Just In
- 2 hrs ago
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- 2 hrs ago
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- 5 hrs ago
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- 5 hrs ago
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
Don't Miss!
- Finance
ரூ.200-க்கு கீழான ரீசார்ஜ் திட்டங்கள்.. ஜியோ, ஏர்டெல், வோடபோனில் இருக்கும் அட்டகாசமான திட்டங்கள்!
- News
டான்சர் ரமேஷ் இறந்தது இதனால் தானா? "முதல் மனைவி வீட்டுக்கு போனார்.." முதற்கட்ட தகவல் சொல்வது என்ன?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
களமிறங்கும் ஜாம்பவான்கள்! இவ்ளோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரப்போகுதா! இனி பெட்ரோல் வண்டிகளுக்கு வேலையே இல்ல!
இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Hero Vida Electric Scooter)
விடா என்ற பிராண்ட் பெயரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெகு விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் நாளை அக்டோபர் 7ம் தேதி (நாளை) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1-1.20 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திறன், ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு), மோட்டார் பவர் அவுட்புட் மற்றும் வசதிகள் போன்ற தகவல்கள் அனேகமாக நாளை நமக்கு கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Electric Scooter)
ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா பிராண்ட் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகு விரைவிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிமீ பயணிக்கலாம் என தெரிகிறது.

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.15 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Yamaha Electric Scooter)
யமஹா நிறுவனம் நியோ என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Yamaha Neo Electric Scooter) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 19.2 Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும், 2.5 kW மோட்டாரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் இது போட்டியிடும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.25 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம்.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Suzuki Burgman Electric Scooter)
புதிய சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது சமீபத்தில் கேமராவின் கண்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிக்கியது. அந்த ஸ்பை படங்கள் வெளியாகி, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால், புதிய சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப தகவல்களும் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.

எனினும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100-120 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, யமஹா மற்றும் சுஸுகி தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்தியாவில் தற்போதைய நிலையில் டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் எனர்ஜி போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. மற்றவை எல்லாம் பெரும்பாலும் சிறிய நிறுவனங்கள் ஆகும். இந்த சூழலில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, யமஹா மற்றும் சுஸுகி போன்ற ஜாம்பவான்களும் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யவிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியத்தால் நடுவழியில் தவித்த குடும்பம்! கடவுளாய் வந்து காப்பாற்றிய மஹிந்திரா!
-
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
-
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?