2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் எஃப்இசட் பைக் வரிசையில், எஃப்இசட் ( FZ), எஃப்இசட் எஸ் (FZS), எஃப்இசட் எஸ் டீலக்ஸ் (FZS Deluxe) ஆகிய அப்டேட் செய்ய தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்குகளின் அறிமுகம் குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

2022ம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக யமஹா (Yamaha) நிறுவனம், அதன் அப்டேட் செய்யப்பட்ட எஃப்இசட் ( FZ), எஃப்இசட் எஸ் (FZS), எஃப்இசட் எஸ் டீலக்ஸ் (FZS Deluxe) ஆகிய இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புத்தாண்டில் இருசக்கர வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த வாகனங்களை நிறுவனம் களமிறக்கி இருக்கின்றது.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

ஆரம்ப நிலை வேரியண்டாக காட்சியளிக்கும் எஃப்இசட் தேர்விற்கு ரூ. 1.10 லட்சம் என்ற விலையையும், எஃப்இசட்-எஸ் தேர்விற்கு ரூ. 1.16 லட்சம் என்ற விலையையும், எஃப்இசட்-எஸ் டீலக்ஸ் தேர்விற்கு உச்சபட்சமாக ரூ. 1.19 லட்சம் என்ற விலையையும் யமஹா நிர்ணயித்திருக்கின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

என்ன அப்டேட் வழங்கப்பட்டிருக்கு?

2022 யமஹா எஃப்இசட்

இந்த தேர்வில் இரு புதிய நிற தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. டீப் பர்ப்ளிஷ் ப்ளூ மெட்டலிக் ஒய் மற்றும் கருப்பு மெட்டலிக் எக்ஸ் ஆகிய நிற தேர்வுகளே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வசதி மட்டுமே எஃப்இசட் தேர்விற்கு அப்கிரேட்டாக வழங்கப்பட்டிருக்கின்றது.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

எஃப்இசட் எஸ்

இந்த தேர்விலும் இரு புதிய நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், மேட் டல் ரெட் மெட்டலிக் 4 மற்றும் மேட் டார்க் பர்ப்ளிஷ் ப்ளூ மெட்டலிக் 1 ஆகிய நிற தேர்வுகளே வழங்கப்படுகின்றது. இத்துடன் கூடுதல் சிறப்பு அம்சமாக எல்இடி மின் விளக்கால் பைக் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

எஃப்இசட்-எஸ் டீலக்ஸ்

மூன்று விதமான நிற தேர்வுகள் இந்த பைக் தேர்வில் வழங்கப்படுகின்றது. பிளாக் மெட்டல்லக்க எக்ஸ், டீப் ரெட் மெட்டலிக் கே மற்றும் பேஸ்டர் டார்க் கிரே ஆகிய நிற தேர்வுகளே இதில் வழங்கப்படுகின்றன. இத்துடன் கூடுதல் சிறப்பு அம்சங்களாக எல்இடி மின் விளக்குகள், வண்ண மயமான வீல்கள், இரட்டை டோன் இருக்கை மற்றும் எல்இடி ஃபிளாஷர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த தேர்வில் வழங்கப்படுகின்றன.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

மேலே பார்த்தவை மட்டுமே புதிய மாற்றங்கள் ஆகும். இத்துடன் வழக்கமான அம்சங்களாக ப்ளூடூத் இணைப்பு இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல், இ-லாக், லொகோட் மை பைக், ஹசார்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

யமஹா எஃப்இசட் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட 2 வால்வ் ஒற்றை சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜிந் அதிகபட்சமாக 12.2 பிஎச்பி பவர் மற்றும் 13.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

2022ம் ஆண்டின் முதல் இருசக்கர வாகனம்... யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்! இ-லாக் வசதி இதுல கொடுத்திருக்காங்க!

மேலும், சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு முனை வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சேனல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launches 2022 fz fzs fzs deluxe bike in india
Story first published: Saturday, January 1, 2022, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X