முன் பணம் செலுத்த காசு இல்லையா?.. கவலையே வேண்டாம்... ஒரு ரூபாகூட கட்டாம எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் பண்ணலாம்!

குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (WardWizard Innovations and Mobility Ltd). இந்த நிறுவனம் ஜாய் இ-பைக் (Joy e-Bike) எனும் பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற 2022 ஆம் ஆண்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரையில் நிறுவனத்தின் எலெகட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 43 ஆயிரத்து 914 யூனிட்டுகள் விற்பனையாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் 2021 ஆம் ஆண்டில் 18,963 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின.

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

விற்பனை வளர்ச்சி அதிகம்

இதைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் பெற்றிருப்பது 2021 131.6 சதவீதம் அதிகம் விற்பனை வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக ஜாய் இ-பைக் சில புதிய இருசக்கர வாகன மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக நிறுவனம் மிஹோஸ் (MIHOS) இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இது ஓர் ஹை ஸ்பீடு ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதற்கான புக்கிங்குகளை ஏற்கும் பணியையே விரைவில் ஜாய் இ-பைக் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆன்லைன் வாயிலாக முன் பதிவுகள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 22) முதலே புக்கிங்குகள் ஏற்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. கையில் ஒரு ரூபாய்கூட இல்லை என்றாலும் இந்த இருசக்கர வாகனத்தை புக் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

புக் பண்ண ஒரு ரூபாகூட தேவையில்ல

ஆமாங்க, பூஜ்ஜியம் கட்டணத்தில் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம் என ஜாய் இ-பைக் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஜாய் இ-பைக் நிறுவனம் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. அப்போது, வெகு விரைவில் இதனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங்கை ஏற்கும் பணியை அது தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

விலை எவ்வளவு?

இருசக்கர வாகனத்தை புக் செய்பவர்களுக்கு, அவர்களின் கைகளுக்கு வாகனம் மார்ச் மாதமே சென்று சேர இருக்கின்றது. இப்போதே டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருப்பதாக ஜாய் இ-பைக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாகவும் புக்கிங்குகள் ஏற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிமுகமாக 1 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

குறைவான நபர்களால் மட்டுமே இந்த விலையில் வாங்க முடியும்

இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதேவேளையில் முதல் ஐந்தாயிரம் நபர்களால் மட்டுமே இந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் இருசக்கர வாகனத்தின் விலையை உயர்த்த நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது. மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாலி டை சைக்ளோ பென்டடைனை (Poly DiCycloPentadiene)க் கொண்டே டிசைன் செய்து வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், இதன் நீடித்து உழைக்கும் தன்மை மீது சந்தேகம் இருந்தால், அதை தூக்கி எறிந்துவிடலாம்.

சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்காங்க

இது கரடு-முரடான சாலைகளால் ஏற்படும் அதிர்வுகளைக்கூட உறிஞ்சுக் கொள்ளும். ஆகையால், இதன் உழைக்கும் காலமும், நெகிழ்வுத் தன்மையும் பல மடங்கு அதிகம். இதுமட்டுமில்லைங்க, பல இன்டெலிஜன்ட் அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் ஜாய் இ-பைக்கின் மிஹோஸ் இருக்கின்றது. கன்னெக்ட் ஆப் செயலி வாயிலாக இணைக்கும் வசதி, ரிமோட் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ் சிஸ்டம், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் மிஹோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்

இந்த ரெட்ரோ ஸ்டைல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74V 40Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீட்டருக்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், மிக சிறந்த வேக திறனுக்காக 1500W மோட்டார் மிஹோஸில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம்

மேலும், வெறும் ஏழே செகண்டுகளில் 0-40 கிமீ வேகத்தை தொட்டுவிடும் திறன் கொண்டதே இந்த மோட்டார். மிஹோஸில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

நிற தேர்வின் விபரங்கள்

மெட்டாலிக் ப்ளூ, சாலிட் பிளாக் குளாஸ்ஸி, சாலிட் யெல்லோ குளாஸ்ஸி மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக ஹைட்ராலிக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், மோனோ ரிவர்ஸிபிள் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை மிஹோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Most Read Articles
English summary
Customers can book mihos e scooter free of cost
Story first published: Friday, January 20, 2023, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X