கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

யமஹாவின் புதிய 'ப்ளூ ஸ்கொயர்' (Blue Square) டீலர்ஷிப் மையங்கள் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யமஹா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் அதன் சில்லறை விற்பனை மையங்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது யமஹாவின் புதிய'ப்ளூ ஸ்கொயர்' டீலர்ஷிப் மையங்கள் நமது தமிழகத்தில் கோயம்புத்தூரிலும், ஈரோட்டிலும் திறக்கப்படுவதாக இந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

கோயம்புத்தூரில் 1710 சதுர அடி பரப்பில் 'ORPI ஏஜென்சிஸ்' என்கிற பெயரிலும், ஈரோட்டில் 1600 சதுர அடி பரப்பில் 'சேஃப்டி மோட்டார்ஸ்' (Safety Motors) என்கிற பெயரிலும் இந்த புதிய யமஹா ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் செயல்பட உள்ளன. மற்ற யமஹா டீலர்ஷிப் மையங்களை போல் இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களிலும் வாகன விற்பனை, அவற்றிற்கான சேவை & ஆக்ஸஸரீ பாகங்கள் கிடைக்கும்.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

நாடு முழுவதும் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, ஒரு முயற்சியாக கோவை & ஈரோட்டில் திறக்கப்பட்டுள்ள இந்த இரு ஷோரூம்களிலும் யமஹாவின் பந்தய கள டிஎன்ஏ, ஸ்டைல் & ஸ்போர்டினஸ் ஆகியவை உட்பொதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட பிராண்ட் அனுபவத்தில் முக்கியமாக கவனம் செலுத்தும் யமஹாவின் 'ப்ளூ ஸ்கொயர்' ஷோரூம்கள் சமூக உணர்வை வெளிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

மேலும், வாடிக்கையாளர்கள் பிராண்டின் நெறிமுறைகளுடன் இணைவதற்கான இடத்தை உருவாக்குவதாக இவை உள்ளதாக யமஹா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 'ப்ளூ ஸ்கொயர்' என்ற பெயரில் உள்ள ப்ளூ என்பது உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட்டில் யமஹாவின் அடையாளமாக விளங்கும் நீல நிறத்தையும், ஸ்கொயர் என்பது யமஹாவின் உலகிற்குள் வாடிக்கையாளர்கள் நுழைவதையும் குறிக்கின்றன.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

இதன் காரணமாகவே, பெயருக்கேற்ப இந்த ஷோரூம்கள் அடர் நீல நிறத்தில் பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா க்ரூப்பின் தலைவர் இஷின் சிகானா கருத்து தெரிவிக்கையில், "யமஹா தனது 'கால் ஆஃப் தி ப்ளூ' (Call Of The Blue) என்ற பெயரிலான பிராண்ட் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இரு புதிய ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளது.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

யமஹா ப்ளூ ஸ்கொயர் விற்பனை நிலையங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுடன் ஒத்திசைவாக நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. ப்ளூ ஸ்கொயர் ஷோரூமுக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட்ஸில் யமஹாவின் பாரம்பரியமான வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக உணருவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

இந்த பிரீமியம் தர விற்பனை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிராண்டுடன் தொடர்பு கொள்ளவும், தகவல்களை அணுகவும், பாகங்கள் மற்றும் ரைடர் உடைகளை ஆராயவும் ஒரு தகவல்தொடர்பு தளமாகவும் செயல்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு வளமான மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகின்றன" என்றார். இவற்றுடன் யமஹா ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் வாடிக்கையாளர்களையும் ஒருவருடன் ஒருவர் இணைக்கின்றன.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூம்களின் மூலம் தமிழகத்தில் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

'தி கால் ஆஃப் தி ப்ளூ' என்கிற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளில் யமஹா இந்தியா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த 2022 மார்ச் மாத துவக்கத்தில் யமஹவின் டிராக் டே சென்னையில் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தங்களது யமஹா பைக்குகளை பந்தய களத்தில் அதிவேகத்தில் இயக்கி பார்க்க விரும்பியவர்கள் இந்த டிராக் டே நிகழ்வில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

கோவை & ஈரோட்டில் யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள்!! பயன்பாட்டிற்கு வந்தன!

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தாலும், இந்தியாவிற்கான முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்னமும் யமஹா விற்பனைக்கு கொண்டுவரவில்லை. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அடுத்த ஏப்ரல் மாதத்தில் தனது முதல் இ-ஸ்கூட்டரை இந்திய சந்தையில் யமஹா வெளியீடு செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தியாவிற்கான யமஹாவின் முதல் எலக்ட்ரிக் தயாரிப்பு ஆனது மேக்ஸி ரக ஸ்கூட்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha opens 2nd blue square premium outlet in coimbatore erode
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X