நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

யெஸ்டி அதன் புதிய 3 மோட்டார்சைக்கிள்கள் தொடர்பான டீசர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

ஜாவா பிராண்டை சொந்தமாக கொண்ட கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் மற்றொரு பழமையான பிராண்டான யெஸ்டியையும் மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. யெஸ்டியின் மறுபிரவேசம் வருகிற ஜன.13ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

யெஸ்டி பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள மோட்டார்சைக்கிள்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் புதிய யெஸ்டி பைக்குகளின் டீசர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

இந்த வகையில் தற்போது யெஸ்டி பிராண்டில் இருந்து முதலாவதாக களமிறக்கப்பட உள்ள அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் க்ரூஸர் பைக்குகள் தொடர்பான லேட்டஸ்ட் டீசர் வீடியோ ஒன்று யெஸ்டியின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெறும் 11 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த டீசர் வீடியோவில் முதலாவதாக, முன்னர் காலத்தில் பந்தய களங்களில் பயன்படுத்தப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் ராலி பைக் ஒன்று காட்டப்படுகிறது.

அதன்பின்னர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள யெஸ்டி பைக்குகள் வேகமாக இயங்குவது போன்று காட்டப்படுகிறது. இருள் நிறைந்த நேரத்தில் அவை வேகமாக செல்வதுபோல் காட்டப்பட்டுள்ளதால், அவற்றின் தோற்றத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. வீடியோவின் இறுதியில் இந்த 3 யெஸ்டி பைக்குகளின் அறிமுக தேதி மீண்டும் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

ஏனெனில் ஏற்கனவே சமீபத்தில் வெளியிடப்படப்பட்டு இருந்த டீசர் வீடியோவில் யெஸ்டி பிராண்டின் மறு வருகை தேதி ஜனவரி 13 என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த மூன்று மாடல்களில் க்ரூஸர் பைக் முன்னதாக ஜாவா பிராண்டில் இருந்து அறிமுகமாகக்கூடும் என எதிர்பார்த்தோம். ஏனெனில் சோதனை ஓட்டங்களின்போது, மறைப்புகளை தாண்டி இந்த க்ரூஸர் ரக பைக்கில் காட்சித்தந்திருந்த ஒற்றை எக்ஸாஸ்ட் குழாயின் டிசைன் நமக்கு ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை ஞாபகப்படுத்தி இருந்தன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

ஆனால் இந்த க்ரூஸர் பைக் யெஸ்டி பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த பைக்கில் தாழ்வான இருக்கை அமைப்பு, உயரமான ஹேண்டில்பார், இவற்றின் முனைகளில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

சந்தையில் விற்பனையில் உள்ள மற்ற க்ரூஸர் பைக்குகளை போல் இந்த புதிய யெஸ்டி க்ரூஸர் பைக்கிலும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி நன்கு முன்னோக்கி வழங்கப்பட்டிருந்தது. சஸ்பென்ஷனுக்கு வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், இரட்டை ஷாக்கர்ஸ் பின்பக்கத்திலும் வழங்கப்படலாம். இவற்றுடன் பின் இருக்கை பயணிக்கு முதுகு தலையணை மற்றும் நீண்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்டவற்றையும் கூடுதல் தேர்வுகளாக இந்த பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

இது மட்டுமே முழுவதும் வழக்கமான சாலை-சார்ந்த மோட்டார்சைக்கிளாகும். ஏனெனில் மற்ற இரு யெஸ்டி பைக்குகள் ஆஃப்-ரோட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்கை ஒற்றை-துண்டு இருக்கை, இதற்கேற்ப தட்டையான ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றுடன் மிகவும் எளிமையான தோற்றத்தில் எதிர்பார்க்கிறோம்.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

அட்வென்ச்சர் பைக்கில் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, நீளமான ஹேண்டில்பார், விண்ட்ஸ்க்ரீன், பெட்ரோல் டேங்கில் பொருத்தக்கூடிய ஜெர்ரி மற்றும் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பெட்டகம் பொருத்தும் வசதி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். இந்த அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் யெஸ்டி பைக்குகளில் வயர்-ஸ்போக் சக்கரங்கள் இரட்டை-பயன்பாடு டயர்களுடன் பொருத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் யெஸ்டி பைக்குகளின் அறிமுகம்!! புதிய டீசர் வெளியீடு - அறிமுகம் மிக விரைவில்..!

அதேபோல் இவை இரண்டிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், பின்பக்கத்தில் அட்வென்ச்சர் பைக் மோனோஷாக்கையும், ஸ்க்ராம்ப்ளர் பைக் இரட்டை ஷாக்கர்ஸையும் பெற்றுவரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயமாக சஸ்பென்ஷன் யூனிட்கள்தான் இவை இரண்டிலும் அவற்றின் ஆஃப்-ரோடு திறன்களை வலுச்சேர்ப்பதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi #pongal 2022
English summary
Yezdi teases three upcoming motorcycles video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X