பஜாஜ் அதோட ஆட்டத்த தொடங்கிருச்சு.. முழுக்க முழுக்க பஜாஜ் கை வண்ணத்தில் உருவாக்கிய யூலூ இ-மொபட்!

யூலூ அதன் புதிய மினி மொபட் ரக இ-பைக்கை வெளியீடு செய்துள்ளது. 2023 கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ நிகழ்ச்சியேலேயே இந்த சம்பவத்தை யூலூ செய்துள்ளது. சிஇஎஸ் என அறியப்படும் இது உலக புகழ்பெற்ற கண்காட்சி ஆகும். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இங்கேயே தனது புதிய மொபட்டை யூலூ காட்சிப்படுத்தி உள்ளது. இது முழுக்க முழுக்க பஜாஜ் நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் ஆகும். யூலுவின் பெரும் பங்கை தன் வசம் பஜாஜ் வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பங்குகளை பஜாஜ் கையகப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே நிறுவனம் தனது சக்கன் ஆலையில் வைத்து வடிவமைத்த இ-மொபட்டை சிஇஎஸ் கண்காட்சியில் தற்போது காட்சிப்படுத்தி இருக்கின்றது.

யூலூ

நகர பயன்பாட்டிற்கு உகந்த இ-வாகனம்

இந்த இருசக்கர வாகனம் நகரங்களின் குறுகிய பயணங்களுக்கு ஏதுவானதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை டெலிவரி வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் சரக்குகளை ஏற்று செல்லும் விதமாக இட வசதி இந்த மின்சார டூவீலரில் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக யூலு நிறுவனம் சீன நிறுவனத்தின் கை வசம் இருந்தது. அப்போது இதன் தயாரிப்பில் பயன்படுத்தியதைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட கருவிகளே இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் யூலு இ-மொபட்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பஜாஜ் கை வண்ணம்

தன்னுடைய தனித்துவமான கை வண்ணத்தை காட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் சில சிறப்பு வசதிகளை பஜாஜ் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நம்முடைய நாட்டின் சூற்றுச் சூழலுக்கு ஏற்ற வாகனமாக இதனை பஜாஜ் வடிவமைத்து இருக்கின்றது. ஆனால், உருவாக்கத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது பற்றிய விபரங்களை பஜாஜ் வெளியிடவில்லை. இது பற்றிய விபரங்கள் பின் நாளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யூலூ

இந்தியாவிற்கு ஏற்ற வாகனம்

இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டிருப்பதால், வெகு விரைவில் இந்தியாவில் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு தானாகவே அனைவரின் மத்தியிலும் எழும்பி இருக்கின்றது. ஆனால், இதற்கான திட்டம் ஏதும் உள்ளதா என்கிற விபரங்களை பஜாஜ் வெளியிடவில்லை. அதேவேளையில், பஜாஜ் நிறுவனம் தற்போது சேத்தக் எனும் சூப்பரான மற்றும் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியர்களின் மின்சார இருசக்கர வாகன தாகத்தை தீர்க்கும் விதமாக இந்த ஒற்றை மின்சார ஸ்கூட்டர் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த இருசக்கர வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் சரியாக 14 வருடங்களுக்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் ஸ்கூட்டர் இதுவே ( சேத்தக்) ஆகும். இந்தியர்களின் கவனத்தை சேத்தக் ஈர்க்க இதுவும் ஓர் காரணமாக உள்ளது.

யூலூ

பஜாஜ் சேத்தக் விபரம்

முன்னதாக பிரீமியம் மற்றும் அர்பன் என இரு விதமான தேர்வுகளில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்தது. ஆனால், இப்போது பிரீமியம் தேர்வு மட்டுமே சென்னையில் விற்பனையில் உள்ளது.இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,52,409 ஆகும். இந்த அதிகபட்ச விலையிலேயே பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்படுகின்றது. இரு விதமான ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. அவை, ஈகோ மற்றும் ஸ்போர்ட் ஆகும்.

இதில், ஈகோ மோடில் பயணித்தால் மட்டுமே உச்சபட்ச ரேஞ்ஜை அதன் பயனர்களால் பெற முடியும். ஓர் ஃபுல் சார்ஜில் 95 கிமீ வரை பஜாஜ் சேத்தக் பயணிக்கும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜிற்காக 3 kWh பேட்டரி பேக் சேத்தக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓர் IP67 தர சான்று லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். இந்த பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 பிஎச்பி மற்றும் 16.2 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 3.8 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் மோட்டாரும், பேட்டரி பேக்கும் தூசி மற்றும் தண்ணீரால் பாதிப்புக்கு ஆளாகத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் பாடிபேனல், இணைப்பு வசதி உள்ளிட்ட எக்கசக்க சிறப்பு வசதிகள் சேத்தக்கில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, இதன் மோட்டாரில் பெல்ட் அல்லது செயின் போன்றவை இணைக்கப்படாமல் நேரடியாக ஸ்டீல் கியருடன் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Bajaj designed yulu e bike revealed at ces 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X