வெளிநாட்டு தயாரிப்புக்கே டஃப் கொடுக்கும் போலிருக்கே... சென்னையில இருந்து பாண்டி வர நிக்காம போய்ட்டு வரலாம்!

அல்ட்ராவைலட் நிறுவனத்தின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் நாளைய தினம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த மின்சார வாகனம் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ். இது ஓர் புதுமுக மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அதன் முதன் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்தியாவில் நாளை (நவம்பர் 24) அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பைக்

எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கையே நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் இதுவும் ஒன்றாகும். நிறுவனம் இந்த பைக்கை 13 நவம்பர் 2019-லேயே வெளியீடு செய்துவிட்டது. இதுவே அல்ட்ராவைலட் எஃப் 77 நாட்டில் அறிமுகமாகுவது முதல் முறையாகும். இந்த முதல் தரிசனத்தின் போதே இந்தியர்கள் பலரின் மனதை இந்த மின்சார வாகனம் கவர்ந்துவிட்டது.

எனவேதான் நிறுவனம் நீண்ட இழுபறியை செய்து வருகின்ற போதிலும் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையாமல் நீடித்த வண்ணம் இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலே நிறுவனத்தின் இழுபறிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் முக்கிய தயாரிப்புகளின் அறிமுகத்தை ஒத்திவைக்க இந்த வைரஸ் பரவலே காரணமாக இருக்கிந்நறது. இந்த நிலையில் அல்ட்ராவைலட் எஃப்77 மின்சார பைக்கின் அறிமுக ஒத்தி வைப்பிற்கும் கொரோனாவே காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையிலேயே அல்ட்ராவைலட் நிறுவனம் எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கை நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் எஃப்77 வருகையை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் விதமாக மற்றமொரு சூப்பரான தகவலும் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் பற்றி வெளியாகி உள்ளது.

நிறுவனம் எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கில் பெரிய பேட்டரி பேக்கை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. 10.5 kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்த இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ ரேஞ்ஜை சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்ற விரும்புபவர்கள் எந்த தயக்கமும் இன்றி இந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கின் டாப் வேரியண்டே இந்த சூப்பரான ரேஞ்ஜை தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ஜில் மட்டுமில்லைங்க இந்த மின்சார பைக் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. எஃப் 77 பைக்கில் 25 kW மற்றும் 90 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 147 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக எஃப்77 இருக்கின்றது. இவையே இந்தியர்களின் கவனத்தை இந்த வாகனம் ஈர்க்க காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, சர்வதேச எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக எஃப்77இல் பன்முக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இணைப்பு வசதிக் கொண்ட பெரிய திரை, டிஸ்க் பிரேக்குகள், அதிக உறுதியான சேஸிஸ், இன்வெர்டடட் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன.

அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓபென் ரோர், ரிவோல்ட் ஆர்வி 400, ஹாப் ஆக்ஸோ மற்றும் டார்க் க்ரடோஸ் உள்ளிட்டவற்றிற்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும். இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஏர்ஸ்ட்ரைக், ஷேடோவ் மற்றும் லேசர் ஆகிய வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவில் தற்போது மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அனைவரையும் அம்சங்களுடன் அல்ட்ராவைலட் இ-பைக் நாளை அறிமுகாக இருக்கின்றது.

Most Read Articles

English summary
Ultraviolette f77 e bike launching tomorrow
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X