வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வந்த யமஹா (Yamaha) நிறுவனத்தின் குறிப்பிட்ட தேர்வு ஆர்15 (R15) பைக்கை இந்தியர்கள் வாங்கியே தீர்ந்துபோக வைத்திருக்கின்றார்கள். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha), ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் (YZF-R15 V4 MotoGP edition) எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த பைக்கின் அனைத்து அலகுகளும் (யூனிட்டுகளும்)தான் தற்போது விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

ஆகையால், இப்பைக்கை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து யமஹா நீக்கியிருக்கின்றது. இத்துடன், பைக்கிற்கான புக்கிங்குகளையும் நிறுவனம் நீக்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தற்போது நிறுவனமும் அதன் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் பைக்கின் விற்பனையை நிறுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

அதேநேரத்தில் எத்தனை யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டன என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. இப்பைக்கை நிறுவனம் பிரீமியம் இருசக்கர வாகன பிரிவின்கீழ் விற்பனைக்கு வழங்கியது. இதற்கு ரூ. 1.82 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழக்கமான மாடலைக் காட்டிலும் சற்று பிரீமியம் வசதிகள் அதிகம் என்பதால் இதன் விலை சற்று கூடுதலானதாக காட்சியளிக்கின்றது.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

அதிகப்படியான அலங்காரங்கள் மற்றும் கவர்ச்சிகரமான உபகரணங்களால் இப்பைக் மெருகேற்றப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, ஒய்இசட்ஆர் எம்1 ஸ்டைல் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மான்ஸ்டர் எனர்ஜி மற்றும் இனியோஸ் லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

இதுதவிர, சிங்கிள் பாட் ஹெட்லைட், ட்வின் எல்இடி டிஆர்எல்கள், கட்டுமஸ்தான ப்யூவல் டேங்க், ஸ்பிளிட் ரக இருக்கைகள் ஆகிய அம்சங்கள் ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், பைக்கில் மிக சிறந்த இயக்கத்திற்காக பிஎஸ்6 தர 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரை 10,000 ஆர்பிஎம்மிலும், 14.2 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இதே மோட்டார்தான் வழக்கமான யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் பைக்கிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வாகனத்திற்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை வழங்கியிருக்கின்றனர். இதனால் தற்போது அது விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியிருக்கின்றது. இந்த பைக்கே விற்பனைக்குக் கிடைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளது.

வாங்கியே தீர்ந்துபோக வைத்த இந்தியர்கள்... இனி இந்தியாவில் இந்த ஆர்15 பைக்கை வாங்கவே முடியாது... பரபரப்பு தகவலை வெளியிட்ட யமஹா!

இந்த நிலை இந்த பைக்கிற்கு ஏற்பட்டாலும் ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மாடலின் வேர்ல்டு ஜிபி 60வது அன்னிவர்சரி சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கை கவர்ச்சிகரமான வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஸ்கீமில் விற்பனைக்குக் யமஹா விற்பனைக்கு வழங்குகின்றது. கூடுதல் சிறப்பு வசதியாக கோல்டன் நிற அலாய் வீல்கள், பிராண்டின் ரேஸ் ட்யூன் ஃபோர்க் எம்பளம், பிளாக் லிவர்கள் மற்றும் ஸ்பெஷல் பேட்ஜ்கள் ஃப்யூவல் டேங்கில் வழங்கப்பட்டிருக்கும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha yzf r15 v4 motogp edition sold out in india here is full details
Story first published: Wednesday, May 11, 2022, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X