ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் (TVS Jupiter Classic) ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஐந்து மில்லியன் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரலாற்று நிகழ்வை முன்னிட்டு அந்நிறுவனம் அதன் பிரபல ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் மாடலில் புதிய வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜுபிடர் கிளாசிக் (Jupiter Classic) எனும் வேரியண்டையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

மிக அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனமாக இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. அறிமுகமாக இந்த வாகனத்திற்கு ரூ. 85,866 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஜூபிடர் போட்டியாக இருக்கின்றது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை இரு மடங்காக மாற்றும் நோக்கிலேயே இப்புதிய வேரியண்டின் அறிமுகத்தை டிவிஎஸ் நிகழ்த்தியிருக்கின்றது. நிற அலங்கரிப்பு தொடங்கி கூடுதல் சிறப்பு அணிகலன் சேர்ப்பு வரையில் அனைத்திலும் பெஸ்டான டூ-வீலராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஆகையால், வழக்கமான ஜூபிடரைக் காட்டிலும் மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் இது காட்சியளிக்கின்றது. ஆனால், மெக்கானிக்கல் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் டிவிஎஸ் மேற்கொள்ளவில்லை. ஆமாங்க, வழக்கமான ஜூபிடர் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 109.7 சிசி மோட்டாரே புதிய ஜூபிடர் கிளாசிக் வேரியண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இது ஓர் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். ஃப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பத்துடன் இம்மோட்டாரை டிவிஎஸ் உருவாக்கியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.47 பிஎஸ் பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த இருசக்கர வாகனத்தின் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் ஈகோ மோட் மற்றும் பவர் மோட் என இருவிதமான டிரைவிங் மோட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

என்னென்ன ஸ்பெஷல் காஸ்மெட்டிக் ஜூபிடர் கிளாசிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன?

டிவிஎஸ் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தில் பன்முக சிறப்பு வசதிகளைச் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், கருப்பு நிறத்திலான ஃபெண்டர் கார்னிஷ் இருசக்கர வாகனத்திற்கு கவர்ச்சி லுக்கை வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, டின்டட் விஷர், ஹேண்டில் பார், 3டி லோகோ, வட்ட வடிவ ஸ்டைலான கண்ணாடிகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், அடர் பழுப்பு நிறத்திலான உட்பக்க பேனல்கள் உள்ளிட்டவை ஜூபிடர் கிளாசிக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இவை அனைத்தும் சேர்ந்து ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை மிக உயர்ந்த பிரீமியம் ஸ்கூட்டராக காட்சியளிக்க செய்கின்றன. இந்த லுக்கிற்கு கூடுதல் பலத்தை வழங்கும் வகையில் சூப்பரான மற்றும் ஸ்டைலான இருக்கை ஜூபிடர் கிளாசிக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக மிருதுவான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த இருக்கை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இத்துடன் பிரீமியம் லெதர் போர்வையால் இது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், பின்னிருக்கையாளர்கள் சொகுசான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை பெறும் விதமாக பேக்ரெஸ்ட் பேட் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தாலும் மிக உயரிய ரக வாகனமாக ஜூபிடர் கிளாசிக்கை மாற்றியிருக்கின்றது.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதுதவிர, கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக இந்த இருசக்கர வாகனத்தில் ஆல்-இன்-ஒன் லாக் சிஸ்டம், எஞ்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும் ஜூபிடர் கிளாசிக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இருசக்கர வாகனத்தை இரு விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்பிள் ஆகிய நிற தேர்வுகளே அவை ஆகும். மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ஜூபிடர் கிளாசிக்கின் முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், கேஸ் சார்ஜட் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவையே சாப்பிட்டுவிடும்போல... வேற லெவல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த கேஸ் சார்ஜட் ஷாக் அப்சார்பரை மூன்று வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இவற்றுடன் அனைத்து சாலைகளையும் சமாளிக்கின்ற வசதிக் கொண்ட ட்யூப்லெஸ் டயர்களே புதிய வேரியண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர, சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், எலெக்ட்ரிக் ஸ்டார்டர், லோ ஃபூயவல் வார்னிங், பேக்குகளை தாங்கிக் கொள்ளும் ஹூக் மற்றும் வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வாய் பகுதி உள்ளிட்ட வசதிகளும் ஜூபிடர் கிளாசிக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs launches jupiter classic varient in india at inr 85866
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X