பல்சர் பைக்குகள் மட்டும் இல்லனா பஜாஜின் நிலைமை அவ்வளவு தான் போல!! சரிவை நோக்கி விற்பனை

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்றால் அதில் பஜாஜ் ஆட்டோவும் ஒன்று எனலாம். புனேவில் தொழிற்சாலையை கொண்டுள்ள இந்த நிறுவனம் நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளதை மறுப்பதற்கு இல்லை.

குறிப்பாக, பட்டி தொட்டி எங்கும் பரவி காணப்படும் பல்சர் பைக்குகள் பஜாஜ் ஆட்டோவின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. இருப்பினும் கடந்த டிசம்பர் மாத விற்பனையை பொறுத்தவரையில், பஜாஜ் ஆட்டோவின் விற்பனை சதவீதம் மிக பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த மாதத்தில் மொத்தம் 2,81,486 பஜாஜ் தயாரிப்பு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3,62,470 வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்திருந்தது.

வாகனங்கள் விற்பனையில் சரிவை நோக்கி பஜாஜ் ஆட்டோ!!

இந்த எண்ணிக்கைகள் பஜாஜ் ஆட்டோவின் 2-சக்கர வாகனங்கள் மற்றும் 3-சக்கர வாகனங்கள் உள்ளடக்கிய கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளாகும். இவ்வாறான ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் 2021 டிசம்பரை காட்டிலும் சுமார் 80,984 வாகனங்களை கடந்த டிசம்பரில் குறைவாக விற்பனை செய்துள்ளது. மற்ற முன்னணி 2-வீலர்ஸ் நிறுவனங்கள் போல் இல்லாமல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டு சந்தையை எந்த அளவிற்கு நம்பியுள்ளதோ, அதே அளவிற்கு வெளிநாட்டு சந்தைகளையும் சார்ந்துள்ளது.

ஆனால் பஜாஜின் 2-வீலர்ஸ் விற்பனை ஆனது உள்நாட்டை பொறுத்தவரையிலும் சரி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் சரி 2021 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பரில் வெகுவாக சரிந்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கமர்ஷியல் வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த 2022 டிசம்பரில் குறைந்துள்ளது என்றாலும், இந்தியாவில் உள்நாட்டு விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதாவது, 2021 டிசம்பரில் 18,386 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அவற்றின் விற்பனை ஆனது கடந்த டிசம்பர் மாதத்தில் 23,030 யூனிட்களாக பதிவாகி உள்ளது.

வாகனங்கள் விற்பனையில் சரிவை நோக்கி பஜாஜ் ஆட்டோ!!

இந்த வகையில் பார்த்தோமேயானால், பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை 25% அதிகரித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் கமர்ஷியல் வாகனங்களின் எண்ணிக்கை 2021 டிசம்பரை காட்டிலும் சுமார் 55% குறைந்துள்ளது. இதனால் கடந்த மாத கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் பஜாஜ் ஆட்டோ கவலை கொண்டிருக்கும். 2-வீலர்கள் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,25,525 இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டில் பஜாஜின் 2-வீலர்கள் விற்பனை குறைந்துள்ளது என்றாலும் பெரிய அளவில் இல்லை. ஏறக்குறைய 2 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே குறைந்துள்ளது. ஏற்கனவே கூறியதுதான், 2-வீலர்களை இந்தியாவில் விற்பனை செய்யும் அதே அளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பஜாஜ் பாக்ஸர் என்றொரு மாடல் உள்ளது. அது நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வாகனங்கள் விற்பனையில் சரிவை நோக்கி பஜாஜ் ஆட்டோ!!

அத்தகைய ஏற்றுமதிக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மோட்டார்சைக்கிளை கொண்டுள்ள பஜாஜ் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 1,21,499 இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதுவே 2021 டிசம்பரில் 1,91,176 இருசக்கர வாகனங்களையே பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. மொத்தாக உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து பார்த்தால், கடந்த டிசம்பரில் மொத்தம் 2,47,024 இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால் 2021 டிசம்பரில் இந்த எண்ணிக்கை ஆனது 3,18,769 ஆக பதிவாகி இருந்தது. மொத்தமாக கடந்த 8 மாதங்களில், அதாவது 2022 ஏப்ரல் - டிசம்பர் வரையில் மொத்தம் 30,67,934 வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது. அதுவே 2021இல் இதே 8 மாத காலக்கட்டத்தில் 33,31,782 வாகனங்களை இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இத்தனைக்கும் அந்த வருடத்தில் கொரோனா வைரஸின் 2வது அலை பரவலினால் மே மாத காலக்கட்டத்தில் தொழிற்சாலை & டீலர்ஷிப்கள் மூடப்பட்டு இருந்தன.

Most Read Articles
English summary
Bajaj auto sales numbers 2022 december
Story first published: Wednesday, January 4, 2023, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X