மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்!

வெகு நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் யெஸ்டி நிறுவனம் அதன் அட்வென்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. வெகு நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இருசக்கர வாகனமாக இது உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

யெஸ்டி (Yezdi) பிராண்டின் மோட்டார்சைக்கிள் ஒரு வழியாக மீண்டும் மறு பிறவி எடுத்திருக்கின்றது. ஆம், நிறுவனத்தின் புதுமுக மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் இந்த உலகில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த பணிகளையும் நிறுத்திக் கொண்ட யெஸ்டி நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இப்போதும் ரசிக பட்டாளம் இருப்பதை உணர்ந்து மீண்டும் இருசக்கர வாகன உற்பத்தி பணிகளில் களமிறங்கி இருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அண்மையில் நிறுவனம் அதன் 4-ஸ்ட்ரோக் வசதிக் கொண்ட மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களைக் காட்சிப்படுத்தியிருந்தது. ரோட்ஸ்டர் (Roadster), ஸ்கிராம்ப்ளர் (Scrambler) மற்றும் அட்வென்சர் (Adventure) ஆகிய பெயர்கள் கொண்ட வாகனங்களையே நிறுவனம் டீசர் வீடியோ வாயிலாக காட்சிப்படுத்தியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ஆகும்.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையிலேயே யெஸ்டி நிறுவனம் அதன் அட்வென்சர் மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுக விலையாக இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 2.09 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனைக்கான அறிமுகத்தை முன்னிட்டு புக்கிங் பணிகளையும் யெஸ்டி நிறுவனம் நாட்டில் தொடங்கியிருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

விலை விபரம்:

நிறம் வாரியாக இருசக்கர வாகனத்தின் விலை மாறுபட்டுக் காணப்படுகின்றது. அவற்றின் விபரம் கீழே:

ஸ்லிக் சில்வர் (Slick Silver) நிற தேர்விற்கு ரூ. 2.09 லட்சம்,

மேம்போ கருப்பு (Mambo Black) நிறத்திற்கு ரூ. 2.11 லட்சம்,

ரேஞ்ஜர் கேமோ (Ranger Camo) வண்ண தேர்விற்கு ரூ. 2.18 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரும் மதிப்பாகும்.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்:

யெஸ்டி அட்வென்சர் மோட்டார்சைக்கிளில் லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் வசதிக் கொண்ட 334சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி சக்தியை 8,000 ஆர்பிஎம்மிலும், 29.9 என்எம் டார்க் திறனை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 6 ஸ்பீடு வசதி உடைய கியர்பாக்ஸ் உடன் இணைந்தே இத்தகைய திறனை அது வெளியேற்றுகின்றது. தற்போது நிறுவனம் உருவாக்கி இருக்கும் அனைத்து மாடல்களிலும் அதிக திறன் வெளிப்படுத்தும் மோட்டார்சைக்கிளாக இது காட்சியளிக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

சஸ்பென்ஷன், பிரேக்கிங் அம்சம் மற்றும் ஃப்ரேம் பற்றிய விபரம்:

யெஸ்டி அட்வென்சர் மோட்டார்சைக்கிள் இரட்டை கிராடில் ஃப்ரேமால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. திறன் வெளிப்பாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இந்த ஃப்ரேம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருசக்கர வாகனத்தின் முன் பக்கத்திலும், அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்ட 180 மிமீ அளவுள்ள மோனோ-ஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இவையிரண்டும் சேர்ந்து பைக்கிற்கு 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும், 815 மிமீ இருக்கை உயரத்தையும் வழங்குகின்றன. இவற்றுடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு இருசக்கர வாகனத்தின் முன் பக்க வீலில் 320 மிமீ அளவுள்ள ஒற்றை டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இதுபோதாதென்று கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரு முனை வீல்களிலும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, மழை, சாலை மற்றும் ஆஃப்-ரோடு என மூன்று விதமான ரைடிங் மோட்கள் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப மிக சிறப்பாக மோட்டார்சைக்கிள் இயங்க உதவும்.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

வீல்கள் மற்றும் டயர்கள்:

யெஸ்டி அட்வென்சர் மோட்டார்சைக்கிளில் அனைத்து சாலைகளையும் கையாளக் கூடிய டயர் மற்றும் அதற்கு ஏற்ற வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கிளாசியான தோற்றத்தை வழங்கும் பொருட்டு ஸ்போக் கம்பிகள் கொண்ட வீலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. முன் பக்கத்தில் 21 இன்சிலான ரிம்முடன் 90/90 அளவுள்ள டயரும், பின் பக்கத்தில் 17 இன்சிலான ரிம்முடன் 130/80 என்ற அளவுள்ள டயரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

நாங்கள் ஏற்கனவே கூறியதை போல் இந்த மோட்டார்சைக்கிள் ஓர் கிளாசியான தோற்றம் கொண்ட அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளாகும். இதற்கு ஏற்ப வட்ட வடிவ ஹெட்லேம்ப் மற்றும் வால் பகுதி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தோற்றத்தை கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றும் வைகயில் உயரமான விண்ட் ஸ்கிரீன், 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க், பெரிய கிராஷ் குவார்ட் மற்றும் பின் பக்கத்தில் ரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மேலும்,

தனி தனியாக பிரித்து வைக்கப்பட்ட பெரிய இருக்கைகள்,

எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள்

ஆஃப் ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட ஃபூட் பெக்குகள்

யுஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட் (ஏ மற்றும் சி என இரு ரக ஸ்லாட்டுகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன).

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ப்ளூடூத் இணைப்பு வசதியின் வாயிலாக செல்போனுடன் இணைத்துக் கொள்ள முடியும். இத்துடன், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் குறித்த தகவலை வழங்கும் வகையில் வசதியையும் கொண்டிருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

துணைக்கருவிகள் (Accessories)

நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வாகனமாக அட்வென்சர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பயணங்களை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் வகையில் சில துணைக் கருவிகளையும் நிறுவனம் வழங்குகின்றது. அவை:

பக்கவாட்டு பேனியர்கள்,

டாப் பேனியர் பெட்டிகள்,

ஆக்ஸிலரி மின் விளக்குகள்,

ஜெர்ரி கேன்கள், உள்ளிட்டவற்றை யெஸ்டி அறிமுகம் செய்திருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster)

மேலே குறிப்பட்டதைப் போல் நிறுவனம் அட்வென்சர் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து யெஸ்டி ரோட்ஸ்டர் மாடலையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. ஆனால், இது இதன் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில நாட்களில் இப்பைக்கிற்கான விற்பனையை நிறுவனம் தொடங்க இருக்கின்றது.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அட்வென்சர் மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே எஞ்ஜின் மற்றும் ஃப்ரேமே ரோட்ஸ்டர் பைக்கிலும் யெஸ்டி பயன்படுத்தி இருக்கின்றது. ஆனால், உருவத்திலும், அம்சங்களிலும் பல்வேறு மாற்றங்களை அதுக் கொண்டிருக்கின்றது. இதன் விலையும் சற்றே குறைவாக உள்ளது. நிறுவனம், ரூ. 1.98 லட்சம் மற்றும் ரூ. 2.06 என்ற விலையை இப்பைக்கிற்கு நிர்ணயித்துள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

மறு பிறவி எடுத்தது யெஸ்டி... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டு பைக்கிற்கு ஆப்பு வைக்கும் வகையில் அறிமுகம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Yezdi Scrambler)

யெஸ்டி நிறுவனம் மூன்றாவது மாடலாக ஸ்கிராம்ப்ளர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதற்கான விற்பனையும் தொடங்கப்படவில்லை. ரோட்ஸ்டர் பைக்கைப் போன்று இதன் விற்பனையும் மிக விரைவில் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பைக்கிற்கு ரூ. 2.08 லட்சம் தொடங்கி ரூ. 2.10 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பைக்கிள் மாறுபட்ட திறனை வெளிப்படுத்தும் வகையில் அட்வென்சரில் பயன்படுத்தப்பட்ட அதே எஞ்ஜினே இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi adventure launched in india at rs 2 09 lakh with navigation and bluetooth connect features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X