கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான யமஹா கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளான. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

யமஹா கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 34,817 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2021 பிப்ரவரி மாதத்தில் யமஹா விற்பனை செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் 37.25 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் இதனை காட்டிலும் 20,671 யூனிட்கள் அதிகமாக 55,488 2-வீலர்ஸ் யமஹா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

அதேபோல் இந்த எண்ணிக்கை 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 1,329 யூனிட்கள், அதாவது 3.68% குறைந்துள்ளது. இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய 2-வீலர் மாடலாக எஃப்.இசட் விளங்குகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 13,395 எஃப்.இசட் பைக்குகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த எண்ணிக்கை ஆனது 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் ஏறக்குறைய 4,400 யூனிட்கள் குறைவாகும்.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

ஏனெனில் அந்த மாதத்தில் 17,798 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் 15,734 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் கடந்த மாதத்தில் 2,339 யூனிட்கள், அதாவது 14.87% குறைந்துள்ளது. எஃப்.இசட் பைக்குகளுக்கு அடுத்து ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களை இந்தியாவில் கடந்த மாதம் யமஹா அதிகளவில் விற்பனை செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

கடந்த மாதத்தில் விற்கப்பட்ட யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 8,355 ஆகும். இதன் விற்பனையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 40% குறைந்துள்ளது. 2021 பிப்ரவரியில் 13,812 யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் உண்மையில், இதற்கு முந்தைய 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 1,325 யூனிட்கள், அதாவது 18.85% அதிகமாகும்.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

ஏனென்றால் அந்த மாதத்தில் ஏறக்குறைய 7 ஆயிரம் இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் கடந்த ஜனவரி மாதத்தில் ஏறக்குறைய 200 யூனிட்கள் குறைவாக 6,221 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் 6,416 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 10,228 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 37.27% குறைவாகும்.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

இதற்கடுத்து உள்ள, பிரபலமான யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனையை பொறுத்தவரையில் இந்த ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் கடந்த மாதத்தில் 6,405 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் 1,069 யூனிட்கள் அதிகமாக (14.30%) அதிகமாக 7,474 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட தற்போதைய விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக 6,146 ஆர்15 பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

இவை தான் தற்போதைக்கு யமஹா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகும். இதற்கடுத்து 250சிசி பைக்கான யமஹா எஃப்25 மாடலும் உள்ளது. ஆனால் அதன் விற்பனை பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்த 250சிசி யமஹா பைக் கடந்த மாதத்தில் 246 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு 998 எஃப்.இசட்25 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

இந்த வகையில் பார்க்கும்போது எஃப்.இசட்25 பைக்குகளின் விற்பனை சுமார் 75.35% (752 யூனிட்கள்) குறைந்துள்ளது. இதில் இன்னும் எம்டி15 பைக்கின் பெயர் வரவில்லையே என நீங்கள் கேட்கலாம். எம்டி15 பைக்குகளின் விற்பனையை யமஹா தற்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் எந்த எம்டி15 பைக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரியில் யமஹா பிராண்டில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்ஸ்... உள்நாட்டு விற்பனை 37.25% குறைந்தது!!

புதிய தலைமுறை எம்டி15 பைக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு இந்திய சந்தையில் தற்போதைக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாடல்களே விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மாடல்களை யமஹா நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. உள்நாட்டு விற்பனையை போல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதிலும் எஃப்.இசட் மோட்டார்சைக்கிளே (10,149 யூனிட்கள்) முன்னிலை வகிக்கிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha india sales breakup feb 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X