டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

நம் இந்தியர்கள் பொதுவாகவே மோட்டார்சைக்கிள் பயணத்தை மிகவும் விரும்பக்கூடியவர்கள். இதனாலேயே ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் 2-வீலர்ஸ் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

நம் நாட்டு சந்தையில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்று பார்த்தால், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த செய்தியில் இதில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் அதிகளவில் 2-வீலர்ஸை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களை பற்றி பார்ப்போம்.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை சார்ந்தே இருக்கும் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் கடந்த சில மாதங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த மாதத்தில் அதிகளவில் 2-வீலர்ஸை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் லிஸ்ட்டில் ஒகினாவா, ஹீரோ எலக்ட்ரிக் போன்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

இருப்பினும் வழக்கம்போல் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் ஹீரோ மோட்டார்கார்ப் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. மொத்தம் 3,96,278 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. ஆனால் உண்மையில், ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 29.47% குறைந்துள்ளது.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 5,61,873 2-வீலர்ஸை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமின்றி, ஒமிக்ரான் வைரஸ் பரவல் மற்றும் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இருசக்கர வாகன பிராண்ட்களின் விற்பனை 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளன.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் 2,84,837 யூனிட்களின் விற்பனை உடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இதன் விற்பனையும், 3,52,394 ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டிருந்த 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 19.17% குறைவாகும். ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா பிராண்ட்களில் இருந்து விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த மாதத்தில் 1,73,993 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் கடந்த மாத விற்பனை 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 15.36% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமாக 2-வீலர்ஸை இந்த ஓசூரில் தொழிற்சாலையை கொண்டுள்ள நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

புனேவை தலைமையிடமாக கொண்ட பஜாஜ் ஆட்டோ இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் இந்த நிறுவனத்தில் இருந்து மொத்தம் 1,43,528 யூனிட் 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1,61,713 பஜாஜ் 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டிருந்த 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 11.25% குறைவாகும்.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ பிராண்ட்களில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போதுவரையில் பார்த்துள்ள இந்த நான்கு 2-வீலர்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே கடந்த மாதத்தில் மட்டுமில்லாமல், பெரும்பாலும் எல்லா மாதங்களிலும் விற்பனையில் 1 லட்சத்தை கடக்கின்றன. இதற்கு கீழ் உள்ளவைகளான சுஸுகி மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு மற்றும் யமஹா நிறுவனங்களின் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 42,609, 40,102 மற்றும் 37,621 ஆகும்.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

இவை மூன்றின் விற்பனையும் 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.01%, 22.12% மற்றும் 12.67% குறைந்துள்ளன. இவற்றிற்கு அடுத்து 8வது இடத்தில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஒகினாவா உள்ளது. கடந்த மாதத்தில் ஒகினாவா பிராண்டில் இருந்து மொத்தம் 6,098 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாப்-10 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்...!! பியாஜியோ, ஜாவா பிராண்ட்களை முந்தின!

ஆனால் 2020 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்டிருந்த ஒகினாவா எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் எண்ணிக்கையை சொன்னால் உங்களால் நம்பவே முடியாது, வெறும் 613 யூனிட்களாகும். அதேபோல் 6,058 யூனிட் 2-வீலர்ஸின் விற்பனை உடன் 9வது இடத்தில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக்கும் இதற்கு முந்தைய டிசம்பரில் 1,545 யூனிட் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையே விற்பனை செய்திருந்தது. இந்த லிஸ்ட்டில் கடைசி பத்தாவது இடத்திலும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஆம்பியர் உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Two wheelers retail sales dec 2021 hero honda tvs in top 3
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X