ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும்.... நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர்!

இந்தியாவில் எரிபொருள் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், வாகனங்களின் மைலேஜிற்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். எனவே அதிக மைலேஜ் கிடைக்கும் வாகனங்களின் விற்பனை தூள் கிளப்புகிறது.

Recommended Video

Toyota Urban Cruiser Hyryder Tamil Walkaround | ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், கியர் பாக்ஸ், வசதிகள்

இந்த சூழலில், யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் ஸ்கூட்டரில் மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

யமஹா நிறுவனம் ஸ்கூட்டரில் ஹைபிரிட் தொழினுட்பத்தைப் புகுத்தி ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட், ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட், ஸ்டிரீட் ரேலி 125 எஃப் 5 ஹைபிரிட் ஆகிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் பெட்ரோல் உடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் சேர்ந்து இயங்கும் என்பதால் இது அதிக மைலேஜ் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இதையடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் மதுரையில் இந்த பைக்குக்களின் மைலேஜை சோதனை செய்யும்படியாக "மைலேஜ் சவால் " என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதன்படி மதுரையில் உள்ள குணா மோட்டார்ஸ், லிங்கா மோட்டார்ஸ், பிரணீஸ் ஜி மோட்டார்ஸ் மற்றும் ஆருத்ரா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததிருந்தது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இந்த நிகழ்ச்சியில் 100 யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டது. பின்னர் அவர்களுக்கு எவ்வாறு பயணிக்க வேண்டும். எந்த வழியாகச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்ட பாதைகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இந்த பாதையானது அதிக போக்குவரத்து நெருக்கடி, பள்ள மேடும் நிறைந்தநிலைகள், சாதாரண சாலைகள், போக்குவரத்து நெருக்கடியற்ற சாலைகள் எனக் கலவையாகச் சாலைகள் இடம் பெறும்படி திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்த. அதாவது வாகனத்தின் சஸ்பென்ஸன், பிரேக் ஆகியவற்றை அனுபவிக்கும் விதமாக இந்த திட்டம் செய்யப்பட்டிருந்தது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இந்த பாதையானது 30 கி.மீ பயணிக்கும் படி திட்டமிடப்பட்டிருந்தது. பயணம் துவங்கும் முன்பே வாகனத்தில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது எனக் குறித்து வைக்கப்பட்டது. பயணம் முடிந்ததும் இந்த 30 கி.மீ பயணிக்க எவ்வளவு பெட்ரோல் செலவாகியுள்ளது என்பதை அளந்து குறிக்கப்பட்டது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செலவான மைலேஜ் என்பது கணக்கிடப்பட்டது. அதன்படி அதிக மைலேஜ் தரும்படி ஓட்டிய முதல் 3 வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

இந்த "மைலேஜ் சேலஞ்ச்" போட்டியில் நாகராஜ் என்பவர் 105.9 கி.மீ மைலேஜில் ஓட்டி முதல் பரிசை பெற்றார். இரண்டாம் பரிசை வேல் முருகன் என்பவர் 97.86 கி.மீ மைலேஜிலும், மூன்றாம் இடத்தை ஜெயலெட்சுமிஎன்பவர் 97.56 கி.மீ மைலேஜிலும், பொன் விஜய் என்பவர் 96.9 கி.மீ மைலேஜிலும், ஆதித்யா என்பவர் 96.3 கி.மீ மைலேஜிலும் வாகனத்தை ஓட்டி பரிசுகளைப் பெற்றனர்.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

ஹைபிரிட் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு போதுமான அளவிற்கு இல்லை. அதை ஏற்படுத்தும் விதமாக அதிக மைலேஜ் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்த "மைலேஜ் " சேலஞ்ச் நிகழ்ச்சியை அந்நிறுவனம் இந்தியா முழுவதும் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு 105.9 கி.மீ பயணிக்க முடியும் . . . . நேரடியாக நிரூபித்த மதுரை யமஹா வாடிக்கையாளர் !

தற்போது மார்கெட்டில் இவ்வளவு மைலேஜ் சாதாரணமான பெட்ரோல் இன்ஜினில் மட்டும் இயங்கும் ஸ்கூட்டர்கள் எதிலும் கிடைப்பதில்லை. ஹைபிரிட்டில் மட்டுமே இனி சாத்தியம் என்ற நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைக்கு ஹைபிரிட் வாகனங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படியாக நிகழ்ச்சிகள் நடத்துவது நிச்சயம் பாராட்டிற்குரியது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha organize mileage challenge activity in Madurai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X