யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா.. ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

யமஹா நிறுவனம் அதன் இரு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா இந்தியாவில் அதன் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியீடு செய்திருக்கின்றது. இ01 மற்றும் நியோ ஆகிய மின்சார ஸ்கூட்டர்களையே வெளியீடு செய்துள்ளது. இரண்டும் நிறுவனத்தின் மிக சிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களாக காட்சியளிக்கின்றன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

சமீப காலமாக நம் நாட்டில் மின் வாகனங்களுக்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சில புதுமுக வாகனங்களும் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் மின்சார இருசக்கர வாகனங்களைக் களமிறக்கி வருகின்றன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

இந்த நிலையிலேயே தனது பன்முக வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பிரபல டூ-வீலர் உற்பத்தியாளர் யமஹா வெளியீடு செய்துள்ளது. சமீபத்திய விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது அவை வெளியீடு செய்யப்பட்டன. ஆகையால், வெகு விரைவில் இவை விற்பனைக்கான அறிமுகத்தையும் இந்திய சந்தையில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

யமஹா இ01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பன்முக சிறப்பு வசதிகளை தாங்கியதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இதில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமாக முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருக்கின்றது. இது சிம் கார்டு மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிக் கொண்டது என்பது கவனித்தகுந்தது.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்தும் மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானதாக உள்ளன. இத்துடன், ரிவர்ஸில் செல்லும் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

மேலும், 125 சிசி திறன் கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான திறன் கொண்டதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இ01 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோ, நார்மல் மற்றும் பவர் ஆகிய மோட்களே அதில் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

யமஹா நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

யமஹா இ01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே நியோ மின்சார ஸ்கூட்டரும் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் வாகனமாக காட்சியளிக்கின்றது. முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடனும், ஸ்மார்ட் கீ, எல்இடி மின் விளக்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும், டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

இத்துடன், அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் விதமாக 27 லிட்டர் ஸ்டோரேஜ் இருக்கைக்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முழுமையான சார்ஜிற்கு 68 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 19.2 Ah, 50.4 V பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 50 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டருக்கு இணையாக செயல்படும்.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

இதற்கேற்ப 2 kW வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களையே யமஹா தற்போது நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. இரண்டும் கூடிய விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறும் என நம்பக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

யமஹா இ01 மற்றும் நியோ இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியீடு! தெரியுமா... ரெண்டும் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருங்க!

யமஹா நிறுவனத்தை போலவே இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹோண்டா, சுஸுகி மற்றும் ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஹீரோ புதிய பிராண்டிலும், ஹோண்டா அதன் ஆக்டிவா மாடலிலும், சுஸுகி அதன் பர்க்மேன் மாடலிலும் மின்சார வாகனங்களை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha unveils neo and e01 electric scooters in india here is full details
Story first published: Thursday, April 14, 2022, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X