ஜெர்மன் நிறுவனத்தையே வளைச்சுபோட்ட டிவிஎஸ் நிறுவனம்... தமிழ்நாட்டு நிறுவனத்தின் தரமான சம்பவம்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிஎஸ் மோட்டார் பிடிஇ. லிமிடெட் வாயிலாகவே இந்த கொள்முதலை நிறுவனம் நிகழ்த்தியிருக்கின்றது. இது நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவாகும்.

இதுவே, ஜெர்மன் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையொப்பம் செய்திருக்கின்றது. டிவிஎஸ் கையகப்படுத்த இருக்கும் இந்த நிறுவனம் ஓர் மின்சார வாகனம் சார்ந்து இயங்கும் நிறுவனம் ஆகும். மின் வாகனங்களுக்கு தேவையான முக்கிய கருவிகளை உருவாக்குதல் போன்ற பல முதன்மையான பணிகளை அது ஜெர்மனியில் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய ஓர் நிறுவனத்தையே ஓசூரை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் கையகம் செய்திருக்கின்றது.

டிவிஎஸ்

நிறுவனத்தின் இந்த கொள்முதல் டிவிஎஸ் நிறுவனம் மின்சார வாகன சந்தையில் மேலும் மிக ஆழமாக காலூன்ற இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நல்ல டிமாண்டைப் பெற்று வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றே. இதுபோன்று இன்னும் பல சூப்பரான எலெக்ட்ரிக் வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் டிவிஎஸ் அதன் மின் வாகன தொழில் பிரிவை விரிவுப்படுத்தும் என்பது இந்த லேட்டஸ்ட் கொள்முதல் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவின் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே டிவிஎஸ்-இன் இந்த ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த வாகனத்திற்கு ஐபி67 மற்றும் ஏஐஎஸ் 156 தர சான்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பானது மற்றும் தண்ணீரால் இந்த வாகனம் பாதிப்படையாது என்பதற்கான சான்றே இதுவாகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ட்வின் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்க உதவும். இத்துடன், அகலமான 90/90-12 டயரும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது இந்தியாவின் கரடு, முரடான மற்றும் ஏற்றம்- தாழ்வான சாலைகளைச் சமாளிக்க ஏதுவானது ஆகும். இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பம்சமாக மிக சௌகரியமான இருக்கை, எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் ஃபுல் சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் அளவிலான ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ப்ளூடூத் இணைப்பு, கிளவுட் இணைப்பு, லைவ் டிராக்கிங், நோடிஃபிகேஷன், ஆன்டி தெஃப்ட் அலர்ட் உள்ளிட்ட அம்சங்களும் ஐக்யூபில் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு அம்சமாக 7 அங்குல தொடுதிரை, 5 வே ஜாய் ஸ்டிக், அலெக்ஸா உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அம்சங்களே பலரின் மனம் கவர்ந்த வாகனமாக டிவிஎஸ் ஐக்யூப் மாற காரணமாக இருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றில் முதல் இரு வேரியண்டுகளுக்கு மட்டுமே புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்ய ரூ. 999 இருந்தால் மட்டுமே போதுமானது. சென்னையில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 936 என்கிற ஆன்-ரோடு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டான ஐக்யூப்-இன் விலை ஆகும். இதன் ஐக்யூப் எஸ் வேரியண்டிற்கு ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 057 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மிகக் குறைவான நகரங்களில் மட்டுமே இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

ஆனால், இப்போது 100க்கும் மேற்பட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதன் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரின் ஐக்யூப் வேரியண்டில் 5 அங்குல திரையும் மற்ற இரு வேரியண்டுகளில் 7 அங்குல திரையும் வழங்கப்பட்டிருக்கும். இந்த திரையில் டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கும். இதன் வாயிலாகவே நேவிகேஷன், மொபைல் இணைப்பு உள்ளிட்ட முக்கிய வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

திரை விஷயத்தில் மட்டுமல்ல பேட்டரி பேக் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறப்பான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. தன் டாப் வேரியண்டில் ஓர் ஃபுல் சார்ஜில் 145 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜிற்காக டாப் வேரியண்டில் 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் வேரியண்டுகளில் 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs singapore acquire assets germany
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X