ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

யமஹா நிறுவனம் பிரபல இருசக்கர வாகன மாடல்களை மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசனாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, அதன் முக்கிய மாடல்கள் சிலவற்றை மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஆர்15 எம் (YZF-R15M), எம்டி 15 வி2.0 (MT-15 V2.0), ஏரோக்ஸ் 155 (AEROX 155) மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR 125 Fi Hybrid) ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே நிறுவனம் மான்ஸ்டர் மோட்டோ ஜிபி எடிசனில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

'தி கால் ஆஃப் ப்ளூ' (The Call of the Blue) எனும் திட்டத்தின்கீழ் அனைத்து மாடல்களையும் யமஹா நிறுவனம் இச்சிறப்பு பதிப்பு வெர்சனாக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. மேலே கூறப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும் யமஹாவின் 'ப்ளூ ஸ்கொயர்' விற்பனையகங்கள் வாயிலாக மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.

ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

விலை விபரம்:

ஏரோக்ஸ் 155 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசனைத் தவிர மற்ற அனைத்து சிறப்பு பதிப்பு வாகனங்களின் விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விலை மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன்களின் விலை விபரம் இதோ:

  • ஆர்15எம் மாடலின் விலை ரூ. 1,90,900.
  • எம்டி 15 வி2.0 மாடலின் விலை ரூ. 1,65,400.
  • ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் மாடலின் விலை ரூ. 87,330 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது கவனித்தகுந்தது.
  • ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு யமஹா நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கக் கூடிய கிராஃபிக்குகள் இந்த வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    இந்த கிராஃபிக்குகளின் பயன்பாட்டினாலயே இருசக்கர வாகனங்கள் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசனாக மாறியிருக்கின்றன. ஆமாங்க, இந்த சிறப்பு அலங்காரத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் சிறப்பு பதிப்புகளில் யமஹா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஆகையால், எஞ்ஜின் மற்றும் உபகரணங்கள் விஷயத்தில் சிறப்பு பதிப்பு மற்றும் வழக்கமான பதிப்பு ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கும்.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    அதேவேலையில், புதிய நிறம் மற்றும் கிராஃபிக்குகளால் அதிக முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்டவையாக மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் இருசக்கர வாகனங்கள் ஆர்15எம், எம்டி 15 வி2.0, ஏரோக்ஸ் 155 மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் ஆகியவை மறியிருக்கின்றன. அதேவேலையில் இவை அதிக கவர்ச்சியானதாகவும் காட்சியளிக்கின்றன.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    இந்த மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி எடிசன் இருசக்கர வாகனங்களின் வருகை குறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஈஷின் சிஹானா கூறியதாவது, "யமஹா சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸில் மிக ஸ்ட்ராங்கான பந்தய டிஎன்ஏவு-க்கு பெயர் பெற்றதாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் வகையிலேயே மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷன் லிவரிகள் உள்ளன. இந்த ஆண்டு மோட்டோ ஜிபி-யில் எங்கள் செயல்திறன் விதிவிலக்காக இருந்தது. எங்களின் ரைடர் அனைத்து நிலைகளிலும் முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டார். இது யமஹாவின் ஒப்பிடமுடியாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லமையை சித்தரிக்கும் வகையில் அமைந்தது" என பெருமிதம் கொண்டார்.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் வாடிக்கையாளர்கள் உலகளாவிய பந்தயத்தில் காணப்படும் அதே அளவிலான உற்சாகத்தை அனுபவிக்க உதவுவதே எங்களின் நோக்கமாகும். இதை பரைசாற்றும் வகையிலேயே இன்று 4 மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி பதிப்பு இருசக்கர வாகன மாடல்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இவற்றை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற மேலும் பல அற்புதமான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம்" என கூறினார்.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    ஆகையால், வரும் காலங்களிலும் சிறப்பு பதிப்புகள் யமஹா இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறங்கும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே நிறுவனத்தின் முக்கிய அதிகாரி கூறியிருக்கும் தகவல் உள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் புகழ்பெற்று விளங்கிய சில இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியிலும் யமஹா களமிறங்கியிருக்கின்றது.

    ஒரே நாளில் 4 மான்ஸ்டர் எடிசன் டூ-வீலர்கள் அறிமுகம்... இந்திய இருசக்கர வாகன சந்தையை அதிர வைத்த யமஹா!

    அந்தவகையில், நிறுவனம் இன்னும் ஒரு சில வருடங்களில் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான ஆர்எக்ஸ் 100 மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளியாகிய இந்த தகவல் 80-ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏன், சில 2கே கிட்ஸ்களையும் இந்த தகவல் மகிழ்ச்சியடைச் செய்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha introduces 4 new monster energy yamaha moto gp edition two wheelers in india
Story first published: Wednesday, August 3, 2022, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X