ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

யமஹா நிறுவனம் அண்மையில் 'மைலேஜ் சேலஞ்ஜ் ஆக்டிவிட்டி' (Mileage Challenge Activity) எனும் சிறப்பு நிகழ்வை நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களில் யமஹாவும் ஒன்று. இந்த பிரபல நிறுவனம் சமீபத்தில் 'மைலேஜ் சேலஞ்ஜ் ஆக்டிவிட்டி' (Mileage Challenge Activity) எனும் சிறப்பு நிகழ்வை நடத்தியது. இதனை சமுக் பைக்ஸ் (Samukh Bikes) எனும் டீலரின் ஏற்பாட்டின் அடிப்படையில் யமஹா நடத்தியது குறிப்பிடத்தகுந்தது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யமஹா இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர். குறிப்பாக, அதிகம் மைலேஜ் தரக் கூடிய ஸ்கூட்டர்கள் என யமஹா பெருமிதம் கூறும் ஹைபிரிட் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களே இந்த மைலேஜ் சேலஞ்ஜ் ஆக்டிவிட்டியில் கலந்துக் கொண்டனர்.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

அவர்கள், தங்களின் ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் எந்தளவு மைலேஜ் தருகிறது என்பதனை சோதனையின் வாயிலாக நிரூபித்துக் காட்டினர். இதில் அதிக மைலேஜை வெளிப்படுத்திய ஸ்கூட்டர் உரிமையாளருக்கு யமஹா நிறுவனம் பரிசுகளை வழங்கியது. ஒட்டுமொத்தமாக 15 பேர் இப்போட்டியில் பங்கு பெற்றனர். இவர்களில் அதிக மைலேஜ் வரிசையின் அடிப்படையில் மூவருக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

முதல் பரிசு வரலக்ஷ்மி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரின் ஸ்கூட்டர் லிட்டர் ஒன்றிற்கு 103.2 கிமீ வரை மைலேஜ் வழங்கியிருக்கின்றது. இந்த சிறப்பான மைலேஜை அடுத்து வரலக்ஷ்மி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

இதற்கு அடுத்தபடியாக ஜெய் கணேஷ் (99.7 கிமீ மைலேஜ்) என்பவருக்கு இரண்டாவது பரிசும், நந்த குமார் (98.8 கிமீ மைலேஜ்) என்பவருக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. இதுதவிர, போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு இலவச சர்வீஸ் புள்ளிகள் 10 பாயிண்டுகளும், இலவச வாட்டர் வாஷ் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

மேலும், வெற்றிாயளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு வவுச்சர்கள் உள்ளிட்ட சிலவும் வழங்கப்பட்டன. மைலேஜ் டெஸ்ட் மட்டுமின்றி சஸ்பென்ஷன், பிரேக்கிங், ஆக்சலரேஷன் மற்றும் பிக்-அப் வேகம் உள்ளிட்டவை பற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

யமஹா நிறுவனம் இந்தியாவில் ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Fascino 125 Fi Hybrid), ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR 125 Fi Hybrid) மற்றும் ரேஇசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR Street Rally 125 Fi Hybrid) ஆகிய மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

அனைத்தும் அதிக மைலேஜ், எரிபொருள் சிக்கனம் மற்றும் பண சேமிப்பு ஆகியவற்றை நிச்சயம் வழங்கும் என யமஹா கூறுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலும், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே யமஹா நிறுவனம் இந்த மைலேஜ் சேலஞ்ஜ் ஆக்டிவிட்டி நிகழ்வை நடத்தியது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

இதுமட்டுமின்றி, சில நேரங்களில் சிறப்பு கேஷ்பேக் திட்டத்தின் வாயிலாகவும் இந்த இருசக்கர வாகனங்களை நிறுவனம் புரமோட் செய்து வருகின்றது. யமஹாவின் இந்த அனைத்து ஹைபிரிட் ஸ்கூட்டர்களுமே மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றன. இரண்டிற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

குறிப்பாக, ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட ஃபஸ்ஸினோ ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பான டிமாண்ட் நாட்டில் நிலவி வருகின்றது. இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்-6 தர ஏர் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் (Fuel-Injected), 125 சிசி ப்ளூ கோர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், ஹைபிரிட் பவர் அசிஸ்ட் தொழில்நுட்பம் வசதிக் கொண்ட ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் எஞ்ஜின் ஸ்டார்ட் சிஸ்டம் ஆகும்.

ஆஹா இந்த போட்டில நாமலும் கலந்திருக்கலாம் போலிருக்கே! பரிசுகளையும், இலவசங்களையும் வாரி வழங்கிய யமஹா!

இந்த சிஸ்டம் தேவைக்கேற்ப தானாகவே ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆகியவற்றை செய்யும். இதன் வாயிலாகவே அதிக எரிபொருள் சிக்கனம் செய்யப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ப்ளூடூத் இணைப்பு மற்றும் சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha mileage challenge activity winners details revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X