இறக்கத்தில் கூட உடும்பு பிடியாக நிற்கும்! ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செம அப்டேட் வந்தாச்சு!

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனத்தின் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது. இந்த ஸ்கூட்டர்கள் ஏராளமாக விற்பனையாகி வருகின்றன. இந்நிறுவனம் தற்போது தனது ஸ்கூட்டர்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் எப்படி மூவ் ஓஎஸ் என்ற தளத்தைத் தனது ஸ்கூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ளதோ அதே போல ஏத்தர் நிறுவனம் ஏத்தர் ஸ்டேக் என்ற தளத்தைத் தனது ஸ்கூட்டர்களில் இன்ஸ்டால் செய்துள்ளது. இந்த தளத்தை அவ்வப்போது இந்நிறுவனம் அப்டேட் செய்து வரும். அப்படி அப்டேட் செய்யும் போது தனது ஸ்கூட்டர்களுக்கான ஒரு அப்டேட்டையும் சேர்த்து வழங்கும். இப்படியாக ஏத்தர் நிறுவனம் தனது ஏத்தர் ஸ்டேக்கில் புதிய அப்டேட்டாக 5.0 என்ற அப்டேட்டை தனது பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

இறக்கத்தில் கூட உடும்பு பிடியாக நிற்கும்! ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செம அப்டேட் வந்தாச்சு!

இந்த அப்டேட்களை செய்வது மூலம் ஏத்தர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்குகிறது இனி ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் செய்யப்பட்டே விற்பனை செய்யப்படும். ஏற்கனவே இருக்கும் பயனர்கள் இந்த அப்டேட்டை தாங்களாகவே ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இப்படி அப்டேட் செய்வதால் என்னென்ன அம்சங்கள் புதிதாகக் கிடைக்கும் எனக் காணலாம்.

ஆட்டோ ஹோல்டு

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக இந்த அப்டேட்டை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஸ்லோப்பான பகுதிகளில் ஸ்கூட்டர் முன்பின் நகராமல் இருக்க இந்த அப்டேட்டை செய்துள்ளது. தற்போது வரை இப்படியான நேரங்களில் பிரேக்கை பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இந்த அப்டேட்டிற்கு பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக அதை சென்ஸ் செய்து ஸ்லோப்களில் ஸ்கூட்டர் நிறுத்தப்படும் போது தானாக பிரேக்கை பிடித்துக்கொள்ளும். ஆனால் இந்த அம்சம் தேவை என்றால் அதற்கான ஹார்டுவேர் தேவை ஏத்தர் ஜென் 3 மாடல்களில் இந்த ஹார்டுவேர் இருக்கிறது. அவர்கள் அப்டேட் செய்தாலே இந்த அம்சம் கிடைத்துவிடும். முந்தைய மாடல்களில் இது கிடைக்காது.

இறக்கத்தில் கூட உடும்பு பிடியாக நிற்கும்! ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செம அப்டேட் வந்தாச்சு!

புதிய யூசர் இன்டர்ஃபேஸ்

ஏத்தர் நிறுவனம் தனது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் இன்டர்ஃபேஸில் ஏராளமான மாற்றங்களை இந்த அப்டேட்டில் கொண்டு வந்துள்ளது. புதிய அப்டேட்டின் படி ஒவ்வொரு டிரைவ் மோடிலும் எவ்வளவு பவர் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை வழங்குகிறது. ஏத்தர் இதை விங்ஸ் ஆஃப் பவர் என அழைக்கிறது.

அடுத்தாக ஹோம் ஸ்கிரீனில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்கூட்டரின் மோட்டாரை ஸ்டார்ட் செய்யும் முன்பே ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன்களை பயனர்கள் செட்டப் செய்து கொள்ள முடியும். இதேபோக பயனர்கள் எளிதாக ஸ்கிரீனின் பிரைட்னஸ் மற்றும் இன்கம்மிங் கால் நோட்டிபிகேஷன்களை எளிதாக ஒரே கிளிக்கில் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இன்டர்ஃபேஸ்களில் டேய் செய்வதற்குப் பதிலாக இனி ஸ்வைப் செய்தாலே போதும் என்றஆப்ஷன் வந்துவிட்டது. ஸ்வைப் செய்வது தான் எளிது என்பதால் இந்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.

மேப்கள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏத்தர் நிறுவனம் தான்.கூகுள் மேப்களை ஆப்போர்டு நேவிகேஷனாக வழங்குகிறது. தற்போது ஏத்தர் ஸ்டேக் 5.0 அப்டேட் செய்வது மூலம் மேப்களை வெக்டார் மேப்களாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுதும் அது கூகுள் மேப் தான். ஆனால் இதன் இன்டர்ஃபேஸ் ஸ்மார்ட்போன்களில் மேப்களை பயன்படுத்துவது போன்ற அனுபவத்தைத் தரும். இது போக மேப்பில் லைவ் டிராபிக் போன்ற தகவல்களும் இனிமேல் இடம் பெறும். இது போக ரைடர்கள் இனி ரைடர்கள் மேப்பின் பெர்ஸ்பெக்டிவை மாற்றவும், லேஅவுட்களை தேவையான போசிஷனில் திருப்பி கொள்ளவும் முடியும்.

இது தான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது அப்டேட் இதுபோக ஏத்தர் நிறுவனம் தனது சாஃப்வேரில் மேலும் சில புதிய அப்டேட்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரூஸ் கண்ட்ரோல், க்ரால் கண்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ் ரீஜென் ஆகிய அம்சங்கள் தற்போது ஏத்தர் ஸ்கூட்டரில் இல்லை. இந்த அப்டேட்டிலும் இது இடம் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த அப்டேட்களில் இது இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் ஸ்டேக்5.0 அப்டேட் குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather
English summary
Ather announces atherstack 5 0 software update know new features
Story first published: Tuesday, January 10, 2023, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X