ஆஹா பல்சர் என்எஸ்160-தான் அந்த பைக்கா!! ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் பல்சர் இந்தியாவில் வெளியீடு!

ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் பல்சர் பைக்கை பஜாஜ் நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023இல் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் நிறுவனத்தின் மிக முக்கியமான இருசக்கர வாகன மாடல்களில் பல்சர் என்எஸ் 160 (Bajaj Pulsar NS160)-ம் ஒன்று. இந்த பைக் மாடலிலேயே ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வெர்ஷனை பஜாஜ் நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் அறிமுகம் செய்திருக்கின்றது. யாருமே எதிர்பார்த்திராத வெளியீடு இதுவாகும்.

பல்சர் என்எஸ்160

நம்ம ஆளுங்களுக்கு குஷியாயிடுச்சு

இந்த வெளியீடு பஜாஜ் பல்சர் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது என்றே கூறலாம். விரைவில் இந்திய அரசாங்கம் ஃப்ளெக்ஸி ஃப்யூவில் இயங்கக் கூடிய வாகனங்களை கட்டாயமாக்க இருக்கின்றது. இதன் விளைவாக இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களைக் களமிறக்கும் பணியில் திவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே தங்கள் நிறுவனம் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களைக் களமிறக்க தயாராக இருப்பதை பஜாஜ் இந்த வெளியீட்டின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. மேலும், முதல் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனமாக பல்சர் என்எஸ் 160 களமிறக்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல்சர் என்எஸ்160

கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும்

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கிலேயே ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை இந்திய அரசு கட்டாயமாக்க இருக்கின்றது. இவை மலிவு விலையிலும் விற்பனைக்குக் கிடைக்க உள்ளன. சக்கரைக்காக பயன்படுத்தப்படும் கரும்பு சக்கை போன்ற விவசாய கழிவில் இருந்தே இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகின்றது.

ஆகையால், இது குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. அதுமட்டுமில்லைங்க, இதன் வாயிலாக விவசாயத்தையும் ஊக்குவிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே இந்திய அரசு அதிகப்படியான எத்தனால் சேர்க்கப்பட்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்களைக் கட்டாயமாக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

பல்சர் என்எஸ்160

160 சிசி மோட்டார்

பஜாஜின் இந்த பல்சர் பைக் இ20 ரக பெட்ரோல் தொடங்கி இ85 ரக எரிபொருள் வரை என அனைத்திலும் இயங்கும். இதற்கேற்ப ட்யூன் செய்யப்பட்ட 160.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 16.6 எச்பி வரை திறன் வெளியேற்றும். பல்சர் என்எஸ் 160 ஓர் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்காகும்.

கவர்ச்சிக்காக வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள்

வழக்கமான என்எஸ் 160 போலவே இதுவும் காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்றது. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஆங்குலர் ரக ஹெட்லேம்ப், ஸ்பிளிட் ரக இருக்கைகள், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், டூயல் ஸ்பிளிட் ஸ்டைல் எல்இடி ஹெட்லேம்ப், ஃபைபர் பாஷ் பிளேட், டேப்பர்டு ரியர் பகுதி மற்றும் அலாய் வீல் ஆகியவற்றால் இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

பஜாஜ் நிறுவனம் மட்டுமில்லைங்க இன்னும் சில நிறுவனங்களும் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அந்தவகையில் ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 மாடலையும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடலையும், யமஹா ஃபேஸர் எஃப்இசட் 15 பைக் மாடலையும், சுஸுகி தனது ஜிக்ஸெர் 250 மாடலையும், ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் மாடலையும் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதியும் களமிறக்கியிருக்கு

இதேபோல் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் அதன் வேகன்ஆர் கார் மாடலை ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் கார் மாடலாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் சில வாகன தயாரிப்பாளர்களும் தங்களின் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Read Articles
English summary
Bajaj pulsar ns160 flex fuel unveiled auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X