ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று யமஹா ஆர்எக்ஸ் 100. இன்றளவும் இந்த பைக்கிற்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

இந்த சூழலில், யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100) பைக்கை மீண்டும் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

80ஸ் - 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக்காக யமஹா ஆர்எக்ஸ் 100 மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. இந்த பைக்கிற்கு இப்போதும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதன் விலையும் சற்றும் அதிகமாமக உள்ளது. தெளிவாகக் கூற வேண்டுமானால், நல்ல பராமரிப்பில் இருக்கும் யமஹா ஆர்எக்ஸ்100 பைக், ஓர் புதிய பைக்கின் விலைக்கு இணையானதாக உள்ளது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

அந்தளவிற்கு இளைஞர்களின் பிரியமான இருசக்கர வாகனமாக ஆர்எக்ஸ் 100 இருக்கின்றது. இந்த பைக்கை விரும்புவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகியுள்ளது. யமஹா நிறுவத்தின் இந்தியாவிற்கான சேர்மேன் இப்பைக்கின் இந்திய வருகையை உறுதிப்படுத்தியிருப்பதாக பிசினஸ் லைன் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

அண்மையில் பிசினஸ் லைன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான சேர்மேன், ஐஷின் சிஹானா, "இதுவரை யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆர்எக்ஸ்100 பிராண்டை பயன்படுத்தி ஓர் வாகனத்தைகூட உருவாக்கவில்லை. அதை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர தாங்கள் விரும்புவதாக" தெரிவித்தார்.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

அதேநேரத்தில், அதை முன்பை போன்று 2 ஸ்ட்ரோக் வாகனமாக அல்லாமல், பிஎஸ் 6 தரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகையால், பழைய 2 ஸ்ட்ரோக்கில் கிடைப்பதைப் போன்று சூப்பர் ஃபாஸ்ட் வேகம், காதை கிழிக்கும் சத்தம் புதிய ஆர்எக்ஸ் 100 இருக்காது என்பது தெரிகின்றது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

அதேவேலையில், இளைஞர்கள் இந்த அம்சங்களுக்காகவே ஆர்எக்ஸ் 100 பைக்கை விரும்புகின்றனர். அதில் வெளியேறும் அதீத இரைச்சல் போதாதென்று அதனை மேலும் கூட்டும் வகையில் சில மாடிஃபிகேஷன்களையும் அவர்கள் செய்கின்றனர். இதுமட்டுமின்றி, பெட்ரோலுக்கு கலப்படம் ஆயில் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியும் யமஹா ஆர்எக்ஸ் 100 பயன்பாட்டாளர்கள் அப்பைக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நிறுவனமே ஆர்எக்ஸ் 100 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. புதிய ஆர்எக்ஸ் 100 புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை 2026ம் ஆண்டிற்குள் அரங்கேற்றப்பட இருப்பதும் யமஹா நிறுவனத்தின் சேர்மேனின் பேட்டியின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் முதன் முதலாக 1985ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. மேலும், 1996 ஆம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. பல்வேறு காரணங்களால் மோட்டார்சைக்கிள் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அரங்கேறி 26 ஆண்டுகள் வரை ஆகின்றன. இருந்தும் தற்போதும் நல்ல டிமாண்ட் ஆர்எக்ஸ் 100 பைக்கிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

ஆர்எக்ஸ் 100 மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி நிறுவனம் மின்சார வாகன சந்தையில் களமிறங்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சிஹானா கூறியுள்ளார். 2025ம் ஆண்டிற்கு ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பது அவர் கூறியதன் வாயிலாக தெரியவந்துள்ளது. அதேவேலையில், யமஹா நிறுவனம் தாய்வான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

அதேநேரத்தில் உலக சந்தைகளுக்கு சிகேடி மற்றும் சிபியூ வாயிலாக அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இவ்வாறே யமஹா அதன் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருமானால் அதன் விலை பல மடங்கு அதிகமான இருக்கும்.

ஹலோ 90ஸ் கிட்ஸ்... மீண்டும் இந்தியாவில் பிறக்க போகிறது யமஹா ஆர்எக்ஸ் 100... சேர்மேனே உறுதி செஞ்சிட்டாராம்!

இதை இந்திய இருசக்கர வாகன விரும்பமாட்டார்கள் என்பதனால்தான் நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியைத் தீவிரப்படுத்த இருக்கின்றது. நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை மற்றும் நொய்டாவில் உற்பத்தி ஆலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha chairman confirms yamaha rx100 india re enter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X