ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

புது வருடம் துவங்கினாலே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பு வாகனங்களின் விலைகளை உயர்த்துவது வழக்கமான ஒன்றே. அதிகரித்துவரும் தயாரிப்பு செலவு மற்றும் போக்குவரத்து செலவுகளினால் இத்தகைய விலை உயர்வுகளை அவை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

இந்த வகையில் ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் பிராண்டான யமஹா அதன் இருசக்கர வாகனங்களின் விலைகளை கவனிக்கத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது. யமஹா 2-வீலர்ஸின் அப்டேட் செய்யப்பட்ட விலைகள் இந்த 2022 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

ஏற்கனவே கூறியதுபோல், யமஹாவின் இந்த விலை உயர்வுக்கு உலோக பாகங்களின் தொடர் விலை அதிகரிப்பும், வைரஸ் பரவல்களினால் கொண்டுவர வேண்டி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆனால் இதற்காக பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்தியாவில் யமஹா 2-வீலர்ஸின் விலைகள் அதிகப்பட்சமாகவே ரூ.2,000 என்ற அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளன.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

அதிகப்பட்ச ரூ.2,000 விலை உயர்வை யமஹாவின் ஆர்15 வி4 & வி4 எம், எஃப்.இசட்-எக்ஸ் என்ற பைக்குகளும், ஏரோக்ஸ் ஸ்கூட்டரும் ஏற்றுள்ளன. இந்த விலை அதிகரிப்பினால் இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஆர்15 மாடலின் சமீபத்திய நான்காம் தலைமுறையின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,72,800ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஆர்15 வி4 அடிப்படையிலான அதன் பிரீமியம் தர 'எம்' வெர்சனும் விலை அதிகரிப்பை கண்டுள்ளது.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

ஆனால் இவற்றிற்கு அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்15எஸ் பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆர்15எஸ் ஆனது முந்தைய மூன்றாம் தலைமுறையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மாற்றமின்றி ரூ.1,57,600ஆக தொடர்கிறது. கடந்த ஆண்டில் யமஹா அறிமுகப்படுத்திய மற்றொரு பைக்கான எஃப்.இசட்-எக்ஸ் -இன் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,26,300ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

யமஹாவின் சமீபத்திய மேக்ஸி-ஸ்கூட்டர் மாடலான ஏரோக்ஸ் 155-இன் புதிய விலைகள் இந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரூ.1,30,500இல் இருந்து ஆரம்பிக்கின்றன. இவை தவிர்த்து இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்கும் ஃபேஸினோவின் விலைகளையும் ரூ.800 என்ற அளவில் யமஹா உயர்த்தியுள்ளது.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

இதன் விளைவாக ஃபேஸினோ ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஒருவழியாக ரூ.73,000ஐ தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இவற்றில் எந்தவொரு அப்டேட்களும் வழங்கப்படவில்லை. இவை மட்டுமின்றி, எம்டி15, எஃப்.இசட், எஃப்.இசட்.எஸ் மற்றும் ரே.இசட்ஆர் ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றையும் இந்திய சந்தையில் யமஹா விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலைகள் இன்னும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்படவில்லை.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

இந்த அறிவிப்பினை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தற்போது வருகிற பொங்கல் பண்டிகை நாட்களுக்கான சலுகைகள் & தள்ளுபடிகளை யமஹா அதன் 2-வீலர்ஸுக்கு அறிவித்துள்ளது. வருகிற ஜனவரி 31ஆம் தேதி வரையில் அமலில் இருக்கவுள்ள இந்த சலுகைகள் யமஹாவின் 125சிசி ஹைப்ரீட் ஸ்கூட்டர்களுக்கும், 150சிசி எஃப்.இசட் பைக்குகளுக்கும், 155சிசி ஒய்.இசட்.எஃப்-ஆர்15 பைக்குகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

யமஹாவின் 125சிசி ஹைப்ரீட் ஸ்கூட்டர்களான ஃபேஸினோ 125 எஃப்.ஐ, ரே.இசட்ஆர் 125 எஃப்.ஐ & ரே.இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்.ஐ மாடல்களை இந்த ஜனவரி மாதத்தில் வாங்குவோர் ரூ.5,000 பணம் தள்ளுபடி மற்றும் 0% வட்டி விகிதத்தினை பெறலாம். அதுவே, எஃப்.இசட்15 பைக்குகளை வாங்குவோர் ரூ.9,999 என்கிற குறைந்த முன்தொகை திட்டத்தையோ அல்லது 9.25% என்ற குறைந்த வட்டி விகிதத்தையோ பெறலாம்.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

நான்காம் தலைமுறை அறிமுகமாகிவிட்டாலும், இப்போதும் விற்பனையில் இருக்கும் ஆர்15 வி3 பைக்கை வாங்குவோர்க்கு இந்த மாதத்தில் ரூ.19,999 என்ற குறைந்த முன்தொகை அல்லது 10.99% வட்டி விகிதம் சலுகையாக கிடைக்க பெறவுள்ளது. இந்த சலுகை & தள்ளுபடி குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்துக்கொள்ள அருகில் யமஹா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். மற்ற மேம்பாட்டு பணிகளுக்கு இடையே இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்திற்கு புதிய தலைவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்15 வி4 & ஏரோக்ஸ் 155-இன் விலைகளை உயர்த்தியது யமஹா!! புதிய விலைகள் அமலுக்கு வந்தன

கடந்த 2018இல் இருந்து யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மனாக இருந்த மோட்டோஃபுனி சிட்டாரா-வின் பதிவியில் இஷின் சிஹானா என்பவர் அமர்த்தப்பட்டுள்ளார். சிஹானா கடந்த 1991 முதல் இந்த ஜப்பானிய பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து வருகிறார். விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக மேலாண்மை போன்றவற்றில் இஷின் சிஹானா நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha price hike on 2022 details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X