புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! அட.. இது பொங்கல் டைம் ஆச்சே!

வருகிற ஜனவரி 13ஆம் தேதி அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக யெஸ்டி ரோட்கிங் & அட்வென்ச்சர் பைக்குகள் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

ஜாவா பிராண்டை தொடர்ந்து, கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மற்றொரு பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டான யெஸ்டிக்கும் மறுஉயிர் கொடுக்க தயாராகி வருகிறது. இதன்படி முதற்கட்டமாக யெஸ்டி பிராண்டில் இருந்து அட்வென்ச்சர் பைக் ஒன்றும், ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இவை இரண்டும் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின் போது பல முறை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் இந்திய அறிமுகம் இந்த ஜனவரி மாதத்தில் தான் இருக்கும் என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், இவற்றின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தும் டீசர் வீடியோவினை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இந்த வீடியோவில் பைக் இரண்டும் கடற்கரை பகுதியில் இயக்கப்படுவது போன்று காட்டப்பட்டுள்ளன. இந்த புதிய யெஸ்டி பைக்குகள் இயக்குவதற்கு மிகவும் மகிழ்ச்சியானது என்பதை இதைவிட தெளிவாக காட்ட இயலாது. ஜாவா பிராண்ட் உடன் சேர்ந்ததாக இல்லாமல், யெஸ்டி தனியான பிராண்டாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் தற்போதும் இந்த வீடியோவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

ஏனெனில் இந்த வீடியோவில் எந்த இடத்திலும் ஜாவாவின் பெயரை பார்க்க முடியவில்லை. இருப்பினும் யெஸ்டி பைக்குகளை விற்பனை செய்வதற்கு ஜாவா பைக் ஷோரூம்களை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பயன்படுத்தி கொள்ளும் என கூறப்படுகிறது. தற்சமயம் ஜாவா பிராண்டில் இருந்து 3 பைக் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இதனால் யெஸ்டி பைக்குகளின் வருகை ஜாவா பைக்குகளுக்கும் விளம்பரமாக அமையக்கூடும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய யெஸ்டி பைக்குகள் வருகிற ஜன.13ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்த வீடியோவின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு யெஸ்டி பைக்குகளிலும் 334சிசி என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

ஜாவா பெராக்கில் பொருத்தப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30.64 பிஎஸ் மற்றும் 32.74 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இல்லையென்றால், ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் 293சிசி என்ஜின் கூட இவற்றில் பொருத்தப்படலாம். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 27.33 பிஎஸ் மற்றும் 27.02 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்குகிறது.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இவை இரண்டுமே லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான். இவற்றுடன் 6-ஸ்பீடு சதுர கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், யெஸ்டியின் அட்வென்ச்சர் பைக்கும், ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் தோற்றத்தில் முற்றிலுமாக வித்தியாசமானவைகளாக இருக்கும். ஏனெனில் இதைதான் இவற்றின் ஸ்பை படங்களும் வெளிக்காட்டி இருந்தன.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

தோற்றம் மட்டுமின்றி, ரைடிங் நிலைப்பாடு கூட இவற்றில் வித்தியாசப்படுகிறது. பொதுவாக ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டால் குறைந்தப்பட்சம் ரைடிங் நிலைப்பாடாவது ஒரே மாதிரியானதாக இருக்கும். ஆனால் இவற்றில் அவையும் வித்தியாசப்படுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் அறிமுகம் வரையில் காத்திருந்து கருத்தை தெரிவிப்பது நல்லது.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

புதிய இரு யெஸ்டி பைக்குகளிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட உள்ளன. அதேநேரம் அட்வென்ச்சர் மாடலில் பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை எதிர்பார்க்கலாம். ஆனால் ரோட்கிங் என்கிற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் பின்பக்கத்தில் இரட்டை ஷாக்கர்களே பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இவை இரண்டிலும் பொதுவான அம்சங்களாக, எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்-ஸ்போக்டு சக்கரங்கள், இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், இரட்டை-சேனல் ஏபிஎஸ், முழு-எல்இடி விளக்குகள் மற்றும் கொக்கு-வடிவில் முன்பக்க ஃபெண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. அதேபோல் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் ஆனது இவை இரண்டிலும் பொருத்தப்பட உள்ளன. இருப்பினும் அட்வென்ச்சர் பைக்கில் கூடுதலாக நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் முன்பக்க துணை ஃப்ரேமை ஸ்பை படங்களின் அடிப்படையில் எதிர்பார்க்கிறோம்.

புதிய யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இந்த புதிய யெஸ்டி பைக்குகளின் ஆரம்ப விலைகள் ரூ.2 லட்சத்தில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதில் அட்வென்ச்சர் பைக்கிற்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன், கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் பெனெல்லி டிஆர்கே251 போன்றவையும், ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ஹோண்டா சிபி350 ஆர்எஸ், ஜாவா 42 மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 உள்ளிட்டவையும் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi #pongal 2022
English summary
Yezdi New Teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X