யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு யமஹா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. சிறப்பு கடன் திட்டம், குறைந்த வட்டி விகிதம் மற்றும் குறைந்த முன் தொகைக் கட்டணம் உள்ளிட்ட சலுகைகளை நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள் 125 சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் மாடல்கள் மற்றும் 155 சிசி எஃப்இசட் மற்றும் ஆர்15 வி3 ஆகிய மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது. மேலும், சிறப்பு சலுகைகள் இன்று தொடங்கி வரும் ஜனவரி 31ம் தேதி வரை கிடைக்கும் எனவும் யமஹா தெரிவித்திருக்கின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

சிறப்பு சலுகைகள்

யமஹா நிறுவனம், ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Fascino 125 Fi Hybrid), ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR 125 Fi Hybrid) மற்றும் ரேஇசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR Street Rally 125 Fi Hybrid) ஆகிய ஸ்கூட்டர்களை 125 சிசி பிரிவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

இவற்றிற்கு சிறப்பு சலுகைகளாக ரூ. 5 ஆயிரம் சிறப்பு கேஷ்பேக் மற்றும் பூஜ்ஜியம் வட்டி விகிதம் ஆகிய திட்டங்களை யமஹா நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதைத் தொடர்ந்து, யமஹா எஃப்இசட் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளுக்கு மிகக் குறைவான முன் தொகையாக ரூ. 9,999 அல்லது 9.25 சதவீதம் வட்டி விகிதம் ஆகிய சலுகைளை அறிவித்திருக்கின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

இதை அடுத்து யமஹா நிறுவனம் அதன் ஒய்இசட் ஆர்15 வி3 (Yamaha YZF-R15 V3) பைக்கிற்கும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. இதற்கு ரூ. 19,999 முன்தொகைக் கட்டணம் அல்லது 10.99 சதவீத வட்டி விகிதம் ஆகிய சலுகைகளை அறிவித்துள்ளது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

பண்டிகையை முன்னிட்டு அனைத்து சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து யமஹா ஷோரூம்களிலும் கிடைக்கும். நிச்சயம் இந்த சலுகை தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

தற்போது நிறுவனத்தின் கீழ், ஆர்15 வி4.0 155சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (YZF-R15 version 4.0 (155cc) with ABS), ஆர்15 வி3 155சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (YZF-R15 version 3.0 (155cc) with ABS), ஆர்15எஸ் வி3 155சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (YZF-R15S version 3.0 (155cc) with ABS), எம்டி15 155சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (MT-15 (155cc) with ABS) ப்ளூகோர் தொழில்நுட்பம் வசதிக் கொண்ட எஃப்இசட்25 249சிசி ஏபிஎஸ் வசதி உடனும் (Blue-Core Technology-enabled models such as FZ 25 (249cc) with ABS), எஃப்இசட்எஸ் 25 249சிசி ஏபிஎஸ் வசதி உடனும் (FZS 25 (249cc) with ABS), எஃப்இசட்-எஸ் எஃப்ஐ 149சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (FZ-S FI (149cc) with ABS), FZ-FI (149cc) with ABS), எஃப்இசட்-எக்ஸ் 149சிசி பைக் ஏபிஎஸ் வசதி உடனும் (FZ-X (149cc) with ABS) மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைத்து வருக்கின்றன.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

இவற்றைத் தொடர்ந்து ஸ்கூட்டர் வரிசையில் ஏரோக்ஸ் (AEROX (155cc) with ABS and UBS), ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Fascino 125 FI Hybrid 125cc), ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR 125 FI Hybrid 125cc), ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட் (Street Rally 125 FI Hybrid 125cc) ஆகியவற்றையும் யமஹா நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

யமஹாவின் பொங்கல் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு... 0 சதவீத வட்டி விகிதத்தில் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை வாங்கலாம்!

யமஹாவின் தற்போதைய சலுகைகளில், ஃபஸ்ஸினோ, ரேஇசட்ஆர் ஸ்கூட்டர் மாடல்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பூஜ்ஜியம் வட்டி விகிதம் சலுகை தமிழக இருசக்கர வாகன பிரியர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha #pongal 2022
English summary
Yamaha announces pongal offers for january 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X