ஆர்எக்ஸ் 100 பைக்கில் இவ்ளோ ரகசியங்கள் மறஞ்சிருக்கா! யமஹா செய்த இந்த காரியத்தால்தான் எமன் என பெயர் வந்தது!

யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX 100) பைக்கிற்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக் மிகவும் பிரபலம். இந்தியாவில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் உற்பத்தி கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் 1996ம் ஆண்டு வரை இந்த பைக் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டது.

ஒரு தசாப்தத்திற்கும் மேல், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேல் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மிகவும் கடுமையான உமிழ்வு விதிமுறைகள் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு எமனாக வந்தன. இதன் காரணமாக 1996ம் ஆண்டு இந்த பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, குறைவான உமிழ்வு கொண்ட வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என அந்த சமயத்தில் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆர்எக்ஸ் 100 பைக்கில் இவ்ளோ ரகசியங்கள் மறஞ்சிருக்கா! யமஹா செய்த இந்த காரியத்தால்தான் எமன் என பெயர் வந்தது!

இதன் காரணமாகவே யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் நம்மை விட்டு பிரிய நேரிட்டது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மிகச்சிறந்த 100 சிசி பைக்குகளில் ஒன்றாகும். எனவே வரலாற்றில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கிற்கு எப்போதுமே இடம் உண்டு. யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லாவிட்டாலும் கூட, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த பைக்கிற்கு மிகப்பெரிய மவுசு உள்ளது.

1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையை கொடுத்து கூட இந்த பைக்கை வாங்க பலர் தயாராக உள்ளனர். எனவே யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை தற்போது வைத்திருந்தால், நீங்கள் லட்சாதிபதிதான். இந்த சூழலில், யமஹா ஆர்எக்ஸ்100 பைக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. யமஹா ஆர்எக்ஸ் 100 ரசிகர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் எப்படி இருக்கும்? என்பது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இந்த நேரத்தில் பழைய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் கடமைப்பட்டுள்ளது. தனித்துவமான யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் தகவல் களஞ்சியத்தை தேடி கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி.

ஆர்எக்ஸ் 100 பைக்கை யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் 'டிசைன்' மற்றும் 'டெவலப்' செய்ய, எஸ்கார்ட்ஸ் நிறுவனம் வினியோகம் செய்தது. யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் எடை மிகவும் குறைவு. 'லைட்வெயிட்'-ஆக இருந்த காரணத்தால், 'ஆக்ஸலரேஷன்' பின்னி பெடல் எடுக்கும். இதனால் 'பாக்கெட் ராக்கெட்' எனவும் இந்த பைக் அழைக்கப்பட்டது. யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் எடை வெறும் 98 கிலோ மட்டுமே. இதனால்தான் மின்னல் வேகத்தில் பறக்க முடிகிறது.

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில், 98 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11 பிஹெச்பி பவரையும், 10.39 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. இவை 125 சிசி அல்லது 135 சிசி இன்ஜின்கள் வெளிப்படுத்தும் பவர் அவுட்புட் ஆகும். அதே நேரத்தில் இந்த இன்ஜினுடன் யமஹா நிறுவனம் 4 ஸ்பீடு கியர் பாக்ஸை இணைத்திருந்தது.

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக், கடந்த 1987ம் ஆண்டில், 19,764 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது ஆன் ரோடு விலையாகும். ஆரம்பத்தில் செர்ரி ரெட், பீகாக் ப்ளூ மற்றும் பிளாக் என மூன்று கலர் ஆப்ஷன்களுடன் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் கிடைத்தது. இந்திய திரைத்துறையினரும் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை அதிகமாக விரும்பினர். குறிப்பான தென் இந்தியா சினிமா, யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை மிகவும் நேசித்தது.

தென் இந்தியா சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவோ அல்லது வில்லனோ யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை பயன்படுத்துவது போல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் திரைப்படங்களில் 'ஸ்டண்ட்' காட்சிகளிலும் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் பயன்படுத்தப்பட்டது. ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்குகளை போலவே, ஒரு காலத்தில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கும், அந்தஸ்தை வெளிக்காட்டும் அடையாளமாக கருதப்பட்டது. எனவே வசதி படைத்தவர்கள் பலரும் இந்த பைக்கை வாங்கி ஓட்டினர்.

அத்துடன் ராயல் என்பீல்டு பைக்குகளை போலவே, யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் சைலென்சர் சத்தத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ட்ராக் ரேஸ்களில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மிகவும் பிரபலமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இன்ஜினை ட்யூன் செய்வது, வீல் சைஸை மாற்றுவது என யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் நிறைய பேர் ஏகப்பட்ட மாடிஃபிகேஷன்களையும் செய்தனர்.

விரைவாக நிற்க வேண்டும் என்பதற்காக, இந்த பைக்கில் நிறைய பேர் டிஸ்க் பிரேக்குகளையும் கூட பொருத்தினர். ஆனால் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் நிறைய ஆபத்துக்களும் நிறைந்திருந்தது. யமஹா நிறுவனம் மிகவும் குறைவான எடையில் டிசைன் செய்திருந்ததால், அதிவேகத்தில் செல்லும்போது, ஆர்எக்ஸ் 100 பைக் நிலையாக இருக்காது. அதாவது காற்று பலமாக வீசினால், பைக் நிலை தடுமாறி விடும். எனவே யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை 'எமன்' என வர்ணித்தவர்களும் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் விரைவான 'ஆக்ஸலரேஷன்' இருக்கும் என்பதால், செயின் பறிப்பவர்கள் மத்தியிலும் யமஹா ஆர்எக்ஸ் 100 பிரபலமாக இருந்து வந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு, விரைவாக தப்பிப்பதற்கு பலர் இந்த பைக்கை பயன்படுத்தினர். யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் நிறைய சிறப்பம்சங்கள் இருந்தாலும், அதிக விபத்துக்களுக்கு காரணமாக அமைந்தது போன்ற காரணங்களால் இந்த பைக் மீது நிறைய பேர் எதிர்மறையான விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha rx 100 interesting facts
Story first published: Friday, December 16, 2022, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X