ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி பிராண்டு கடந்த 1969ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து கடந்த 1990கள் வரை, இரு சக்கர வாகன சந்தையில், தனது 2 ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்கள் மூலமாக யெஸ்டி ஆதிக்கம் செலுத்தியது. யெஸ்டி மோட்டார்சைக்கிள்களுக்கு தற்போது வரை கூட மிகவும் தீவிரமாக ரசிகர்கள் இருக்கின்றனர். 'லெஜண்ட்' என வர்ணிக்கப்படும் யெஸ்டி 2 ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களை இன்னமும் கூட பலர் வைத்துள்ளனர். ஆனால் அந்த மோட்டார்சைக்கிள்களிடம் இருந்து பிரிவதை அவர்கள் விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக அந்த மோட்டார்சைக்கிள்களை 'ரீஸ்டோர்' செய்து தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் யெஸ்டி பிராண்டு தற்போது 'கம்பேக்' கொடுக்க தயாராகி விட்டது. யெஸ்டி பிராண்டின் முதல் மாடர்ன் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. அவற்றை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அவை மூன்றுமே எங்களை பெரிதும் கவர்ந்தன. ஆம், மூன்றுதான். யெஸ்டி நிறுவனம் தற்போது 3 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றுக்கு யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster), யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Yezdi Scrambler) மற்றும் யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 3 மோட்டார்சைக்கிள்களையும் நாங்கள் விரைவில் டெஸ்ட் ரைடு செய்வோம். ஆனால் அதற்கு முன்னதாக இந்த 3 மோட்டார்சைக்கிள்களும் எப்படி உள்ளன? என்பதை இந்த செய்தியில் பார்த்து விடலாம்.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி ரோட்ஸ்டர்

ரோட்ஸ்டர் என்பது ஸ்ட்ரீட் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இந்த நேக்கட் மெஷின்கள் தங்களது நேக்கட் டிசைன் காரணமாக சிறந்து விளங்கும். 'Fun To Ride' பண்புகளை அவை கொண்டிருக்கும். பழைய யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள், ரோட்ஸ்டர்களாக இருந்தன. பாரம்பரியம் மிக்க பிராண்டு என்பதால், தற்போதை மாடர்ன் யுகத்திற்கு ஏற்ப மற்றொரு ரோட்ஸ்டர் பைக்கை யெஸ்டி அறிமுகம் செய்துள்ளது.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

இந்த பைக்கின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் டெயில் லேம்ப்பும் எல்இடி யூனிட்தான். ஆனால் இன்டிகேட்டர்களில் ஹாலோஜன் பல்புகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் எரிபொருள் டேங்க் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. எரிபொருள் டேங்க்கின் இருபுறமும் யெஸ்டி பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

அத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் முழுவதும் க்ரோம் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஷோரூமில் வாங்கி கொள்ள கூடிய வகையில் ஏராளமான ஆப்ஷனல் வசதிகளையும் யெஸ்டி ரோட்ஸ்டர் பெற்றுள்ளது. இதில், ஹெட்லைட் க்ரில், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சாக்கெட், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இந்த மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 175 மிமீ என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில், 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.3 பிஹெச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கால யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை போல், தற்போதைய ரோட்ஸ்டர் பைக்கும் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பை பெற்றுள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் ஆரம்ப விலை 1,98,142 ரூபாய் ஆகும். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர்

இந்த மோட்டார்சைக்கிள் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்களை பெற்றுள்ளது. யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க் 12.5 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டது. இதில் சிங்கிள் பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும், ரோடு, ரெயின், ஆஃப் ரோடு என மூன்று ஏபிஎஸ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 200 மிமீ ஆகும். இதன் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளது. இதில், யூஎஸ்பி டைப்-சி மற்றும் ரெகுலர் யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்கள் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளிலும் 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 28.7 பிஹெச்பி பவரையும், 28.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ட்வின் எக்ஸாஸ்ட் ஆகியவைதான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை 2,04,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

யெஸ்டி அட்வென்ஜர்

இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பது இதுதான். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அத்துடன் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் வெளியாகியுள்ளன. இந்த மூன்றில் இதுதான் அதிக சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்த மோட்டார்சைக்கிளில் முழு எல்இடி ஹெட்லேம்ப், டெயில்லேம்ப், இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அட்வென்ஜர் ரகத்தை சேர்ந்தது என்பதால், விண்டுஸ்கீரினையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. மேலும் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக Tilt-adjustable Display-வையும் யெஸ்டி அட்வென்ஜர் பெற்றுள்ளது. எல்சிடி திரையை 15 டிகிரிகள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். கேட்பதற்கு இது ஏதோ சாதாரணமான விஷயம் போல் தோன்றலாம். ஆனால் நின்று கொண்டே பைக்கை ஓட்டும்போது, இந்த வசதி உண்மையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவை ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் 15.1 லிட்டர் எரிபொருள் டேங்க்கை பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட 5 லிட்டர் ஜெர்ரி கேன் உடன் இந்த மோட்டார்சைக்கிள் வருகிறது.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரெயின் என 3 மோட்கள் உடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 220 மிமீ. எனவே ஆஃப் ரோடு பயணங்களை நீங்கள் உற்சாகமாக மேற்கொள்ளலாம். இதன் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளிலும் அதே 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.7 பிஹெச்பி பவரையும், 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில், சிங்கிள்-சைடு எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை 2,09,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஐயம் பேக்! நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம்... ஒவ்வொன்னும் எப்படி இருக்கு தெரியுமா?

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஒரே நேரத்தில் 3 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் 'பேக் வித் பேங்' எனும் வகையில் யெஸ்டி மிகப்பெரிய கம்பேக்-கை கொடுத்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்களை ஓட்டி பார்ப்பதற்கு உங்களை போலவே நாங்களும் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளோம். பொங்கல் பண்டிகை சமயத்தில் யெஸ்டி மீண்டும் களமிறங்கியிருப்பது, பண்டிகை கால கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi #pongal 2022
English summary
Yezdi roadster scrambler adventure first look review
Story first published: Wednesday, January 12, 2022, 22:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X