கில் நேரான சாலைகளில் பயணிக்கும்போதும், அதேநேரம் வளைவுகளில் திரும்பும்போதும் போதுமான கண்ட்ரோல் எளிதாகவே கிடைக்கிறது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இந்திய சந்தையில் அப்பாச்சி பைக்குகள் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனையில் முதுக்கெலும்பாக திகழ்கின்றன. குறிப்பாக, தற்போது வங்காள தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி மோட்டார்சைக்கிளானது டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த 160சிசி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 30 சதவீத பங்கை சாராசரியாக பெறுகிறது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இந்தியாவில் அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கிற்கு தென் பகுதியை காட்டிலும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வடஇந்திய மாநிலங்களிலும், மேற்கத்திய மாநிலங்களிலுமே சந்தை சிறப்பாக உள்ளது. இந்த அப்பாச்சி பைக்கை இந்த 2022ஆம் ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. இதன் மூலமாக புதிய எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதியை அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக் பெற்றுள்ளது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 16.04 எச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 13.85 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முன்பு இந்த என்ஜின் சற்று குறைவாக 8,400 ஆர்பிஎம்-இல் 15.53 எச்பி வரையிலான ஆற்றலையும், சற்று அதிகமாக 7,000 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்பட்டது.

நாடு கடந்து விற்பனைக்கு செல்லும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதெல்லாம் தமிழகத்திற்கே பெருமைங்க...

ஆனால் தற்போது வங்காள தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி பைக்கில் என்ஜின் அதிகப்பட்சமாகவே 14.14 பிஎஸ் மற்றும் 13.03 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே வெளிப்படுத்தும் என டிவிஎஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டின் பகுதியாக ஆர்டிஆர்160 2வி பைக்கின் எடையும் 2 கிலோ வரையில் குறைக்கப்பட்டுள்ளது.அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் 4 வால்வு வெர்சனையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs launches apache rtr 160 2v with abs in bangladesh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X