ஓலாவுக்கு பயத்தை காட்டுறாங்க! டிசம்பரில் 3 மடங்கிற்கு மேல் அதிகமான ஏத்தர் விற்பனை!

ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 3 மடங்கு அதிகமாகியுள்ளது. டிசம்பர் மாதம் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெங்களூருவை மையமாக கொண்ட நிறுவனம் ஏத்தர். இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக இந்நிறுவனமும் விற்பனையை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான இந்நிறுவனத்தின் விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

ஓலாவுக்கு பயத்தை காட்டுறாங்க! டிசம்பரில் 3 மடங்கிற்கு மேல் அதிகமான ஏத்தர் விற்பனை!

கடந்த டிசம்பர் மாதம் ஏத்தர் நிறுவனம் மொத்தம் 9187 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையை விட 389 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மாதம் ஏத்தர் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவர பல்வேறு ஆஃப்ர்கள், ஃபைனான்ஸிங் ஆப்ஷகள், மற்றும் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை மாதம் முழுவதும் நடத்தியது. இதன் பலனாக இந்நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகமாகியுள்ளது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 14 நகரங்களில் அனுபவ மையங்களை திறந்துள்ளது. நெல்லூர், கரீம் நகர், உடுப்பி, நொய்டா, கோட்டயம், ஷிமோகா ஆகிய பகுதிகளில் தங்கள் ஷோரூம்களை திறந்துள்ளது. இந்த 2023ம் ஆண்டு ஏத்தர் நிறுவனம் தனது விற்பனை மற்றும் தயாரிப்புகளை பல மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அதன் தற்போது மாதம் 8000-9000 ஸ்கூட்டர்கள் வரை தயாரிக்கப்படுகிறது. அதை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாதம் 20 ஆயிரம் ஸ்கூட்டர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளது. ஏத்தர் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓசூர் மாவட்டத்தில் தனது புதிய ஆலையை கட்டுமானம் செய்தது.இந்த ஆலையில் மிக அதிகமாக உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இந்த உற்பத்தியை அதிகமாக்கும் திட்டத்தை வைத்துள்ளது.

இது மட்டுமல்ல ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது விநியோக நெட்வொர்க்கையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது பெரு நகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களில் தனது ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் இந்நிறுவனம் ஆன்லைன் மற்றும் நேரடியாக வாடிக்கையாளரிடமே ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது ஷோரூம்களை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஏத்தர் நிறுவனம் தற்போத 450 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துவருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சா்ர்ஜில் 146 கி.மீ பயணிக்கும் என சான்றழிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஸ்கூட்டர் ட்ரூ ரேஞ்சாக 105 கி.மீ பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 3 விதமான ஆப்ஷன்கள் உள்ளன. வீட்டிலேயே நிரந்தமாக பொருத்தக்கூடிய சார்ஜர், போகும் இடத்திற்கு கையிலேயே எடுத்து செல்லக்கூடிய சார்ஜர், ஏத்தர் கிரிட் சார்ஜர், இதில் ஹோம் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களில் 0-80 சதவீத சார்ஜை 4 மணி நேரம் 30 நிமிடங்களில் ஏற்றிவிடும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் ரூ1.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather record 3 times growth on december sales
Story first published: Monday, January 2, 2023, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X